கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 07, 2022

அறிவுசால் ஔவையார் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் இயல் 7 விடை 8th tamil virivanam arivu saal avvaiyar question answer

 

அறிவுசால் ஔவையார்

கடையேழு வள்ளல்களில் ஒருவன் அதியமான் நெடுமான் அஞ்சி. ஆத்திசூடி தந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனையில் தங்கியிருந்து தமிழ்ப் பணி செய்து வந்தார். காட்டு வளத்தைக் கண்டு மகிழச் சென்ற அதியமான் அரிய வகை கருநெல்லிக்கனி ஒன்றை, தானே பறித்துவந்து ஔவையாருக்குக் கொடுத்தான். அதன் சுவையைப் பாராட்டியபடியே உண்டு மகிழ்ந்தார் ஔவையார். ‘அதை உண்டவர்கள் நோய் நொடியின்றி நீண்டகாலம் வாழ்வார்கள்’, என்று அமைச்சர் கூறக் கேட்டு அதிர்ந்தார் ஔவையார். நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய அதியமான் தான் உண்ணாமல் எனக்குக் கொடுத்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு அவரோ ‘புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது; ஆனால், என்னைப்போன்ற ஒரு அரசன் இறந்து போனால், வேறு ஒருவர் அரசராகிவிடுவார்’, என்று கூறினான். ’ஔவையாரின் நாவில் பிறக்கும் தமிழ் என்றும் நிலைபெற்று வாழும் அதில் அதியமானின் பெயரும் ஒட்டி இருக்கும்; அதுவே தனக்கு மகிழ்ச்சி’, என்று அவன் கூறியதைக் கேட்டு ஔவையார் உள்ளம் மகிழ்ந்தார்.   தமிழ்த்துகள்

          ஒருநாள் அதியமான் முகத்தில் கவலையோடு இருப்பதைக் கண்ட ஔவையார் காரணம் கேட்டார். மன்னன் தொண்டைமான் தன் நாட்டின் மீது படையெடுத்து வர இருப்பதாகச் செய்தி அனுப்பியதைக் கூறினார். யானையானது தன்மீது ஏறிக் குதித்து விளையாடும் சிறுவர்களிடம் பணிந்து அன்பு காட்டும்; அதே யானை போர்க்களத்தில் பகைவர்களைப் பந்தாடும். அதுபோல, புலவர்களிடம் அன்பு காட்டும் அதியமானும் போர்க்களத்தில் பகைவர் படையை வெருண்டு ஓடச் செய்வது வழக்கம். பிறகு ஏன் பயப்படுகிறாய்? என்று அதியமானிடம் கேட்டார். அதற்கு அதியமான்,' ஒவ்வொரு போரின் போதும் எத்தனை உயிரிழப்புகள்? தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தம்பி தங்கைகள் என எத்தனையோ பேரின் கண்ணீர் ஒவ்வொரு போர் வெற்றிக்குப் பின்னாலும் மறைந்து இருக்கிறது’. எனவே, இந்தப் போரைத் தவிர்த்தால் என்ன? என்று கேட்டான். அன்பிற் சிறந்த அதியமானே! உன் உள்ளம் எனக்குப் புரிந்தது. இப்போதே தொண்டைமானிடம் சென்று இந்தப் போர் ஏற்படாதவாறு பேசித் தடுக்கிறேன் என்றார். தன் வீர உணர்வுக்கும் தன் மனதிற்கும் சிறிதும் இழுக்கு ஏற்படாமல் ஔவையார் நடந்துகொள்வார் என்பதில் அதியமானுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.  தமிழ்த்துகள்

          தொண்டைமான் தன் படைத் தலைவரிடம் படைவீரர்களும் போர்க் கருவிகளும் ஆயத்தமாக இருக்கின்றனவா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது ஔவையார் அவைக்குள் நுழைந்தார். சமாதானம் பேசி போரை நிறுத்த வேண்டி தூது வந்த ஔவையே வருக! என்றான் தொண்டைமான்.  வரவேற்பைப் பார்த்தால் என் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தோன்றுகிறதே என்றார் ஔவை. பகைவர் நாட்டிலிருந்து வந்தாலும் தமிழ்ப் புலவரை வரவேற்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தொண்டைமான் கூறினார். தமிழ்த்துகள்

தமிழின்மீது அன்புடையவன் தொண்டைமான் என்பதை அறியும் போது தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே என்றார் ஔவை. போர்க் கருவிகளைப் பார்வையிடுவதற்காக படைக்கலக் கொட்டிலுக்கு அவரைக் கூட்டிச் சென்றான் தொண்டைமான். வில், அம்பு, வேல், ஈட்டி, வாள், கேடயம், மழு என எத்தனை கருவிகள் எத்தனை வகைகள் எத்தனை எண்ணிக்கை! பார்க்கும்போதே வியப்பாக இருக்கிறது. புத்தம் புதிதாக நெய் பூசப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டுக் காட்சியளிக்கின்றது என்று புகழ்ந்தார் ஔவையார். தமிழ்த்துகள்

அதியமானின் படைக்கருவிகள் பற்றிச் சொல்லுங்களேன் என்று தொண்டைமான் கேட்டார். அதியமானின் படைக் கருவிகள் எல்லாம் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன்  நுனி ஒடிந்தும் கூர்மழுங்கியும் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன. இவ்வளவு அழகாக அடுக்கி வைக்கப்படவில்லை என்றார். ஔவையாரின் சொற்கள் தொண்டைமானைக் குழப்பி விட்டன. அதன்மூலம் அதியமான் பல்வேறு போர்களில் பகைவர்களை வெற்றி கொண்டவன். பலம் மிகுந்த அவனோடு இதுவரை போரில் ஈடுபடாத தான் மோதினால் அதிக இழப்பு ஏற்படும் என்பதைக் குறிப்பால் உணர்த்திய ஔவையாரைப் பாராட்டினான் தொண்டைமான். போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும் என்று கூறி விடைபெற்றுச் சென்றார் ஔவையார்.                               தமிழ்த்துகள்

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி.

தமிழ்த்துகள்

Blog Archive