அகராதியில் காண்க
பத்தாம் வகுப்பு
தமிழ்
இயல்- 1 ப.எண்: 23
1. அடவி - காடு
2.அவல் - பள்ளம் ,விளைநிலம், குளம்
3. சுவல் - மேட்டு நிலம், தோள் ,கழுத்து
4. செறு- வயல் , பாத்தி, செய்
5. பழனம்- பொய்கை,மருதநிலம், நீர் நிலச் சேறு,பொதுநிலம்
6.புறவு- காடு , முல்லை நிலம் , புறம்பு , புறா, முல்லைக்கொடி
இயல் -2 ப.எண் :47
7.அகன்சுடர்- உயர்ந்ததீபம்
8. கட்புள் - விழித்திருக்கும் பறவை
9. திருவில் - வானவில்
10. ஆர்கலி- கடல், மழை, பறவை
11. கொடுவாய்- வளைந்த வாய்
இயல்- 3 ப.எண் : 68
12. ஊண்- உணவு
13. ஊன்- இறைச்சி , உடம்பு
14. அண்ணம்- மேல் வாயின் உட்புறம்
15. அன்னம்- சோறு, பறவை
16. திணை- ஒழுக்கம், பிரிவு
17. தினை- ஒருவகை சிறுதானியம்
18. வெள்ளம்-நீர்ப்பெருக்கு
19. வெல்லம் - இனிப்புப்பொருள்
இயல் - 4 ப.எண் :97
20 .அவிர்தல்- விளங்குதல்
21.கங்குல்- இரவு
22.அழல்- நெருப்பு
23. கனலி- நெருப்பு, ஞாயிறு
24. உவா- முழுநிலவு
இயல் -5 ப.எண் :125
25. மன்றல்- திருமணம்
26. அகராதி- அகரமுதலி
27. மருள்- மயக்கம், வியப்பு
28. அடிச்சுவடு- காலடியின் அடையாளம்
29. தூவல்- மழை, இறகு, பேனா, ஓவியம்
இயல்-6 ப.எண் :152
30. தால்- நாக்கு
31. அகவுதல்- அழைத்தல், ஒலித்தல், பாடுதல்
32. அணிமை- அண்மை, அருகு, பக்கம்
33. உழுவை- புலி
34. ஏந்தொழில்- மிகுந்த அழகு
இயல்-7 ப.எண் :181
35. மிரியல்- மிளகு
36. அதசி- சணல்
37. வருத்தலை- பெருகுதல், தொழில்,
சீவனம்
38. துரிஞ்சில்- வௌவால் வகை, சீக்கி மரம்
இயல்-8 ப.எண் :200
39. ஆசுகவி- இன்னசொல் கொண்டு , இன்ன பொருள்படப் பாடுக என்றால் உடனே பாடுவது
40.மதுரகவி - சொற்களையும் பொருட்களையும் ததும்பப் பாடுவது
41.சித்திரகவி -எழுத்தைச் சித்திராக வடிப்பது , நாற்கவிகளூள் ஒன்று
42.வித்தாரகவி - விரித்து பாடப்பெறும் பாட்டு, விரிவாகப் பாடும் நூல்
இயல்- 9 ப.எண் :228
43.குணதரன்- முனிவன், நற்குணமுடையவள்
44.செவ்வை- நேர்மை, மிகுதி, வழி, சரியான நிலை
45. நகல்- நட்பு, படி, ஏளனம், மகிழ்ச்சி
46.பூட்கை- கொள்கை, மனவுறுதி, வலிமை, சிங்கம், யானை