அடிமை வாழ்வை அகற்றிய 'மை'
ஆளும் உரிமை தந்திடும் 'மை'
மக்களாட்சிக்கு அடையாள 'மை'
மனச்சாட்சியை விற்காத 'மை'
எந்த மிரட்டலுக்கும் பணியாத 'மை'
ஏற்றத் தாழ்வு போக்கிடும்'மை'
உரிமைக் குரலாய் ஒலித்திடும்'மை'
வறுமை வாழ்வை ஒழித்திடும் 'மை'
மண்ணின் மைந்தருக்கே வந்த உரி'மை'
மா நிலத்தின் அசைக்க முடியாத வலி'மை'
முடியாட்சிக்கு முடிவு கட்டிய'மை'
மூவாறு நிறைந்தவர்க்கே இந்த உரிமை!
ஒரு வாக்கின் வலிமை!
ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை!
கவிஞர்.மு.முத்துமுருகன்
கல்லூரணி