விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்
இரண்டாம் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2023
பத்தாம் வகுப்பு
தமிழ்
விடைக்குறிப்பு
பகுதி I
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 15x1=15
1.
ஈ. பாடல், கேட்டவர்
2.
அ.கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
3.
ஆ.இறைவனிடம் குலசேகராழ்வார்
4.
அ.அகவற்பா
5.
இ.கருணையன், எலிசபெத்துக்காக
6.
அ.வேற்றுமை உருபு
7.
ஈ.செய்தி 1, 3 ஆகியன சரி
8.
அ.தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன
9.
அ.சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
10.
இ.கற்றல்
11.
ஆ.காற்று
12.
இ.கம்பராமாயணம்
13.
அ.யானை
14.
ஈ.நெடுமை + திரை
15. ஆ.தோழமை
- ஏழமை
பகுதி II
மதிப்பெண்கள் 18
பிரிவு 1
எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளி 4X2=8
21 – கட்டாய வினா
16 பாசவர் - வெற்றிலை விற்போர்
வாசவர் - நறுமணப் பொருள்கள் விற்பவர்
பல்நிணவிலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர்
உமணர் - வெண்மையான உப்பு விற்பவர்
17 தம்பி அழாதே
வா விளையாடலாம்
உனக்குப் பிடித்ததை வாங்கித் தருகிறேன்
உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்
18 மருத்துவரின் அன்பும் நோயாளியின் நம்பிக்கையும்
நோயைக் குணப்படுத்துகிறது
19 உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்து இருக்கிறார்
20 வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பண்பாட்டு நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல் ஆகும்.
இது தமிழர் பண்பாட்டின் மகுடம்.
கட்டாய வினா
21 பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
பிரிவு 2
எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளி 5X2=10
22 வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாக வரும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
23 பொழிந்த
பொழி + த் (ந்) + த்+ அ
பொழி
- பகுதி
த் – சந்தி த் -
ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
24 மூவேந்தர் – மூன்று + வேந்தர் ௩
நாற்றிசை - நான்கு + திசை ௪
முத்தமிழ் - மூன்று + தமிழ் ௩
இருதிணை - இரண்டு + திணை ௨
25 சிரித்துச் சிரித்துப் பேசினார்
26 மடு - மாடு
அ.மடுவில் மாடு மேய்ந்து கொண்டிருந்தது
ஆ.இயற்கை - செயற்கை
இயற்கைக் காடுகளில் செல்ல செயற்கைக் கருவிகள் தேவை
27 அ.காட்சி, காணுதல்
ஆ.நடித்தல், நடிப்பு
28 அ.புயல்
ஆ அமைச்சரவை
பகுதி III
மதிப்பெண்கள் 18
பிரிவு 1
எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி 2X3=6
29 இடம் - சென்னை பற்றிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து
ம.பொ.சி. அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்
பொருள் - தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம். அதாவது உயிரைக்
கொடுத்தேனும் சென்னையைக் காப்போம் என்கிறார்
விளக்கம் - என்ன விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக்
காக்க வேண்டும் என்ற பொருளில் ம.பொ.சி. கூறியது
30 அ.அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தவை
அறம் கூறும் மன்றங்கள்
ஆ.அறம் கூறும் அவையம் பற்றி அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்
என்கிறது புறநானூறு
இ.மதுரையில் இருந்த அவையம், துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது
என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது
31 நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது
தென்னம்பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்
மாங்கன்று தளிர் விட்டது
வாழைக் குருத்து வாடியது
பனைவடலி பசுமையாக இருந்தது
பிரிவு 2
எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி 2X3=6
32 தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின்
தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.
இது பல்வேறு பணிகளுக்கும் பொருந்தும்
மனவலிமை, குடிகாத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்,
விடா முயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சர் ஆவார்
இவ்வைந்தும் பெற்றவர் சிறந்த குடும்பத் தலைவராக வாழ முடியும்
33 இளைப்பாறிச் செல்லுங்கள்
நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்
உரிமையுடன் நுழையுங்கள்
மாமிசத்தின் பொரியலையும் திணைச் சோற்றையும் பெறுவீர்கள்
கட்டாய வினா
34 பெருமாள் திருமொழி
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா!
நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. - குலசேகராழ்வார்.
அல்லது
தேம்பாவணி
நவமணி வடக்க யில்போல்
நல்லறப்
படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு
இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச்
சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து
அழுவ போன்றே. - வீரமாமுனிவர்.
பிரிவு 3
எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி 2X3=6
35 ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
அளவடிகளைப் பெற்று வரும்
இயற்சீர் பயின்று வரும்
மூன்று அடி முதல் எழுதுவோர் மனநிலைக்கு ஏற்ப அடிகள் அமையும்
ஆசிரியத் தளை மிகுதியாக வரும்
ஈற்று அடியில் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்பு
அகவல் ஓசை பெற்று வரும்
36.அணி சுட்டல் - நிரல்நிறை அணி இடம் பெற்றுள்ளது
இலக்கணம் - சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ் வரிசைப்படியே
இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும் விளக்கம் - இல்வாழ்க்கை அன்பும்
அறமும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்
பொருத்தம் - இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக
நிறுத்தி பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி
37 அலகிடுதல்
கருவியும் -
நிரை நிரை கருவிளம்
காலமும் - நேர் நிரை கூவிளம்
செய்கையும் - நேர் நேர் நேர் தேமாங்காய்
செய்யும் -
நேர் நேர் தேமா
அருவினையும் - நிரை
நிரை நேர் கருவிளங்காய்
மாண்ட - நேர் நேர் தேமா
தமைச்சு - நிரைபு பிறப்பு
பிறப்பு என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது
பகுதி 4
மதிப்பெண்கள் 25
38 சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் இலக்கிய
உரை 5
அல்லது
முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்
39 நாட்டு நலப் பணித் திட்டமுகாம் தொடக்க விழா
உரை 5
அல்லது
உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு குறித்து புகார்க் கடிதம்
40 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக 5
41 மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம் 5
42 நிற்க அதற்குத் தக 5
அல்லது
மொழிபெயர்ப்பு
1.பள்ளியில் பயின்றதை மறந்த பிறகு மீதமுள்ளதே
கல்வி – ஆல்பட் ஐன்ஸ்டீன்
2.நாளை தான் ஒவ்வொரு வாரத்தின்
சுறுசுறுப்பான நாள். – ஸ்பானியப் பழமொழி
3.நம் வாழ்வின் இருண்ட காலத்தில்தான் நாம்
ஒளியைக் காண ஒருமுகமாகக் கவனம் செலுத்த வேண்டும். – அரிஸ்டாடில்
4.வெற்றி முடிவும் அல்ல, தோல்வி அழிவும் அல்ல, தொடர்ந்து நம்பிக்கையுடன் செயலாற்றுவதே முக்கியமான ஒன்று. – வின்ஸ்டன்
சர்ச்சில்.
பகுதி 5
மதிப்பெண்கள் 24
43 நெகிழிப்பையின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம்
குறித்து கருத்துரை 8
அல்லது
சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட அறங்களில் உன்னைக் கவர்ந்த
நான்கு அறங்களைக் குறிப்பிட்டு அவை நடைமுறை வாழ்வில் பொருந்துவதை விளக்குக
44 ஸ்டீபன் ஹாக்கிங் 8
அல்லது
அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்
45 மதிப்புரை 8
அல்லது
அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.