கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, February 10, 2023

கவலை குட்டிக்கதை kavalai tamil short story தமிழ் ஜென் கதை

வாழ்க்கையில் பல சோதனைகளை அடைந்த ஒரு தொழிலதிபர் தான் மதிக்கும் ஆன்மீக குருவிடம் சென்று தன் நிலையை புலம்ப ஆரம்பித்தான்.
தொழிலதிபர்: குருவே என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு
எல்லாமே முடிஞ்சு போச்சு. எதுவும் சரியில்ல, மனைவி சரியில்ல, பிள்ளைங்க சரியில்ல, தொழிலில் தோல்வி, வீதியில் நான் நடந்து போகும் போது யாரும் மரியாதை கொடுப்பதில்லை, நான் இனி வாழ்க்கையை எப்படி வாழ்வது குருவே ?
குரு: ஒன்னும் கவலைப்படாதே நான் உனக்கொரு மருந்து கொடுக்கிறேன்.
குரு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அதில் 4 கரண்டி (ஸ்பூன்) உப்பை அள்ளி போட்டு அதை தொழிலதிபரிடம் கொடுத்து குடிக்க சொல்ல .அதை குடித்த தொழிலதிபருக்கு குமட்டல் ஏற்பட்டு அந்த தண்ணீரை கீழே துப்பினார்
தொழிலதிபர்: இவ்வளோ உப்பு போட்டு எப்படி குருவே குடிக்க முடியும். எனக்கு குமட்டுகிறது
குரு: ஓ அப்படியா என்னோடு வா
அருகில் ஒரு குளத்திற்கு கூட்டி சென்று குரு அந்த குளத்தில் 4 கரண்டி (ஸ்பூன்) உப்பை போட்டு பின் தண்ணீரை குடிக்க சொல்கிறார்.
குரு: எப்படி இருக்கு தண்ணீர்?
தொழிலதிபர்: நல்லா இருக்கு குருவே
குரு: இனிப்பா இருக்கா?
தொழிலதிபர்: ஆமா இனிப்பா இருக்கு
குரு: அதெப்படி இனிப்பா இருக்கும்?அதே 4 கரண்டி உப்பை தானே இதுலயும் போட்டேன் அப்புறம் எப்படி இனிக்கும்.
தொழிலதிபர்: என்ன குருவே விளையாட்டு?
அது சின்ன குவளை அதனால் குமட்டியது. இது பெரிய குளம் குருவே அதனால் குமட்டவில்லை.
குரு: உன் மனதை ஏன் குவளையாக வைத்திருக்கிறாய் ? குளம் போல் வைத்துக்கொள். வருகின்ற கவலை என்ற உப்பு கரைந்து விட்டாலும் இனிமை மாறாத குளமாக உன் மனமிருந்தால் ஏன் உனக்கு குமட்டல் வரும்? அப்படி தான் இருக்கும். அப்படி இருந்தால் தான் அது வாழ்க்கை.

தமிழ்த்துகள்

Blog Archive