ஆறாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
20-03-2023 முதல் 24-03-2023
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
இன்னுயிர்
காப்போம் – கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
அணி இலக்கணம்
6.பக்கஎண்
53 - 54
7.கற்றல் விளைவுகள்
T-611 ஒலியியைபு, சந்தம் முதலான
யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு
நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள், கட்டுரைகளின்
நயம் பாராட்டல்.
8.திறன்கள்
இயல்பு நவிற்சி,
உயர்வு நவிற்சி அணிகளை இனம் காணுதல்.
9.நுண்திறன்கள்
அணி நயம்
குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/01/3-3-6th-tamil-ani-ilakkanam-question.html
https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-3-6th-tamil-unit-3-term-3-ilakanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/uyarvu-navirchi-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/iyalbu-navirchi-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_55.html
11.ஆயத்தப்படுத்துதல்
செய்யுள் நயம்
குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
அணி பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
அணி இலக்கணம் பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். இயல்பு
நவிற்சி, உயர்வு நவிற்சி குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். அணி பற்றிக் கூறுதல்.
பா நயம் அறிந்து மகிழ்தல்.
அணி பற்றி மாணவர்கள்
அறிந்துகொள்ளுதல். எழுதும்போதும் பேசும்போதும் அழகுற மொழியைப் பயன்படுத்துதல்.
பிறர் பேச்சு, எழுத்து, பாடலிலுள்ள நயம் அறிதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அணி குறித்து விளக்குதல். படைப்பாற்றல் திறனை வளர்த்தல்.
15.மதிப்பீடு
LOT – அணி என்பதன் பொருள் ..............................
MOT
– உயர்வு நவிற்சி அணி பற்றிக் கூறுக.
HOT – உயர்வு நவிற்சியில் ஒரு தொடர் எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உயர்வு நவிற்சி அணிக்கான எடுத்துக்காட்டுகளைத் தேடித்
தொகுக்க.