ஏழாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
13-03-2023 முதல் 17-03-2023
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
மானுடம்
வெல்லும் – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
பயணம்
6.பக்கஎண்
55 – 60
7.கற்றல் விளைவுகள்
T-710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில
சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
8.திறன்கள்
தன்னம்பிக்கையுடன்
சூழல்களை எதிர்கொள்ளும் வாழ்க்கைத் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
பிறருக்கு
உதவிசெய்து மகிழந்த ஒருவரின் கதை குறித்து அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3_70.html
https://tamilthugal.blogspot.com/2020/06/payanam-7th-tamil-virivaanam-thu.html
https://tamilthugal.blogspot.com/2020/03/3-3-seventh-tamil-payanam-term-3-unit-3.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த கதை
பற்றிக் கூறச்செய்தல்.
உதவிய அனுபவம்
குறித்துக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
பாவண்ணன்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
பயணம் குறித்து விளக்குதல். பயணம் கதையின் தகவல்களை மாணவர்களுடன் பகிர்தல்.
மிதிவண்டி பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல். சிறுவனின் மனநிலையையும் அவனின்
சுழ்நிலையையும் உணரச் செய்தல். மாணவர்களின் மிதிவண்டி ஓட்டிய அனுபவங்களைக்
கேட்டல்.
பயணம் கதை குறித்து
மாணவர்களைப் பேசச் செய்தல். மிதிவண்டியை விட்டுவிட்டு பேருந்தில் ஏன் ஏறினார்
என்பதற்கான விடையைக் கூறச் செய்தல். பிறருக்கு உதவும் பண்போடு வாழப் பழகுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
மிதிவண்டி குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி
மூலம் பொருள் அறிதல். உதவும் பண்புகளைப் பற்றிப் பேசுதல்.
15.மதிப்பீடு
LOT – பயணம் கதையை எழுதியவர் ................................
MOT
– பயணம் கதையைச் சுருக்கி எழுதுக.
HOT – நீ உன் பொருளை பிறருக்குக் கொடுப்பதாக நினைத்து ஒரு கதை
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீ சென்று வந்த சுற்றுலா குறித்து எழுதுக.
மிதிவண்டி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.