கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, March 05, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு மார்ச் 2024 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

  sslc 10th tamil third revision exam question answer key virudhunagar district 2024

PDF Link கீழே👇

பத்தாம் வகுப்பு

தமிழ்

மூன்றாம் திருப்புதல் தேர்வு மார்ச் 2024

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                 15x1=15                தமிழ்த்துகள்

1.     ஆ.சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

2.    இ.இடையறாது அறப்பணி செய்தலை

3.    அ.கால்          

4.    ஈ.நெறியோடு நின்று காவல் காப்பவர்     தமிழ்த்துகள்

5.    இ.குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

6.    அ.வேற்றுமை உருபு

7.    ஆ.மணவை முஸ்தபா

8.    இ.மூன்று தமிழ்த்துகள்

9.    அ.அகவற்பா  

10.  ஈ. செய்தி 1, 3 ஆகியன சரி

11.   ஆ.தேவநேயப் பாவாணர்

12.  இ.செய்குதம்பிப் பாவலர்தமிழ்த்துகள்

13.  ஈ.அருளை - மருளை

14.  அ.உயிருக்கு

15.  ஆ.நீதிவெண்பா

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க       4x2=8

16  

அ. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டவர் யார்?

ஆ. மொழிபெயர்ப்பு எதற்கு உதவுகிறது?

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

17

1.”இளம் பயிர் வளர்ந்து நெல் மணியாய் முதிர்வதற்கு முன் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்தது போல்” என்பது உவமையின் பொருள்.

2.அதுபோல் கருணையன் வளர்ந்து ஆளாகும் முன்னரே, தாயை இழந்து வாடுகிறான் என்பதை உணர்த்த இவ்வுவமை எடுத்தாளப்பட்டுள்ளது.  தமிழ்த்துகள்

18

1.        பெருங்கதை

2.       சீவக சிந்தாமணி

3.       கம்பராமாயணம்

4.       வில்லிபாரதம்

19 ·    

1.நல்ல சொற்களை இனிமையாக பேசுதல்

2.முகமலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்

3.‘வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்றல்

4.விருந்தினர் முன் மனம் மகிழும்படி பேசுதல்

தமிழ்த்துகள்

20

வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பி விடுவது மடை.

உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம்.

இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.

இது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை.

உரைநடைப் பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு.

கட்டாய வினா

21 பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல் தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10

22 அ. உழுவை          – புலி, ஒருவகை மீன்

ஆ. ஆசுகவி   - கொடுக்கப்பட்ட தலைப்பு அல்லது பொருளில் உடனே இயற்றப்படும் செய்யுள், அத்தகைய செய்யுளைப் பாடும் கவிஞன்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

23

          மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் உள்ளது? - அறியா வினா

          மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? – ஐயவினா

24. பதிந்து - பதி + த் (ந்) + த் + உ

பதி - பகுதி

த் - சந்தி, ' ந் ' ஆனது விகாரம்

த் -  இறந்தகால இடைநிலை

உ -  வினையெச்ச விகுதி

25 அ. சுழல்காற்று               ஆ. பக்தி இலக்கியம்

தமிழ்த்துகள்

26 ·    அ.மழைமுகம் காணாப் பயிர்போல –

தாயைக் காணாத குழந்தை மழைமுகம் காணாப் பயிர்போல எதிர்பார்த்துக் காத்திருந்தது.

ஆ.கண்ணினைக் காக்கும் இமை போல –

பெற்றோர் தன் குழந்தைகளைக் கண்ணினைக் காக்கும் இமை போலக் காத்தனர்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 தமிழ்த்துகள்

27 வஞ்சிப்பாவிற்குத் தூங்கல் ஓசையும் கலிப்பாவுக்குத் துள்ளல் ஓசையும் உரியன.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

28 அ. புதுவை                            ஆ. புதுகை

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6

29 அ.இயந்திர மனிதன்.

ஆ.வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு.              தமிழ்த்துகள்

இ.வரவேற்பாளராக, பணியாளராக

30

1.        நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.

2.       தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.

3.       மாங்கன்று தளிர்விட்டது.

4.       வாழைக்குருத்து மழையின்றி வாடியது.

5.       பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

31 மயிலாட்டம் பற்றிக் கூறுக.

மயிலாட்டம்

நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவது மயிலாட்டம்.

கரகாட்டம் பற்றி நீ அறிவன யாவை ?

கரகாட்டம்

1.பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம்.

2.கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்து, தாளத்திற்கு ஏற்ப ஆடுவது கரகாட்டம் .

3.இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.    தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6

32

1.     பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குலேச பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.

2.    கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் தாம் இயற்றிய கவிதையை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் அவரை அவமதித்தான்.

3.    மனம் வருந்தி இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்.

4.    மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வட திரு ஆலவாயில் சென்று தங்கினார்.

5.    இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக் காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.

6.    இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

33     1.எங்கள் ஊர் அரண்மனை மிகவும் அழுக்காகவும் சுவர்களில் ஒட்டடை நிறைந்ததாகவும் காணப்பட்டது.

2.எனவே நானும் என் நண்பர்களும் அதைச் சுத்தமாக வைக்க எண்ணினோம்.

3.வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அறைகளைச் சுத்தம் செய்தோம்.

4.சுவர்களில் இருந்த அழுக்கைப் போக்க குவளையில் சாயம் கொண்டு வந்து சுவரினை அழகுபடுத்தினோம்.

5.கந்தைத்துணியை எடுத்து வந்து நாங்கள் அனைவரும் அறைகளில் உள்ள சன்னல்களையும் கதவுகளையும் சுத்தமாகத் துடைத்தோம்.

6.கட்டைத்தூரிகையை வைத்து சுவர்களில் உள்ள ஒட்டடைகளை அடித்து சுத்தம் செய்தோம்.

7.எங்கள் பணியினைக் கண்ட ஊர்த்தலைவர் எங்களைப் பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.

கட்டாய வினா

34 அ. தேம்பாவணி

நவமணி வடக்க யில்போல்

          நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

          தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

          துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

          ஒலித்து அழுவ போன்றே.                                 - வீரமாமுனிவர்.

அல்லது

ஆ. காசிக்காண்டம்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

          வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

          எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

          போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

          ஒழுக்கமும் வழிபடும் பண்பே.                                     - அதிவீரராம பாண்டியர்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6  தமிழ்த்துகள்

35 1.கண்ணே கண்ணுறங்கு         -     விளித்தொடர்

2.காலையில் நீ எழும்பு                  -    வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

3.மாமழை பெய்கையிலே              -     உரிச்சொற்றொடர்

4.மாம்பூவே கண்ணுறங்கு              -    விளித்தொடர்

5.பாடினேன் தாலாட்டு                  -    வினைமுற்றுத்தொடர்

6.ஆடி ஆடி                                  -    அடுக்குத்தொடர்

7.ஓய்ந்துறங்கு                              -    வினையெச்சத்தொடர்

தமிழ்த்துகள்

36. இலக்கணம் –

இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின்மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.             தன் + குறிப்பு + ஏற்றம் + அணி – தற்குறிப்பேற்ற அணி.

எடுத்துக்காட்டு –

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம் –

சிலப்பதிகாரத்தில் கோவலன் மதுரைக்குள் நுழையும்போது மதில் மேல் இருந்த கொடி கையசைத்து அவனை வரவேண்டாம் எனக் கூறியது.

இயல்பாகக் காற்றில் அசைந்த கொடியை, கோவலனுக்குத் தீங்கு நேரும் என்பதால் வரவேண்டாம் எனக் கூறியதாகத் தன் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார் இளங்கோவடிகள்.

 தமிழ்த்துகள்

37 அலகிடுதல்

சீர்

அசை

வாய்பாடு

இகழ்ந்/தெள்/ளா

நிரை நேர் நேர்

புளிமாங்காய்

தீ/வா/ரைக்

நேர் நேர் நேர்

தேமாங்காய்

கா/ணின்

நேர் நேர்

தேமா

மகிழ்ந்/துள்/ளம்

நிரை நேர் நேர்

புளிமாங்காய்

உள்/ளுள்

நேர் நேர்

தேமா

உவப்/ப

நிரை நேர்

புளிமா

துடைத்/து

நிரைபு

பிறப்பு

பிறப்பு என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க      5x5=25

38 அ. மருவூர்ப்பாக்க வணிக வீதிகளும் இன்றைய அங்காடிகளும்                                      5

அல்லது

ஆ. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

39 அரசுப் பொருட்காட்சி பற்றி நண்பனுக்குக் கடிதம்                                  5

அல்லது

உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குப் புகார்க் கடிதம்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக                                                             5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

41 தன்விவரப் படிவம்                                                                                      5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

42 நிற்க அதற்குத் தக

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                                          5

அல்லது

மொழிபெயர்ப்பு

மதிப்பிற்குரிய கன்னியரே காளையரே நான் இளங்கோவன் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ்க் கலாச்சாரம் குறித்து சில வார்த்தைகள் கூற இங்கு வந்துள்ளேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் கலாச்சாரம் நாகரிகம் சிறப்பாக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. தமிழர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்ததோடு வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழ்க்கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற உலகளாவிய தமிழர்களின் வாழ்க்கை முறைக்கு அடிப்படை ஆகும். நம் கலாச்சாரம் மிகப்பழைமையானதாக இருப்பினும் இன்றுவரை மாறாது நிலைத்திருக்கிறது. நாம் நம் கலாச்சாரத்தை நினைத்து பெருமை கொள்வோம். அனைவருக்கும் நன்றி.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க     5x8=24

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

43 அ. செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்                                  8

அல்லது

ஆ. மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44 அ.மங்கையராய்ப் பிறப்பதற்கே                                                                      8

அல்லது

ஆ.கோபல்லபுரத்து மக்கள்

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

45 அ. கல்பனாசாவ்லா                                                                                    8

அல்லது

ஆ. தொடக்கவிழா வாழ்த்துரை

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 PDF LINK

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive