கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 04, 2024

விவேகானந்தரும் பாரதியாரும் தமிழ்ப் பேச்சு, கட்டுரை

 Vivekananda and Bharatiyar Tamil Speech, Essay

விவேகானந்தரும் பாரதியாரும்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

அன்னைத் தமிழே அரியாசனமே என்னை இங்குப் பேச வைத்த ஏந்திழையே

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் ஒளி விளக்கே

உன்னை வணங்கித் தாள் பணிகிறேன் அருள்வாய் தாயே!

இந்தியத் திருநாட்டின் இறையாண்மை என்னவென்று உலகுக்குச் சொன்னவர் நரேந்திரன் என்கிற விவேகானந்தர்.

பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர் என்று ஒற்றுமைக் குரல் எழுப்பியவர் சுப்பிரமணியன் என்கிற பாரதி. வடக்கில் இமயம் முதல் தெற்கில் குமரி வரை பரந்து கிடக்கும் இந்தியத் தாயின் இரு வேறு துருவங்களில் பிறந்தாலும் சிந்தனை ஒன்றாய் வாழ்ந்தவர்கள்தான் விவேகானந்தரும் பாரதியாரும்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

எனக்கு ஒரு வினாடியில் மாதாவினது மெய்த் தன்மையையும் தொண்டின் தன்மையையும் துறவியின் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குறுமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன் என்று கூறி சுவதேச கீதங்கள் என்ற நூலைச் சமர்ப்பித்தார் பாரதியார்.

என் அன்பிற்குரிய சகோதரர்களே சகோதரிகளே என்ற சுவாமி விவேகானந்தரின் மந்திரச் சொல்லால் ஈர்க்கப்பட்டு சீடரானவர் தான் சகோதரி நிவேதிதா தேவி.

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வமன்றோ? மதி கெட்டீரே !

விண்ணுக்குப் பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர், கருணை வெள்ளம் என்பீர் பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கை இல்லை' என்று பாடினார் பாரதியார்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

பன்மொழிப் புலமை பெற்றவர் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தரின் ஆங்கிலப் பேச்சைக் கேட்ட அமெரிக்கப் பத்திரிகைகள் ஸ்பீக் லைக் எ வெப் ஸ்டார் என்று புகழாரம் சூட்டின. பிரான்ஸ் நாட்டில் பிரஞ்சு மொழியிலேயே உரையாற்றினார் விவேகானந்தர். அவருக்கு சமஸ்கிருதமும் தெரியும். தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, அரபி போன்ற பல்வேறு மொழிகள் அறிந்தவர் பாரதியார். தாகூர் வங்க மொழியில் எழுதிய ஏழு கதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர் அவர். எனினும் தமிழின்பால் கொண்ட பேரன்பால் அதன் சிறப்பை உணர்ந்து யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார்.

பிறமொழி வழிக் கல்வியைச் சாடியவர் விவேகானந்தர். பாட்டனார் பைத்தியக்காரன்; ஆசிரியர் நயவஞ்சகர்: சாஸ்திரம் பொய்க் குவியல் இத்தகைய எதிர்மறைக் கருத்துகளைப் புகுத்திடும் பிற மொழி வழிக் கல்வி சாவை விட மேலானது என்றார் விவேகானந்தர்.

செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன என்று பிறமொழி வழிக் கல்வி பயில்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார் பாரதியார்.

துன்பங்களை ஏற்றுக் கொள்வதற்காகவே நான் மீண்டும் பிறக்க வேண்டும். உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும் சேர்ந்த ஒட்டுமொத்தமான மனித குலமே கடவுள். எல்லா ஜாதியின் எல்லா மதத்தின் எல்லா நாட்டின் துன்பங்களையும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார் சுவாமி விவேகானந்தர்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

உணவில்லை என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அவர் கூறிய போது லோக மாதாவிடம் சென்று கேள் என்றார். விவேக வைராக்கியத்தைக் கொடு ஞானமும் பக்தியும் கொடு என்று வேண்டினாரே தவிர என் வயிற்றுக்குச் சோறு கொடு என்று ஒருபோதும் வேண்டியதில்லை.

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன் மண் மீதுள்ள மக்கள் பறவைகள் விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள் யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவதேவா என்று பாடுகிறார் பாரதியார்.

மனைவி செல்லம்மாளுடனும் குழந்தைகளுடனும் வறுமையில் வாடிய போதும் அவர் சோறு கொடு என்று கடவுளிடம் கேட்கவில்லை.

எல்லா துன்பங்களுக்கும் மூல காரணமே பயம்தான் என்றார் விவேகானந்தர். புதிய ஆத்திசூடியில் அச்சம் தவிர் என்று முழங்குகிறார் பாரதியார்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

பிற உயிர்களுக்காகத் துடிக்கின்ற துறவியாக விவேகானந்தர் இருந்தார். ஒருமுறை வேலூர் மடத்தில் தங்கி இருந்த போது எனக்கு சரியாக தூக்கம்இல்லை, மக்கள் பலர் எங்கோ துன்பப்படுகிறார்கள் என்று கூறினார்.

மறுநாள் காலை செய்தித்தாள்களில் பிஜுதீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலர் மாண்டதாக செய்திகள் வந்தன. பிறருக்காக துடிக்கின்ற விவேகானந்தரின் இதயம் சீஸ்மோகிராப்பாகச் செயல்பட்டது.

உணவு சமைப்பதற்காக வைத்திருந்த அரிசியை எடுத்து காக்கைகளுக்கும் குருவிகளுக்கும் போட்டுவிட்டு

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்

என்று ஆனந்தக் கூத்தாடினான் பாரதி.

யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற பெருந்தமிழ்க் கிழவன் பூங்குன்றனின் கருத்தில் சிறிதும் பிறழாதவன் பாரதி.

மண்படு மரபில் மானுடச் சாதி

பண்படும் அதனைப் பண்பாடு என்க என்ற கவியரசர் கண்ணதாசனின் சிந்தனைக்குக் கருப்பொருள் பாரதி.

உனக்கு நீயே வழிகாட்டி என்றார் சுவாமி விவேகானந்தர்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

உன்னை நீ அறிய வேண்டும் என்று சொன்னார் தத்துவ மேதை சாக்ரடீஸ். தன்னை அறிந்தவன்தான் பாரதி; தனக்கென்று எதையும் சேர்க்காதவன்தான் பாரதி.

காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்றார் பட்டினத்தார். பாரதி இந்த உலக வாழ்வை முடித்துச் செல்லும்போது உடன் வந்தவர்களின் எண்ணிக்கையை விட பாரதியின் பிணத்தின் மீது மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம்.

தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்த்தல் இவை நான்கும் ஒரு மனிதனுக்கு அவசியமானது என்றார் சுவாமி விவேகானந்தர். துறவியாக இருப்பதால் என்ன பயன்? என்று கேட்ட அஜாத சத்ரு என்ற மன்னனுக்கு என் சிந்தனைக்கு ஏற்பத்தான் நான் நடப்பேன். ஜாதி, மதம், சமுதாய விலங்கு அற்ற சுதந்திர மனிதன் நான் என்று பதில் கொடுத்தார் புத்தர்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

மனிதர்கள் பிரார்த்தனை செய்வதில்லை; பிச்சை எடுக்கிறார்கள் என்றார் பெர்னாட்ஷா. பிரார்த்தனை செய்வது என்பது தனக்காகக் கேட்பதில்லை இவ்வுலகம் மகிழ்வுற்று வாழ வேண்டும் என்று கேட்பது ஆகும் என்று விளக்கம் தந்தார்.

ஞானாகாசத்து நடுவே நின்று நான்

பூ மண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக

துன்பமும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

இன்புற்று வாழ்க என்பேன் என்று விநாயகர் முன் வேண்டுகிறார் பாரதி.

மனிதனிலே இறைவனைக் காண வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். உடல் உழைப்பைச் செய்பவன் சூத்திரன். அவனே சொந்தத் தொழில் செய்து விட்டால் வைசியன். கண்ணெதிரே காணும் கொடுமைகளைக் களை எடுக்கக் களத்தில் நின்றால் அவனே சத்ரியன்.

வேதம், அறிவு நூல் கற்று பேருண்மை அறிந்தவனாக அவன் மாறிவிட்டால் பிராமணன் என்று விளக்கம் கொடுத்தார். பிராமணன் தன் நெறியில் பிறழ்ந்து விட்டால் அவன் தான் சூத்திரன். இதில் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர் யார்? என்று கேட்டார் சுவாமி விவேகானந்தர்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி என்று சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரம் அல்ல: சதி என்று கண்டோம்,

என்று கொதித்து எழுந்தான் முண்டாசுக் கவி பாரதி.

இந்தியத் தாயின் ஆளுமை நிறைந்த பிள்ளைகள் பாரதியும் விவேகானந்தரும். அவர்களின் எண்ணத்திலும் செயலிலும் எப்போதும் ஒற்றுமை இருந்திருக்கிறது.

11-12-1882 இல் பிறந்த பாரதி தம் 39 ஆம் வயதில் 09-12-1921 இல் இறந்தார்.

12-01-1863 இல் பிறந்த விவேகானந்தர் தம் 39 ஆம் வயதில் 04-07-1902 இல் இறந்தார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

என்கிறது உலகப் பொதுமறை. வாலறிவனாக வாழ்ந்த விவேகானந்தரையும் பாரதியையும் போற்றுவோம் அவர்கள் பிறந்த இம்மண்ணில் நாமும் பிறந்தோம் என்பதில் பெருமை கொள்வோம்!

  தமிழ்த்துகள்

கவிஞர் கல்லூரணி முத்து முருகன் எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,பி.எட்., அலைபேசி -9443323199

Blog Archive