கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 02, 2024

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளி ஆய்வின் பங்கு

 Role of space exploration in environmental protection

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளி ஆய்வின் பங்கு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

முத்துக்கடல் பதித்து மூன்று நெறி வளர்த்து கத்துங் கடல் மீது கலங்களில் விளையாடும் தென்பாண்டி மண்டலமே தமிழ்த்துகள்

கூத்தன் இருந்தான்; குறளரசன் அங்கிருந்தான்; வார்த்தைத் தமிழுக்கு வணங்காத கம்பன் இருந்தான்; நக்கீரன், நன்னாகன், நப்பசலை, ஒக்கூர் மாசாத்தி, ஒண்சாத்தன், சிலம்பெடுத்த தக்கோன் என முத்தமிழ் வளர்த்த மண்ணில் யாப்பிலாப் பாடலேனும் யார் தரும் கவிதையேனும் மா பலா போல் மடியில் வாங்கி வளர்த்த மூப்பிலாத் தமிழை மூச்சாய்க் கொண்ட என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே: முப்பாலால் குழைத்த முத்தமிழ்ச் சொல்லெடுத்து வணங்குகிறேன்! தமிழ்த்துகள்

பூமிப்பந்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் மானிட இனத்தின் ஒரு துகளாய் உங்கள் முன்னே நிற்கிறேன். ஒன்பது கோள்கள் இருந்தும் உயிர்க்கோளமாய் இருப்பதால்தான் இங்கு நாம் இருக்கிறோம். பூமிப்பந்தை ஒட்டி முளைத்த புல்வெளிகள் உயர்ந்த மரங்கள் எல்லாம் நமக்கு மட்டுமே சொந்தம் என்று கொண்டாடி மகிழ்கிறோம். பூமிப்பந்து பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான ஒரு சூழல் மண்டலம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழ்த்துகள்

காட்டை அழித்து நாட்டை உருவாக்கினான். வயல்களை அழித்து கான்கிரீட் வீடுகள் ஆக்கிவிட்டான். வானளாவ உயர்ந்திருந்த மரங்களை அழித்து தொழிற்சாலைகள் உருவாக்கி விட்டான். உயிர்வளி உறிஞ்சி கரிவளி உமிழப் பழகி விட்டான். பசுமை இல்ல விளைவு தோன்றியதும் ஓசோனில் ஓட்டை ஓட்டை என்று இப்போது கதறுகிறான்: மரங்கள் இயற்கையின் வரங்கள். உண்மைதான்,

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்- இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனிற் சிந்தனை ஒன்றுடையாள் - என்றார் மகாகவி பாரதியார். இன்று இந்தியத் தாயோ 140 கோடி முகமுடையாள் ஆகி விழி பிதுங்கி நிற்கிறாள். உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டிவிட்டது. தமிழ்த்துகள்

புதை படிம எரிபொருள் வெளியேறுவதைக் கண்காணிக்க ஒவ்வொரு நாடும் தன் பங்குக்குச் செயற்கைக்கோளை அனுப்பி வருகிறது. 1961 இல் யூரிக்காரின் உயிர்ப்பொருளாக விண்வெளியில் வலம் வந்தார். 1965இல் அலெக்சி லியோனோவ் விண்வெளியில் நடைபயணம் சென்றார். 1967இல் நிலவில் அப்பல்லோ இறங்கியது. 1971 இல் முதல் விண்வெளி நிலையம் சல்யூட்! ஏற்படுத்தப்பட்டது. இப்படி படிப்படியாக ஒவ்வொரு நாடும் தன் பங்குக்கு இந்தப் பால் வெளி அண்டத்தில் தங்கள் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தப் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்த்துகள்

ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பான யூ.என்.இ.பி 2016 இல் கரிம உமிழ்வு அறிக்கை வெளியிட்டது. பசுமைக் குடில் வாயுக்களைக் கண்காணிப்பதற்கு ஐரோப்பியத் துணைக் கண்டம் சென்டினல் 5 என்ற செயற்கைக்கோளை ஏவியுள்ளது. தமிழ்த்துகள்

ஆறறிவு கொண்ட மனிதனால் நேரடியாக பார்க்க முடியாத காலநிலை மாற்றங்கள், பல்லுயிர்ப் பெருக்கம், காடுகளின் பெருக்கம் மற்றும் அழிவு காற்றில் உள்ள கார்பன் மதிப்பீடு இவற்றையெல்லாம் செயற்கைக்கோள்கள் மனிதனுக்குச் சத்தம் இல்லாமல் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இன்றைய உலகை மாசுபடுத்தக் காரணமான மனிதன் நாளைய உலகம் பசுமையாக இருக்க வேண்டும் என்பதில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளான். தமிழ்த்துகள்

பாலித்தீன் பைகள் பயன்பாட்டைக் குறைத்து விட்டான்; தொழிற்சாலைகளில் வெளிவரும் புகைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து விட்டது; வடிகட்டிகள் அமைக்கப்பட்டு காற்றில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. தமிழ்த்துகள்

ஊர் கூடித் தேர் இழுத்தால் தானே நிலைக்குச் சேரும். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டியது அவசியம். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்று கேட்ட பாரதி கூட பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும் என்று கேட்டார் அப்போதுதான் தென்றல் வந்து தீண்டும் என்பது புலவரான அவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் தற்போது 20 செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நவீன அறிவியலின் கையில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. ஜாக்ஸா-என்ற ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா என்ற அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் என ஒவ்வொரு நாடும் பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்கள் அமைத்து செயற்கைக்கோள்களை அனுப்பி நமக்குச் சரியான அறிக்கைகளைத் தந்து கொண்டிருக்கின்றன. தமிழ்த்துகள்

2015இல் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது 75 விழுக்காடு பசுமைக் குடில் விளைவு ஏற்படுவதற்கு புதை படிம எரிபொருள் தான் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. எனவே மாற்று எரிபொருளைப் பயன்படுத்த அனைத்து நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. பூமியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி கூடிய நிலையில் 2040-ல் அது 1.5 டிகிரி உயரும் அபாயம் உள்ளது. தமிழ்த்துகள்

ஜூன் ஐந்தாம் நாளை உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருந்தாலும், விண்வெளி ஆய்வுகளும் செயற்கைக்கோள் தரும் தகவல்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழ்த்துகள்

உலக விண்வெளி வார தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது இனிவரும் காலங்களில் நிலவில் கால் பதித்தாலும் சரி செவ்வாய்க் கோளில் தரை இறங்கினாலும் சரி மனிதன் அங்கும் மாசு ஏற்படக் காரணம் ஆகிவிடக்கூடாது. புவியை மாசிலிருந்து மீட்டே ஆக வேண்டும். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

பல்வேறு நாடுகளுக்குப் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கற்றுத்தந்த நம் பாரதம் விண்வெளித் திட்டத்திலும் சந்திராயன், மங்கள்யான், ஆதித்யா என்று நிலவுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் சூரியனுக்கும் செயற்கைக்கோள்களை அனுப்பி வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் ஒருபடி மேலாகச் சென்று ரூமி என்ற மறு பயன்பாட்டுக்கான ஹைபிரிட் ராக்கெட் ஏவியுள்ளது. தமிழ்த்துகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து 3 க்யூப் செயற்கைக்கோள்கள் மற்றும் 50 சிறிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த இந்த ராக்கெட் மறு பயன்பாடு செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

செயற்கைக்கோள்களை பூமியின் சரியான சுற்றுவட்டப் பாதையில் நிறுத்திவிட்டு ஏழே நிமிடங்களில் புவிக்குத் திரும்பி விட்டது மிஷன் ரூமி 2020 என்ற இந்த ராக்கெட் திட மற்றும் திரவ எரிபொருள் கொண்டது. காலநிலை மாற்றம் காஸ்மிக் கதிர்வீச்சு புற ஊதாக்கதிர்வீச்சு காற்றின் தன்மை இவற்றையெல்லாம் அளவிடும் வண்ணம் இன்றைக்குச் செயற்கைக்கோள்கள் நமக்குப் பயன்பட்டு வருகின்றன. தமிழ்த்துகள்

விண்வெளி ஆய்வுத் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேடு பெருமளவு தடுக்கப்படுகிறது. நீண்டதொரு உறக்கத்திலிருந்து உலகம் விழித்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயுமீனில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான், எங்கும் மாசினைக் கண்டான் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் படைத்தான் என்று வரலாறு பேசப்போகிறது. தமிழ்த்துகள்

வற்றும், வற்றா வளங்களை மனிதன் அளவிடுவதற்கும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் விண்வெளி ஆய்வு துணை நிற்கிறது. தமிழ்த்துகள்

வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியின் வைர வரிகளை மனதில் பதிப்போம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் முழுமையாக வெற்றி பெற ஒத்துழைப்பு தருவோம். தமிழ்த்துகள்

சிந்தையில் சிறகடித்த கருத்துகளைப் பந்தி போட்டுப் பரிமாறி இருக்கிறேன். சுவை உணர்ந்தோர் கரவொலி எழுப்புங்கள் என்று கேட்டு வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன். நன்றி வணக்கம்.

தமிழ்த்துகள்

 

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199             தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive