கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 09, 2024

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என்பது நவராத்திரி விழாவின் அங்கமான ஒரு இந்து சமயப் பண்டிகையாகும். 

இது இந்து நாள்காட்டியின்படி புரட்டாசி மாதம் வளர்பிறை நவமியிலும் பொது நாள்காட்டியின்படி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இந்தியத் துணைக் கண்டம் முழுக்கக் கொண்டாடினாலும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளால் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் தங்களது தொழிலுக்குப் பயன்படும் கலப்பை, கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள், கல்விப் பொருள்கள் போன்றவற்றை சரஸ்வதிக்கு முன் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

இதனை அஸ்திர பூஜை என்றும் அழைப்பர். 

பூஜைக்காக வைக்கப்பட்ட பொருள்கள் மறுநாள் விஜயதசமி வரை எடுக்கப்படாமல் இருக்கும்.

புராணக்கதை

புராணங்களின்படி இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. 

கவுரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்று பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் சென்றனர். 

பின்னர் ஓராண்டு அஞ்ஞாத வாசம் எனப்படும் ஆயுதங்களையும் அடையாளங்களையும் துறந்து வாழ்ந்து வந்தனர். 

இறுதியாக ஓராண்டு கழித்து ஒன்பது நாள்கள் விரதமிருந்து, பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை வன்னி மரப் பொந்திலிருந்து ஆயுத பூஜை நாளில் வழிபட்டு அருச்சுனன் எடுத்ததாகக் கருதப்படுகிறது.

மற்றொரு கதையில் மகாபாரத குருச்சேத்திரப் போருக்கு முன் விரதமிருந்து காளிதேவிக்கு ஆயுத பூஜையன்று அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இலக்கியத்தில்

பனிரெண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில் ஒன்பது நாள் வழிபாடு நடத்தி போரிடும் யானைகளுக்கு மரியாதை செய்வதாகக் குறிப்புள்ளது.

சிலப்பதிகாரத்தில், கொற்றவைக்கு நேர்த்திக்கடன்களைச் செய்யாவிட்டால் வெற்றியைத் தரமாட்டாள் என்ற வரிகளின் மூலம் கருவிகளைப் படைத்து வழிபடும் முறையை அறியமுடிகிறது.

வாளுக்கு விழா எடுத்த செய்தியைப் பதிற்றுப்பத்தும் தொல்காப்பியமும் குறிப்பிடுகின்றன.


தமிழ்த்துகள்

Blog Archive