தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, November 30, 2024
ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் தொகுத்தறித்தேர்வு - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2024
7th Tamil Second Term Summative Assessment half yearly model Question Paper 2024
விருதுநகர் மாவட்டம் virudhunagar district
ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் தொகுத்தறித்தேர்வு - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2024 pdf
7th Tamil Second Term Summative Assessment half yearly model Question Paper 2024 pdf
விருதுநகர் மாவட்டம் virudhunagar district
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் தமிழ்க் கட்டுரை, பேச்சு
Inaiya vali vilaiyattukalin thakkangal tamil katturai pechu
Effects of Internet Games Tamil Essay Speech
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் தமிழ்க் கட்டுரை பேச்சு pdf
Inaiya vali vilaiyattukalin thakkangal tamil katturai pechu
Effects of Internet Games Tamil Essay Speech pdf
Friday, November 29, 2024
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் தமிழ்க் கட்டுரை Implications of online games tamil katturai essay
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள்
முன்னுரை
இணையவழி விளையாட்டுகள் இந்த நவீன காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் மகிழ்ச்சியும் அனுபவமும் தருகின்றன, ஆனால் அதனுடன் கூடவே சில தீய விளைவுகளும் உள்ளன. இக்கட்டுரையில், இணையவழி விளையாட்டுகளின் தாக்கங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மனஅழுத்தம் மற்றும் ஆரோக்கியம்
இணையவழி விளையாட்டுகள் பலரை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. அதிக நேரம் இணைய விளையாட்டு மனஅழுத்தத்தை அதிகரிக்கும். மிக அதிகமாக விளையாடுதல் தூக்கமின்மையை ஏற்படுத்தும், இது ஆரோக்கியத்திற்குப் பாதகமாகும். நரம்பு தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
சமூக தொடர்புகள்
இணையவழி விளையாட்டுகள் சமூக தொடர்புகளைப் பாதிக்கக் கூடும். அதிக நேரம் கணினி முன்பு இருப்பது, நேரடிக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதைக் குறைக்கும். இது சமூக ஆற்றல் மற்றும் மாறுபட்ட மனநிலைகளை ஏற்படுத்தலாம்.
கல்வி விளைவுகள்
மாணவர்கள் அதிக நேரம் இணையவழி விளையாட்டுகளில் ஈடுபடுவதால், கல்வியில் அவர்களின் கவனம் குறைகின்றது. பாடங்களில் ஆர்வம் குறைந்து, அதனால் தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைகின்றன.
நிதி இழப்பு
சில விளையாட்டுகள் பணத்தைச் செலவழிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், இணைய விளையாட்டுகள் நிதி இழப்பு சிக்கலை ஏற்படுத்துகின்றன.
சுயமரியாதை
இணையவழி விளையாட்டுகளில் தோல்வியைச் சந்திக்கும் போது, சிலர் சுயமரியாதையின்மைக்கு ஆளாவதுண்டு. இதனால், அவர்களது மனநிலையும் பாதிக்கப்படுகின்றது.
தீர்வுகள்
1. விளையாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்தும் திறன்களை ஏற்படுத்துதல்.
2. நேரடிக் கலந்துரையாடல்களுக்கும் மைதானத்தில் விளையாடவும் முக்கியத்துவம் கொடுத்தல்.
3. சுறுசுறுப்பான உடற்பயிற்சி, தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
4. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துதல், நேரத்தை மதிப்பீடு செய்தல்.
5. இணைய விளையாட்டுகளின் மீது செலவிடும் பணத்தைக் கட்டுப்படுத்துதல்.
முடிவுரை
இணையவழி விளையாட்டுகள் மகிழ்ச்சிக்கும் சவால்களுக்கும் வாய்ப்பளிக்கின்றன. அவைகளை ஆற்றல்மிக்க முறையில் மிகவும் கவனமாகப் பயன்படுத்துவதனால், மனிதர்கள் அனைத்துத் தரப்பிலும் நன்மைகளைப் பெற முடியும். இது நமது சமுதாயத்தை ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான இடமாக மாற்ற உதவும்.
எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2024 pdf விருதுநகர் மாவட்டம்
VIII 8th tamil model half yearly public exam question paper 2024 virudhunagar district
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-11-2024. வெள்ளி.
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-11-2024. வெள்ளி.
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : நட்பியல் ;
அதிகாரம் : புல்லறிவாண்மை ;
குறள் எண் : 844.
குறள் :
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.
பொருள்:
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், யாம் அறிவுடையேம் ' என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.
பழமொழி :
சிப்பியிலே விழுந்த மழைத்துளி முத்தாகும். அதுபோல, நல்லவர்ககுச் செய்த உதவி நிலை நிற்கும்.
A raindrop that falls on an oyster shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.
இரண்டொழுக்க பண்புகள்:
1) நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
2) நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
உடல்நலத்தை பாதுகாப்பது போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.- ஜவஹர்லால் நேரு.
பொது அறிவு:
1. ரங்கசாமி கப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
ஹாக்கி.
2.கூடைப்பந்து விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
5 (ஐந்து )
English words & meanings :
Jolly மகிழ்ச்சியான
Excitement உற்சாகம்
வேளாண்மையும் வாழ்வும் :
பரிந்துரைக்கப்பட்ட பயனுள்ள பூச்சிகளில், மைன்யூட் பைரேட் பக்ஸ், பிக் ஐட் பக்ஸ் மற்றும் குறைந்த அளவில் (பறந்து விடக் கூடிய) லேடி பக்ஸ் ஆகியவையாகும். இவை அனைத்துமே பல வகையான பூச்சிகளைத் தின்னக் கூடியவை.
நீதிக்கதை - நல்லதும், கெட்டதும்
ஒரு சீடன் தன் குருவிடம், "நல்லதை படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளார். அதனால் நல்லதை மட்டும் ஏற்பதை போல் கெட்டதையும் ஏற்றால் என்ன?" என்று கேட்டார். அதற்கு குரு சிரித்துக்கொண்டே, "அது அவரவர் விருப்பம்" என்றார். பகல் உணவு வேலை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட்ட உணவை பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பாலும்,மறு கிண்ணத்தில் பசுமாட்டுச் சாணமும் வைக்கப்பட்டு, சீடனிடம் உணவருந்த கொடுக்கப்பட்டது.
குரு புன்முறுவலுடன் சீடனிடம், "பால், சாணம் இரண்டுமே பசு
மாட்டிடமிருந்து தானே கிடைக்கிறது. பாலை ஏற்றுக் கொள்வது போல்
சாணத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதா?" என்று கேட்டார். சீடன் விழித்தான்.
குரு தொடர்ந்தார். "பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ, அதனை
அப்படியே ஏற்கலாம். சாணத்தை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது
போல் கெட்டதை விலக்கி புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு
உரமாக்கி உயரும் வல்லமை ஏற்க வேண்டும்" என்றார்.
இன்றைய செய்திகள் 29.11.2024
* புதுச்சேரிக்கு 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.
3 ஆண்டுகளில் 1.69 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடம் மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு.
சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, லக்சயா சென் வெற்றி.
* ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.
Today's Headlines
29.11.2024
Puducherry was on a 'red alert' for 2 days, and precautionary measures intensified.
1.69 lakh free agricultural power connections in 3 years: Minister Senthil Balaji is proud of this achievement.
Home Secretary Dheeraj Kumar has ordered the transfer of 5 IPS officers in Tamil Nadu.
Kalam 4 missile, capable of carrying out nuclear weapons, was successfully tested from a submarine.
Earthquake in Tajikistan; recorded at 4.6 on the Richter scale.
International badminton: Sindhu and Lakshya Sen win in the first round.
Junior Asia Cup hockey: India won a huge victory by defeating Thailand.
சிந்தித்துச் செயல்படு ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை
tamil short story kathai Think and act
Thursday, November 28, 2024
ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம்
IX 9th Tamil Half Yearly public exam Model Question paper pdf December 2024 Virudhunagar District
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள். 28-11-2024. வியாழன்
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
28-11-2024. வியாழன்
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : நட்பியல் ;
அதிகாரம் : புல்லறிவாண்மை ;
குறள் எண் : 843.
குறள் :
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.
பொருள்:
அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்.
பழமொழி :
சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய், செய்தபின் ஐயப்படாதே.
Form friendships after due deliberation, having done so do not give place to doubt.
இரண்டொழுக்க பண்புகள்:
1) நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளைஅணிவேன்.
2) நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும். ஹெலன் கெல்லர் .
பொது அறிவு:
1. மீன்கள் இல்லாத ஆறு எது?
ஜோர்டான் ஆறு.
2. இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
தமிழ்நாடு
English words & meanings:
Hungry பசி
Interest விருப்பம்
வேளாண்மையும் வாழ்வும் :
நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, செடிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கலாம்
நீதிக்கதை
எறும்பு
ஒரு ஆசிரமத்தில் குரு ஒருவர் தனது சீடர்களுக்கு துன்பம் வந்தால் எப்படி தன்னம்பிக்கையுடன் மனதை தளர விடாமல் வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு எறும்பு கதையின் மூலமாக கூறி புரிய வைக்க நினைத்தார்.
"ஒரு நாள் ஓர் எறும்பு சற்று நீளமான உணவுப் பொருளை தன் வாயில் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அந்த விரிசலை தாண்டி உணவுப்பொருளை எடுத்து செல்ல முடியாமல் தவித்தது.
சிறிது நேரம் கழித்து, அந்த எறும்பு தனது உணவை அந்த
விரிசலின் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலை கடந்து பின்பு தனது உணவுப் பொருளை எடுத்துக்கொண்டு தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் சென்றது" என்று சீடர்களிடம் கூறினார்.
மேலும் "நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பத்தை பாலமாக வைத்து நம் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நம்மிடம் இருந்தாலே நமது வாழ்வின் துன்பங்களை எளிதில் கடந்து செல்லலாம்"என்று கூறி கதையை முடித்தார்.
இன்றைய செய்திகள் 28.11.2024
* "ஸ்வச் பாரத் 2.0 திட்டத்தைப் பயன்படுத்தி கடந்த 3 ஆண்டுகளாக திடக்கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது"
விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது' - மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்.
நாகை 3-வது நாளாக கனமழையால் தத்தளிப்பு; டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதம்.
* எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 2-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.
நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்தது: புவி இயற்பியல் ஆய்வில் தகவல்.
* உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 2-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் டிரா.
டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த பும்ரா.
Today's Headlines
28.11.2024
"Tamil Nadu has been leading in solid waste management for the last 3 years using the Swachh Bharat 2.0 program".
Tamil Nadu government will not implement the Vishwakarma program' - Chief Minister Stalin's firm response to the Central government.
Nagai reels under heavy rain for the 3rd day; crops damaged in delta districts.
Opposition parties continue to create chaos: Both houses of Parliament adjourned for the 2nd day.
Earth's axis has tilted by 31.5 inches due to excessive groundwater absorption: information from Geophysical survey data.
❖ World Chess Championship: Indian player Kukesh draws in the 2nd round.
Test rankings: Bumrah once again tops the bowlers' list.
காலத்தினால் செய்த உதவி ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை
tamil short story kathai Helped by time
Wednesday, November 27, 2024
பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம்
SSLC X 10th Tenth Tamil Half Yearly public exam Model Question paper pdf December 2024 Virudhunagar District
மனித குணம் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை
tamil short story kathai manitha kunam
Human nature
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.11.2024 புதன்
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.11.2024 புதன்
திருக்குறள்:
"பால் :பொருட்பால்
அதிகாரம்: புல்லறிவாண்மை
குறள் எண்:842
அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.
பொருள்:அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை;
அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்."
பழமொழி :
Learning is youth is an engraving on a rock.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
*நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
உன்னால் முடியாது என பலர் என்னிடம் கூறிய வார்த்தைகளை என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது - ஜாக்கிசான்
பொது அறிவு :
1. அணிலின் அறிவியல் பெயர் என்ன ?
ரோடன்ஷியா ஸ்குயிரஸ்.
2. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு என்ன பெயர் ?
வெனம்.(Venom)
English words & meanings :
Happy - மகிழ்ச்சி
Hot - சூடான
வேளாண்மையும் வாழ்வும் :
பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைத் தவிர்ப்பதற்கு, இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
நவம்பர் 27
லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர்கள், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.
நீதிக்கதை
முடிவு
ஒரு நாள் ஒரு சிறுத்தை பசியுடன் உணவை தேடியது. அப்போது ஒரு கருப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.
அவை இரண்டும் ஒரு மலை அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகவும் கவனத்துடன் மலை அடிவாரத்திற்கு அருகே சென்றது.
ஆனால் எந்த மானை தாக்குவது என்று அது முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் சிறுத்தையை பார்த்த இரண்டு மான்களும் ஓட துவங்கின. பிறகு அவை இரண்டும் ஓர் இடத்தில் வலதும் இடதுமாக ஓடத் தொடங்கின.
சிறுத்தை அந்த இடத்திற்கு வந்ததும் எதை துரத்தலாம்? என்று யோசித்தது. பின்பு, "கருப்பு மானை துரத்தலாம் கருப்பு மானின் இறைச்சி தான் வெகு ருசியாக இருக்கும்" என்று கூறிக் கொண்டே கருப்பு மானை துரத்தியது.
ஆனால் அதற்குள் கருப்புமான் வெகு தூரம் ஓடிவிட்டது. பின்பு சிறுத்தை, "இது வேகமாக ஓடக்கூடிய மான் இதை நாம் நம்மால் பிடிக்க இயலாது. எனவே, நாம் புள்ளிமானை துரத்துவோம்" என்று திரும்பி வந்து,
எதிர்பாதையில் ஓடத் தொடங்கியது. ஆனால்
புள்ளிமானோ ஏற்கனவே வெகு தூரம் ஓடிவிட்டது.
சிறுத்தை, முடிவெடுப்பதில் சிறிது தயக்கம் காட்டியதால் எந்த மானையும் பிடிக்க இயலவில்லை.
நீதி : எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டாமல், விரைந்து முடிவெடுத்து,எடுத்த முடிவில் நிலையாக இருக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
27.11.2024
* நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு. இன்று 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்.
* சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய உலகின் முதல் இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4-ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ.
* மியான்மரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.
* ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கஜகஸ்தானை வீழ்த்தியது இந்தியா.
* ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அல்-நாசர் அணி வெற்றி.
Today's Headlines
* Rajiv Gandhi Government General Hospital, Chennai has been awarded the ‘Eat Right Campus’ certificate by the Food Safety Department for providing quality food to patients.
* Deep depression likely to turn into a cyclone. Very heavy rain warning for 10 districts today: Meteorological Department information.
* ISRO will launch the world’s first co-satellites developed by the European Space Agency to study the Sun on December 4 using PSLV rocket.
* Mild earthquake in Myanmar: 4.4 on the Richter scale.
* Asian Cup basketball qualifiers: India defeats Kazakhstan.
* Al-Nassr team wins today’s match of the Asian Champions League football tournament.
Tuesday, November 26, 2024
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2024.செவ்வாய்.
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
26-11-2024.செவ்வாய்.
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : நட்பியல் ;
அதிகாரம் : புல்லறிவாண்மை ;
குறள் எண் : 841.
குறள் :
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகு.
பொருள்:
அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும் ; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
பழமொழி :
சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது.
Even a forest will not hold their wrath when the meek are enraged.
இரண்டொழுக்க பண்புகள்:
1) நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
2) நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
+ படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை கருவியாகும். ஜோசப் அடிசன்.
பொது அறிவு :
1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா வைரச் சுரங்கம்.
2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜவஹர்லால் நேரு
English words & meanings:
Grief - துக்கம்,
Guilty - குற்ற உணர்ச்சி
வேளாண்மையும் வாழ்வும் :
கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகளை சமாளிக்க ஒரு வழி தாவரத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். காரணம், ஆரோக்கியமான தாவரங்கள் தமது இலைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளானாலும், அவற்றால் சமாளித்துக் கொள்ள முடியும்.
நவம்பர் 26 இந்திய அரசியல் சாசன தினம்
இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம் (Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதிக்கதை பெற்றோர்
ரப்பரை பார்த்து பென்சில், "ஒவ்வொரு முறையும் நான் செய்த தவறுக்கு என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய். ஆனால் என்னை சுத்தப்படுத்தும் பொழுது நீ குறைந்து கொண்டே செல்கிறாய். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று கூறியது.
அதற்கு ரப்பர், "அது என் கடமை நான் படைக்கப்பட்டதே அதற்காகத்தான். என்னைக் கண்டு நீ வருத்தப்பட வேண்டாம். இதில் எனக்கு மிக மகிழ்ச்சியே. என்னால் உன் தவறுகள் அளிக்கப்பட்டு நீ முன்னேறிச் சென்றால் அதுவே என் வெற்றி. நான் கரைவதை பற்றி எனக்கு கவலை இல்லை" என்று கூறியது.
அந்த ரப்பர் வேறு யாரும் இல்லை நமது பெற்றோர் தான். அவர்கள் தான் ஆயுள் முடியும் வரை நமது தவற்றை திருத்திக் கொண்டே இருப்பார்கள். நம் மீது பொறாமை படாத உள்ளங்கள் நம் பெற்றோர்களே.
இன்றைய செய்திகள்
26.11.2024
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ல் கூடுகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு.
நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்குஇன்று ரெட் அலர்ட்': வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
*எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.
*2023-ல் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா அதிர்ச்சி அறிக்கை.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது.
* டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆண்கள் பிரிவில் நெதர்லாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றது.
Today's Headlines
26.11.2024
Tamil Nadu Assembly to meet on December 9: Speaker Appavu announces.
'Red alert' for Delta districts, including Nagapattinam and Tiruvarur, was announced today by the Meteorological Department.
Opposition parties in turmoil: Both houses of Parliament adjourned for the whole day.
On average, 140 women and girls murdered per day in 2023: UN report in shock.
World Chess Championship began in Singapore yesterday.
Italy defeated the Netherlands in the men's Davis Cup tennis category to win the championship.
முள்ளை முள்ளால் எடு ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை
tamil short story kathai Pick a thorn by a thorn
mullai mullal edu
Monday, November 25, 2024
இந்திய அரசமைப்பு - பள்ளி மாணவர்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி
Constitution of India - Pledge to be taken by School Students
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அல...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
நாள் - 20-01-2025 - 24-01-2025 வகுப்பு - 10 பாடம் - தமிழ் தலைப்பு - திருப்புதல் முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள் 1. சான்ற...
-
6th Tamil Model Notes of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு 1...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
Blog Archive
-
▼
2024
(1680)
-
▼
November
(166)
- HOKENAKAL CROCODILE PARK ஒகேனக்கல் முதலைகள் பூங்கா
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் தொகுத்தறித்தேர...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் தொகுத்தறித்தேர...
- இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் தமிழ்க் கட்டுர...
- இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் தமிழ்க் கட்டுர...
- புத்திசாலி மீன் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை ந...
- அடுப்பு தமிழ்க் கவிதை
- இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் தமிழ்க் கட்டுர...
- எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு மாதிரி வின...
- எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு மாதிரி வி...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-11-2024. ...
- சிந்தித்துச் செயல்படு ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு மாதிரி வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் டிசம்பர் மாதத் தேர்வு 50 மத...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு மாதிரி வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் டிசம்பர் மாதத் தேர்வு வினாத...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள். 28-11-2024....
- காலத்தினால் செய்த உதவி ஒரு குட்டிக்கதை மாணவர் நீதி...
- மகிழ் முற்றம் கையேடு pdf MAKIL MUTRAM GUIDE
- வகுப்பு 10 தமிழ் அரையாண்டு, பொதுத்தேர்வு மாதிரி வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு மாதிரி வி...
- 11th half yearly exam date time table December 202...
- 6 - 9 half yearly exam date time table December 20...
- மனித குணம் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெற...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.11.2024...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2024.ச...
- முள்ளை முள்ளால் எடு ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்க...
- இந்திய அரசமைப்பு - பள்ளி மாணவர்கள் எடுக்க வேண்டிய ...
- பத்தாம் வகுப்பு தமிழ் 99 மதிப்பெண்கள் திருத்திய வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரசு உடனடித் தேர்வு வினாத்தா...
- மிகச் சிறந்த வேலைக்காரன் ஒரு குட்டிக்கதை மாணவர் நீ...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.11.2024...
- சிந்தனைத் துளி குறை காணல்
- கர்வம் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2025
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2025
- தமிழர் பாரம்பரிய உணவு வகைகள் தமிழ்ப் பேச்சு, கட்டுரை
- தமிழர் பாரம்பரிய உணவு வகைகள் தமிழ்ப் பேச்சு, கட்டு...
- தமிழர் பாரம்பரிய உணவு வகைகள் தமிழ்ப் பேச்சு, கட்டுரை
- அலட்சியம் ஆபத்து ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை ...
- அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை டிசம்பர் 2024
- 12th அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை டிசம்பர் 2024
- 10th அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை டிசம்பர் 2024
- அரசு விடுமுறை நாள்கள் 2025 Government holidays
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்22-11-2024. வ...
- பழி சொல்வது பாவம் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-11-2024. ...
- ஆசிரியரின் கேள்வி ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- தேன்சிட்டு 2024 நவம்பர் மாத இதழ் 2 வினாடி வினா 61 ...
- தேன்சிட்டு 2024 நவம்பர் 16-30 மாத இதழ் வினாடி வினா...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- ஆறாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- ஏழாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- எட்டாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தேர...
- ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தே...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப் பருவத் தேர...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2024...
- அரசனும் இளவரசனும் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை...
- 10ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு வினாத்தா...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு பெரம்...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- கல்வியின் அவசியம் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.11.2024 செவ...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு விருத...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்...
- 10ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு வினாத்தா...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்ப...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்ப...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- கூடாநட்பு ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறி...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.11.2024...
- வீணான பொருள்கள் மூலம் பயனுள்ள பொருள்கள்
- விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள்
- உனக்கு விருப்பமானதைக் கொடு ஒரு குட்டிக்கதை மாணவர் ...
- வீணான பொருள்கள் மூலம் கைவினைப் பொருள்கள்
- மகிழ் முற்றம் பதவிஏற்பு விழா அரசு மேல்நிலைப்பள்ளி ...
- நேர்மை ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை
- கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டிகள் விவரம் டிசம...
- வெற்றியின் ரகசியம் ஒரு குட்டிக் கதை மாணவர் நீதிக்க...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024. ...
-
▼
November
(166)