கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 18, 2024

எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நவம்பர் 2024 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 8th Tamil second mid term exam answer key virudhunagar district november 2024 

PDF LINK கீழே👇

எட்டாம் வகுப்பு       தமிழ்

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு       நவம்பர் 2024                      விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                                 7 X 1 = 7

1. இ.கனகம் + சுனை

2. ஆ. பண்பு

3 ஆ.வஞ்சி                      தமிழ்த்துகள்

4 ஆ.வனைதல்

5 ஆ. காலிறங்கி

6 இ.குற்றமற்ற ஆட்சி

7 இ. மூன்று.                     தமிழ்த்துகள்

பொருத்துக                                              3x1 =3

8.மட்பாண்டம்                   - திரிதல் விகாரம்

9.மரவேர்                - கெடுதல் விகாரம்

10.கடைத்தெரு       - தோன்றல் விகாரம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

III. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக.                                                 5 X 2 = 10

11. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி.

 

12 அ.ஆயத்த ஆடை          ஆ.முரசு தமிழ்த்துகள்

 

13  கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பு.

 

14  பண்பு - சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

அன்பு - உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். தமிழ்த்துகள்

 

15 மழை பெய்யாததால் பயிர்கள் விளையாமல் பஞ்சம் நிலவியதால் மக்கள் ஊரைவிட்டு வெளியேற முனைந்தனர்.

தமிழ்த்துகள்

 16.               கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய்.

 

 

 

IV. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                 3 X 3 = 9

 

17. கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதிக்கு 'வஞ்சி மாநகரம்' என்னும் பெயரும் உண்டு.

கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டுள்ளார்.

நெல், சோளம் கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன.

 

18)     மட்டக்கூடை, தட்டு கூடை, கொட்டுக் கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக் குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

19 சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழை நீரால் வருவாய் சிறந்து விளங்குகிறது.

அகன்ற நிலப் பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளை விடுகிறது.

முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிகிறது.

தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்கிறது.

 

20     தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அவை –

    1.வேற்றுமைத்தொகை,    2.வினைத்தொகை,

    3.பண்புத்தொகை,          4.உவமைத்தொகை,

    5.உம்மைத்தொகை,       6.அன்மொழித்தொகை.

 

21 பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆன புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.

கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த் திவலைகளை வாரி இறைக்கும்.

நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும்.

இவற்றால் இடையறாது எழும் 'கிண்' என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.

தமிழ்த்துகள்

V. அடிபிறழாமல் எழுது.                                                                                         2 + 4 = 6

22 அ. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து           தமிழ்த்துகள்

ஆ. ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

 

VI. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                                         3 X 5 = 15

23. இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்.

24. வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்கள்           

25. கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம்

26. காற்றுக் கருவிகள் குறித்த செய்திகள்.          தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

PDF LINK

தமிழ்த்துகள்

Blog Archive