22-11-2024. வெள்ளி.
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : நட்பியல் ;
அதிகாரம் : தீ நட்பு :
குறள் எண்: 819.
குறள்:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.
பொருள்:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.
பழமொழி :
உன் பகைவர்களையும் அன்பு செய்.
Love even your enemies heartily.
இரண்டொழுக்க பண்புகள் :
1) என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.
2) எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.
பொன்மொழி :
* முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை முடிக்கும் வரை.
பொது அறிவு :
1. இந்தியாவில் இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடம்
பெரம்பூர்
2.தமிழ்நாட்டில் பழுப்புநிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம்
நெய்வேலி
English words & meanings:
Energetic - துடிப்புள்ள
Envy - பொறாமை
வேளாண்மையும் வாழ்வும் :
நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, தாவரத்திற்கு துணைத் தாவரங்களையும் நட்டு அவற்றின் மூலம் நோயைக் கட்டுப் படுத்தலாம்.
நீதிக்கதை நமது எண்ணம்
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் குடிக்க தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்குச் சென்றார் தாகத்தினால் உயிர் போய்விடுமோ என்று நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போன்ற வீடு இருப்பதை கண்டார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த இடத்திற்கு சென்று விட்டார். அங்கே கையால் அடிக்கும் பம்பும், அதன் அருகில் ஒரு குவளையில் தண்ணீரும் வைக்கப்பட்டு இருந்தது. அருகே இருந்த சிறிய அட்டையில் யாரோ எதையோ எழுதி வைத்திருந்தார்கள். அதை அவர் படித்துப் பார்த்தார். அதில், குவளையில் உள்ள தண்ணீரை பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்துவிட்டு மீண்டும் குவளையில் நீரை நிரப்பி வைத்து செல்லவும் என்று எழுதி இருந்தது.
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா? அதிலிருந்து தண்ணீர் வருமா? என்று சந்தேகமாக இருந்தது. அந்தப் பம்பு இயங்காவிட்டால் இந்த தண்ணீர் வீணாகி விடுமே என்றும் அவர் மனதில் நினைத்தார். அதுக்கு பதிலாக இந்த தண்ணீரை நாம் குடித்து விட்டால் தாகமும் தீரும். உயிர்பிழைக்கவும் உத்தரவாதம் உண்டு என்று அவன் யோசித்தான். தண்ணீரை குடித்து விடுவது புத்திசாலித்தனம் என்று ஒரு கணம் நினைத்தாலும், ஒருவேளை அதில் எழுதி இருந்ததைப் போல இந்த பம்ப் இயங்கும் நிலையில் இருந்து, பம்ப் இயங்க தேவையான இந்த தண்ணீரை குடித்து விட்டால் இனி நம்மை போல தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவதற்கு தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அதற்கு மேல் அவர் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்த குவளையில் உள்ள தண்ணீரை பம்ப் செட்டினுள் ஊற்றி அடிக்க ஆரம்பித்தார். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர தண்ணீரை குடித்துவிட்டு அந்த குவளையையும் நீரால் நிரப்பி வைத்த போது அவரது மனம் நிறைந்து இருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல் பயன்படும்படி விட்டுச் செல்ல வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று போக விடக்கூடாது.
இன்றைய செய்திகள்
22.11.2024
ராமேசுவரத்தில் ஒரே நாளில் 41 செ.மீ. மழை: நவம்பர் 25, 26-ல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
*சுற்றுலா மேம்பாட்டில் சிறந்த மாவட்டமாக திருச்சி தேர்வு செய்யப்பட்டு சென்னையில் ஆட்சியருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பிரிவு சார்பில், நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, நாடு தழுவிய கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியான 'சி-விஜில் ' நேற்று தொடங்கியது.
*காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணிபுரிய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் 1,000+நாட்களில் இதுவே முதல் முறை.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் தொடங்கி நடைபெறுகிறது.
Today's Headlines 22.11.2024
41 cm rain in one day in Rameswaram. Rain: Chances of heavy rain in Delta and Southern districts on November 25, 26.
Trichy was selected as the best district in tourism development and the collector was awarded in Chennai.
On behalf of the Tamil Nadu and Puducherry Naval Divisions of the Indian Navy, " C-Vigil ", a nationwide maritime security exercise, started yesterday to strengthen the country's maritime security.
Delhi government has ordered 50 percent of the government employees to work from home as a precautionary measure after the air pollution level crossed the dangerous level.
Russia strikes Ukraine with ICBM first time in 1,000+ days.
The first Test match between India and Australia teams will be held in Perth from today (November 22)