9th Tamil second mid term exam answer key virudhunagar district november 2024
PDF LINK கீழே👇
ஒன்பதாம்
வகுப்பு தமிழ்
இரண்டாம்
இடைத் தேர்வு நவம்பர் 2024
விடைக்
குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. இ. பிசிராந்தையார் 1
2. அ. மாமல்லபுரம் 1
3. ஈ. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான் 1
4. ஆ. ஐ 1
5. ஆ.நாணமும் இணக்கமும்
1
6. ஈ. கெடுதல் 1
7. ஆ. இராவணகாவியம் 1 தமிழ்த்துகள்
8. அ. புலவர் குழந்தை 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. 1. போரில்
விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.
2. அக்கல்லில் அவ்வீரரின்
உருவம் பொறிக்கப்பெறும்.
3. தமிழரின் தொடக்ககாலச்
சிற்பக்கலைக்குச் சான்றாக இதையும் குறிப்பிடலாம். 2
10. மூவாது மூத்தவர் – வயதில் இளையவராக இருந்தாலும்
அறிவால் மூத்தவராக எண்ணத்தக்கவர். 1
நூல் வல்லார் – பல
நூல்களைக் கற்றவர். 1
11. 1. சோழர்காலத்தில் மிகுதியான
செப்புத் திருமேனிகள் உருவமைக்கப்பட்டன. 1
2. கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலைநுட்பத்தோடு
வடிவமைக்கப்பட்டன. 1
12. பெண்கல்வி, பெண் விடுதலை, தமிழுணர்ச்சி
ஊட்டுதல், பகுத்தறிவு பரப்புதல், அன்போடு விருந்து ஓம்புதல். 2
கட்டாய வினா
13.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல்
இலர். 2
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
14. காய்க்கும்
- காய்+க்+க்+ உம்
காய் - பகுதி
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை
உம் - பெயரெச்ச விகுதி 2
15. அ. களர்நிலம் 1
ஆ. புணர்ச்சி 1
16. அ. அணில் பழம் கொறித்தது. 1
ஆ. நேற்று தென்றல் காற்று வீசியது. 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
17. பழனிமலையை விட இமயமலை மிகப் பெரியது. 2
18.அ.ஒற்றுமையே வலிமை. 1
ஆ.ஏறுபோல் நட 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
19. 1.ஆடும் இளம் பெண்கள் கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும்
கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.
2.மதுரையை ஆளும் மன்னனாம் கண்ணன் பாதுகைகளை
அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
3.மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்க
வரிகளை உடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.
4.அத்தை மகனும் மது என்ற அரக்கனை அழித்தவனுமான
கண்ணன் முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.
5.இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள்
கூறுகிறார். 3
20. 1.இந்தியப்
பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் மருத்துவர் முத்துலட்சுமி அவர்கள்.
2.இவரே சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் சட்ட மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
3.தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகியவை
நிறைவேறக் காரணமாக இருந்தவர். 3
21. 1.பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன.
2.அதைப் போலவே மேதையரும்
பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர் என சிறுபஞ்சமூலம் தெரிவிக்கிறது. 3
22. 1.புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவண காவியத்தில் ஐவகை நில வருணனைகள்
வருகின்றன.
2.தீயிலிட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின்
மணமும், காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும்
உள்ள பொருள்கள் குறிஞ்சி நிலத்தில் மணம் கமழ்ந்து காணப்பட்டன. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
23. 1.உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில்
முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் ஆகும்.
2.உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள்
புடைப்புச் சிற்பங்கள் ஆகும். 3
24. கட்டாய வினா.
சிறுபஞ்சமூலம்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. -
காரியாசான் 3
விடை அளிக்க 2x5=10
25. பதிப்பகத்திற்குக் கடிதம். பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 5
26. அ. கவிதை அல்லது ஆ. என்னை மகிழச் செய்த பணிகள்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 5
விடை அளிக்க 1x8=8
27. அ. சாதனைப் பெண்கள் அல்லது ஆ. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் 8
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்