கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, November 09, 2024

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024. சனிக்கிழமை

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024. சனிக்கிழமை 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 
இயல்: துறவறவியல்; 
அதிகாரம் : கள்ளாமை ; 
குறள் எண் : 281.

குறள் :

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம் :

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

பழமொழி :

> பாம்பென்றால் படையும் நடுங்கும்

A snake could make an army panic.

இரண்டொழுக்க பண்புகள்:

1) பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

2) தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.

பொன்மொழி :

1) உன் அன்பின் தன்மைக்கு ஏற்றப்படி செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றப்படி உன் வாழ்க்கை அமையும்.

2) நாம் எதை இழந்துவிட்டாலும் இழக்காவிட்டாலும் கௌரவத்தை மட்டும் இழக்கக்கூடாது. இழக்க இடமும் தரக்கூடாது.

பொது அறிவு:

1) இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? 
விடை : டேவிட் ஜசன் ஹோவர்

2) தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் ? 
திரு .டொனால்ட் ட்ரம்ப்

தினம் ஒரு குட்டி கதை : காட்டில் ஒரு சிங்கம், ஒரு ஆட்டை அழைத்தது.

"என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்," என்று கேட்டது.

ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு, 'ஆமாம்,நாறுகிறது.' என்று சொல்லிற்று.

உடனே சிங்கம்,"முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்," என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து

அதனுடைய கருத்தைக் கேட்டது.

ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,

"கொஞ்சம் கூட நாறவில்லை,"என்றது.

சிங்கம்,"மூடனே,பொய்யா சொல்கிறாய்?"என்று கூறி அடித்துக் கொன்றது

பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.

நரி சொன்னது,

"நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.

அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை."சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

இன்றைய செய்திகள் 09.11.2024

மாநிலச்செய்தி:

நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களை வீட்டுவசதி திட்டத்தில் அதிகளவில் சேர்க்க அமைச்சர் உத்தரவு

உள்நாட்டுச்செய்தி:

ஊடக சுதந்திரம் என்பது 'குற்றத்தை தீர்மானிக்கும் உரிமம் அல்ல: கேரள ஐகோர்ட்

உலகச்செய்தி:

'உலக வல்லரசுகளின் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியாவுக்கு தகுதி உள்ளது' புதின்

விளையாட்டுச்செய்தி:

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி: உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார்

Important headlines 09.11.2024

State News:

Minister directs more construction workers registered with welfare board to be included in housing scheme

National News:

Media freedom is not a license to 'judge crime': Kerala High Court

World News:

'India deserves to be in the list of world superpowers' - Putin

Sports News:

Arjun Erikaisi Wins Chennai Grand Masters Round 3: Moves to No. 2 in World Rankings.

தமிழ்த்துகள்

Blog Archive