09-06-2025. திங்கள்.
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : அரசியல் ;
அதிகாரம் : கல்வி ;
குறள் எண் : 400.
குறள் :
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.
விளக்கம் :
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
பழமொழி :
செயல்களே தேவை; சொற்களல்ல.
Wanted deeds only, not words.
இரண்டொழுக்க பண்புகள்:
1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.
2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.
பொன்மொழி :
தீய பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை தொடர்ந்து செய்து வருவதே ஆகும். - விவேகானந்தர்.
பொது அறிவு :
01.தென்னிந்திய நதிகளில் மிக நீளமான நதி எது?
கோதாவரி (Godavari)
02. தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ந.பிச்சமூர்த்தி (N.Pichaimurthi)
English words:
+ crowd
கூட்டம்
+ hide
மறை
Grammar tips:
Situation of using question word
* Who is used to ask about person
* Where Is used to ask about place
* When time
* Why reason
* What things
* How method
* Which choice
* How many quantity
* How often - frequency
அறிவியல் களஞ்சியம் :
சராசரியாக ஒரு மனிதன் 4850 வார்த்தைகளை 24 மணி நேரத்தில் பயன்படுத்துகின்றான்.
ஜூன் 09
சார்லஸ் டிக்கென்ஸ் அவர்களின் நினைவுநாள்
சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens,
பிறப்பு 7 பெப்ரவரி 1812 இறப்பு 9 ஜூன் 1870.
விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.
நீதிக்கதை
முயலும் சிங்கமும்
ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தன.
சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன. எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடைக்காமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது.
அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது, ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது. அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது. அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் "சுவாமி" நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.
என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது. அதற்கு "ஆம் சுவாமி" வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது. அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது.
இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது. முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.
இன்றைய செய்திகள்
09.06.2025
*கொரோனா பரவல் கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்.
"அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள்"
* மணிப்பூர் மாநிலத்தில் போராட்டங்கள் காரணமாக இணைய சேவை நிறுத்தப்பட்டது.
* லாஸ் ஏஞ்சல்ஸில், ICE நாடுகடத்தல் சோதனைகளுக்கு எதிரான போராட்டங்கள் மோதல்களாக அதிகரித்துள்ளன.
*விளையாட்டுச் செய்திகள்
WTC இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் முயற்சிக்கிறார். இங்கிலாந்தில் வலுவான கவுண்டி சீசனுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெற ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் பணியாற்றி வருகிறார்.
*ஹாக்கியில் நெதர்லாந்திடம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
Today's Headlines 09.06.2025
Corona is spreading fast. Pregnant women are advised to wear masks. "If anyone has high fever, cough and body ache they have to move to hospital immediately"
In Manipur, Internet services suspended due to protests.
In Los Angeles, protests against ICE deportation raids have escalated into clashes.
*SPORTS NEWS*
After a strong county season in England, Australia all-rounder Beau Webster is working towards to secure a place in the World Test Championship final against South Africa.
India lost to Netherlands in hockey by 2-1
