கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 23, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஏதிலிக்குருவிகள் ஜூன் 29 - 2026

6th tamil model notes of lesson

lesson plan 2026 june 29

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

29-06-2026 முதல் 03-07-2026

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

இயற்கை இன்பம் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஏதிலிக்குருவிகள்

6.பக்கஎண்

20-21

7.கற்றல் விளைவுகள்

T-602 தாங்கள் பார்த்த, கேட்ட உள்ளூர் சமூக நிகழ்வுகள், செயல்பாடுகள். சடங்குகள் போன்றவற்றைப் பற்றித் தயக்கமின்றி வினா எழுப்பவும், கலந்துரையாடவும் செய்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

எளிய புதுக்கவிதைகளைப் படித்து உணர்தல்.

9.நுண்திறன்கள்

சூழலியல் மாற்றத்தை விவாதித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2025/06/2_66.html 

https://tamilthugal.blogspot.com/2025/06/2_21.html 

https://tamilthugal.blogspot.com/2021/03/thanga-manjal-kuruvi-thenaliraman-tamil.html 

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_6.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த பறவைகளின் பெயர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          மாணவர்கள் அறிந்த இயற்கையின் சிறப்பைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          குருவிகள் நம்முடன் எவ்வாறெல்லாம் வாழ்ந்திருந்தன என்பதை மாணவர்களுக்கு விளக்குதல். தற்போது குருவிகள் அகதிகளாக எங்கோ செல்லக் காரணங்களை விவாதித்தல்.

          உயிர்களின் இருப்பை இயற்கைச் சூழலே முடிவு செய்யும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          இயற்கையின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இயற்கையின் சிறப்புகளை முக்கியத்துவத்தை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி       அகதி என்பதைக் குறிக்கும் சொல் ......................

          ந.சி.வி       முன்பெல்லாம் மழைக்காலம்  எவ்வாறு இருக்கும்?

உ.சி.வி      பறவைகள் ஏதிலிகளாகப் போகாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மழைக்காலக் காட்சியை ஓவியம் தீட்டுதல்.


தமிழ்த்துகள்

Blog Archive