கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 23, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயற்கையைப் போற்றுவோம் ஜூன் 29 - 2026

8th tamil model notes of lesson

lesson plan 2026 june 29

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

    29-06-2026 முதல் 03-07-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஈடில்லா இயற்கை – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

இயற்கையைப் போற்றுவோம்

6.பக்கஎண்

24 - 26

7.கற்றல் விளைவுகள்

T-811 படித்த பிறகு பல்வேறு எழுத்தியல் நடைகளையும் முறைகளையும் (விவரண முறை வரைபடமுறையில் உணர்ச்சிப் பூர்வமான நடை, இயற்கை அழகின் வருணனை முறை போன்றவை) இனங்காணுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

இயற்கையின் சிறப்புகளை அறியும் திறன்.

9.நுண்திறன்கள்

இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி விவாதித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

          https://tamilthugal.blogspot.com/2025/06/2_80.html 

          https://tamilthugal.blogspot.com/2025/06/2_40.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-6th-tamil-silappathikaram-kuruvina.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த இயற்கையின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          இயற்கை, நிலா, கதிரவன், மழை குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          சோழ மன்னன் வெண்கொற்றக் குடை போல வெண்ணிலா உலகுக்கு இன்பம் அளிக்கிறது, சோழனுடைய ஆணைச் சக்கரம் போல கதிரவன் இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது, உலகிற்கு மன்னன் அருள் செய்வது போல மழை மக்களைக் காக்கிறது என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          இயற்கையின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சிலப்பதிகாரப் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          இயற்கையின் சிறப்புகளை முக்கியத்துவத்தை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி       இயற்கை போற்றத்தக்கது ஏன்?

          ந.சி.வி       சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

          உ.சி.வி      இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணம் என்ன?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          இயற்கையின் பெருமைகளையும் அவசியத்தையும் தொகுத்தல்.


தமிழ்த்துகள்

Blog Archive