கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 19, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-06-2025. வியாழன் .

School morning prayer activities 
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

19-06-2025. வியாழன் .

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல் : பாயிரம் ;

அதிகாரம் : வான் சிறப்பு ; 

குறள் எண் : 011.

குறள் :

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

விளக்கம் :

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

பழமொழி :

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

Small rudders guide great ships.

இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

+ செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும் முயன்றால் முடியும். - நெல்சன் மண்டேலா.

பொது அறிவு :

" 01. பனாமா கால்வாய் இணைக்கும் இரு பெருங்கடல்கள் எவை?

அட்லாண்டிக் மற்றும் பசுபிக்

பெருங்கடல்கள்

(Atlantic and Pacific oceans)

02. இந்திய காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?

(Banyan tree)

English words & Tips :

pamper

செல்லம் கொடு,

virtue

நல்லொழுக்கம்

Grammar Tips

K rule

We all know that letter K is silent in some words but most of the children got confused. There is a small trick, when it is silent and when it is not.

K is not silent in King, kite and kettle where as

K is silent in knot, knit, knot, knight, from this we can conclude that when k comes before n then K is silent.

அறிவியல் களஞ்சியம் :

விஞ்ஞானிகள் இருண்ட பொருளைத் தேட ஒரு லெவிட் டேட்டட் காந்தத்தைப் பயன்படுத்தினர். இது பிரபஞ்சம் முழுவதும் இருப்பதாக நம்பப்படும் அடையாளம் காணப்படாத பொருள். இருண்ட பொருள் அல்ட்ராலைட் துகள்களால் ஆனது என்றால், அது காந்தத்தை நுட்பமாகத் தள்ளும் அலை போல நடந்து கொள்ளக்கூடும்.

ஜூன் 19

ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி - Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945 என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.

நீதிக்கதை -

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு...அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது. கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால் தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை... ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது. நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு.. ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது. நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி..மனம் மகிழ்ந்தீர்கள். ஆனால் நான் அப்படியில்லை.. உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்... என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

இன்றைய செய்திகள்

19.06.2025

* பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்; சீனாவை விட 3 மடங்கு குறைவு: சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.

* உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 6,000 க்கும் மேற்பட்ட வடகொரியா வீரர்கள் பலியானதாக இங்கிலாந்து உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

* தமிழ் நாடெங்கும் 10,000 இடங்களில் தமிழக மக்களின் நலத்திட்ட உதவிகள் சம்பந்தமாக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

இந்திய மகளிர் ஹாக்கி அணி தற்போது நடந்து வரும் FIH புரோ லீக்கில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.

இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி வரவிருக்கும் நான்கு நாடுகள் போட்டியில் பங்கேற்க பெர்லினுக்கு புறப்பட்டுள்ளது.

Today's Headlines 19.06.2025

India has more nuclear weapons than Pakistan; 3 times fewer than China, report by International research institute

A British intelligence report says more than 6,000 North Korean soldiers were killed after being unable to withstand the Ukrainian offensive.

. Tamil Nadu government is planning to hold special camps related to welfare schemes for the people of Tamil Nadu at 10,000 locations across Tamil Nadu.

SPORTS NEWS

The Indian women's hockey team is currently facing Argentina in the ongoing FIH Pro League.

The Indian junior men's hockey team has left for Berlin to participate in the upcoming Four Nations Tournament.

தமிழ்த்துகள்

Blog Archive