கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, June 24, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-06-2025. செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

24-06-2025. செவ்வாய்

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல் : பாயிரம் ;

அதிகாரம் : வான் சிறப்பு ; 

குறள் எண் : 014.

குறள் :

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

விளக்கம் :

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

பழமொழி :

புத்தகங்கள் திறக்காத கதவுகள் இல்லை.

Books open more doors than keys do.

இரண்டொழுக்க பண்புகள்:

1. கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

* குழந்தை பருவத்தில்தான் சொர்க்கம் நம்மிடையே உள்ளது.

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.

பொது அறிவு :

01. இந்தியாவின் புராண காலங்களில் தக்சண கங்கா என்று அழைக்கப்பட்ட நதியின் தற்போதைய பெயர் என்ன?

(Godavari)

02. இந்தியாவில் அமிர்தசரத்தில் உள்ள பொற்கோவிலை முழுமையாக கட்டி முடித்தவர் யார்?

(Guru Arjun dev)

English words & Tips :

attack

தாக்குதல்

allow

அனுமதி

Grammar Tips:

Difference between

I used to and I am used to,

1,I used to wake up early in the morning.

2,1 am used to waking up early in the morning.

1 Describes something that regularly happens in the past but it does not happen now.

2. Describe something that feel normal and familiar because it is not new anymore.

அறிவியல் களஞ்சியம் :

செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001 அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜூன் 24 கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்

Kannadasan, பிறப்பு 24 சூன் 1927 இறப்பு 17 அக்டோபர் 1981.

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

நீதிக்கதை

அன்பா, செல்வமா, வெற்றியா? எது சிறந்தது?

ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து உள்ளேவரலாமா ?' என்று கேட்டனர். தந்தை வாருங்கள்' என்றார். 'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது...யாராவது ஒருவர் தான் வரமுடியும்...என் பெயர் பணம்... இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும் ...எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார். ஆனால் குமரனோ ... 'அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம் ... நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால் எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட ... அனைத்தையும் வாங்கலாம் என்றான். ஆனால் குமரனின் தாயோ 'வேண்டாம்... அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், "அன்பு உள்ளே வரட்டும்" என்றனர். அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர். உடன் குமரனின் அம்மா அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார். அன்பு சொன்னார், நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்.. மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்.

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும், தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

இன்றைய செய்திகள் 24.06.2025

* தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி பூங்காவாக மாறுகிறது கிண்டி ரேஸ் கோர்ஸ்! ரூ.4,832 கோடி மதிப்பிலான இந்த நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்.

*பொது இடங்களில் போதுமான அளவு கழிப்பறைகளை அமைத்து, அவற்றை தரமாக பராமரிக்க வேண்டும்," என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.

*UPSC முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20% க்கும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் பாராளுமன்றம் அச்சுறுத்தியுள்ளது எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $100 க்கு மேல் உயரக்கூடும். இது

விளையாட்டுச் செய்திகள்

*பிரயாக்ராஜில் (அலகாபாத்) முதல் முறையாக நடைபெறும் 20 வயதுக்குட்பட்ட தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 22 அன்று மேம்படுத்தப்பட்ட மதன் மோகன் மால்வியா மைதானத்தில் தொடங்கியது.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 22 வரை நடைபெறும்.

Today's Headlines

24.06.2025

Tamil Nadu Government Announces Guindy Race Course to be converted into a park, A green park will be built on this land worth Rs. 4,832 crore.

"The Madras High Court has instructed the Tamil Nadu government to construct sufficient number of toilets in public places and maintain them to a standard," it said.

Tamil Nadu government announcement regarding UPSC Incentive of Rs. 25,000 for those who pass the first stage exam

Iran's parliament has threatened to close the Strait of Hormuz, which is crucial for more than 20% of global oil exports - a move that could send oil prices above $100 a barrel.

SPORTS NEWS

The first-ever National Junior Athletics Championship under 20 years of age in Prayagraj (Allahabad) began on June 22 at the upgraded Madan Mohan Malviya Stadium.

Led by captain Harmanpreet Kaur, with Smriti Mandhana as vice-captain, the Indian women's cricket team will play from June 28 to July 22.

தமிழ்த்துகள்

Blog Archive