கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 23, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம் ஜூன் 30

7th tamil model notes of lesson

lesson plan 2025 june 30

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

30-06-2025 முதல் 04-07-2025

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

அணிநிழல் காடு – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

6.பக்கஎண்

24 - 29

7.கற்றல் விளைவுகள்

T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் (வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.

8.திறன்கள்

          செய்யுளின் வருணனைப் பகுதிகளைப் படித்துச் சுவைத்தல்.

9.நுண்திறன்கள்

          காடுகளும் காட்டுஉயிர்களும் நாட்டின் உயிர்நாடி என்பதைப் புரிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_59.html

          https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_66.html

          https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-7th-tamil-kaadu-unit-2-term-1.html

          https://tamilthugal.blogspot.com/2021/06/7th-tamil-appadiye-nirkattum-antha-maram.html

https://tamilthugal.blogspot.com/2022/06/kavignar-raja-marthandan.html

11.ஆயத்தப்படுத்துதல்

          காட்டின் மரத்தின் பயன்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          காடு, மரம் குறித்து மாணவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

                   காடு மலர்கள், நிழல், காய்கனிகள் போன்றவற்றைத் தரும், மயில் நடனமாடும், பன்றி கிழங்கு உண்ணும், பாம்பு கலங்கும், நரி ஊளையிடும், யானை நடைபோடும், குயில் கூவும், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் அலையும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          காட்டின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          காணி அளவு நிலத்தில் தூண்கள், மாடங்களுடன் அழகிய மாளிகை கட்டி, கிணறும் இளநீர் தரும் தென்னையும் நிலவொளியும் குயிலின் ஓசையும் இளந்தென்றலும் வேண்டும் என பாரதியார் விரும்புவதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          நாவற்பழ மரம், காக்கை, குருவி, மைனா, கிளிகள், அணில்கள், சுட்ட பழங்கள், பழம் பொறுக்கும் தங்கச்சிகள், வௌவால் கூட்டம், கிளியாந்தட்டின் சுவாரசியம், பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்ட மரம் – கவிதையின் உணர்ச்சிப் பெருக்கை மாணவர்களுக்கு உணர்த்துதல்.

          இயற்கையின் மரத்தின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.






          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          காடு பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          காட்டைக் குறிக்கும் வேறு பெயர்களை அறிதல்.

          கவிதையை உணர்வுடன் மாணவர்களை வாசிக்கச் செய்தல்.

          உங்கள் பகுதிகளில் உள்ள மரங்களின் பெயர்களை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       விடுதி என்னும் சொல்லின் பொருள் யாது?

                   காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

ந.சி.வி – காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை

எழுதுக.

                   பொருள் கூறுக.

                   நச்சரவம், ஈன்று, கொம்பு.

உ.சி.வி –      காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?

                   பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          உவமைக் கவிஞர் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          ராஜமார்த்தாண்டன் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          மரத்தின் பெருமைகளைத் தொகுத்தல்.

          ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக 5 தொடர்கள் எழுதுக.


தமிழ்த்துகள்

Blog Archive