கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 07, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் pdf திருவாரூர் மாவட்டம் 10th tamil model exam question paper thiruvarur district

பதிவிறக்கு/DOWNLOAD

அறிவுசால் ஔவையார் ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 விரிவானம் தமிழ்க்கட்டுரை


6th TAMIL AVVAIYAR VIRIVANAM UNIT 1 KATTURAI

அறிவுசால் ஔவையார் ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 விரிவானம் இயல் 1 விடை pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


6th tamil virivanam arivu saal avvaiyar question answer

அறிவுசால் ஔவையார் ஆறாம் வகுப்பு தமிழ் விரிவானம் பருவம் 2 இயல் 1 விடை

6th tamil virivanam arivu saal avvaiyar question answer

அறிவுசால் ஔவையார்

கடையேழு வள்ளல்களில் ஒருவன் அதியமான் நெடுமான் அஞ்சி. ஆத்திசூடி தந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனையில் தங்கியிருந்து தமிழ்ப் பணி செய்து வந்தார். காட்டு வளத்தைக் கண்டு மகிழச் சென்ற அதியமான் அரிய வகை கருநெல்லிக்கனி ஒன்றை, தானே பறித்துவந்து ஔவையாருக்குக் கொடுத்தான். அதன் சுவையைப் பாராட்டியபடியே உண்டு மகிழ்ந்தார் ஔவையார். ‘அதை உண்டவர்கள் நோய் நொடியின்றி நீண்டகாலம் வாழ்வார்கள்’, என்று அமைச்சர் கூறக் கேட்டு அதிர்ந்தார் ஔவையார். நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய அதியமான் தான் உண்ணாமல் எனக்குக் கொடுத்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு அவரோ ‘புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது; ஆனால், என்னைப்போன்ற ஒரு அரசன் இறந்து போனால், வேறு ஒருவர் அரசராகிவிடுவார்’, என்று கூறினான். ’ஔவையாரின் நாவில் பிறக்கும் தமிழ் என்றும் நிலைபெற்று வாழும் அதில் அதியமானின் பெயரும் ஒட்டி இருக்கும்; அதுவே தனக்கு மகிழ்ச்சி’, என்று அவன் கூறியதைக் கேட்டு ஔவையார் உள்ளம் மகிழ்ந்தார்.   தமிழ்த்துகள்

          ஒருநாள் அதியமான் முகத்தில் கவலையோடு இருப்பதைக் கண்ட ஔவையார் காரணம் கேட்டார். மன்னன் தொண்டைமான் தன் நாட்டின் மீது படையெடுத்து வர இருப்பதாகச் செய்தி அனுப்பியதைக் கூறினார். யானையானது தன்மீது ஏறிக் குதித்து விளையாடும் சிறுவர்களிடம் பணிந்து அன்பு காட்டும்; அதே யானை போர்க்களத்தில் பகைவர்களைப் பந்தாடும். அதுபோல, புலவர்களிடம் அன்பு காட்டும் அதியமானும் போர்க்களத்தில் பகைவர் படையை வெருண்டு ஓடச் செய்வது வழக்கம். பிறகு ஏன் பயப்படுகிறாய்? என்று அதியமானிடம் கேட்டார். அதற்கு அதியமான்,' ஒவ்வொரு போரின் போதும் எத்தனை உயிரிழப்புகள்? தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தம்பி தங்கைகள் என எத்தனையோ பேரின் கண்ணீர் ஒவ்வொரு போர் வெற்றிக்குப் பின்னாலும் மறைந்து இருக்கிறது’. எனவே, இந்தப் போரைத் தவிர்த்தால் என்ன? என்று கேட்டான். அன்பிற் சிறந்த அதியமானே! உன் உள்ளம் எனக்குப் புரிந்தது. இப்போதே தொண்டைமானிடம் சென்று இந்தப் போர் ஏற்படாதவாறு பேசித் தடுக்கிறேன் என்றார். தன் வீர உணர்வுக்கும் தன் மனதிற்கும் சிறிதும் இழுக்கு ஏற்படாமல் ஔவையார் நடந்துகொள்வார் என்பதில் அதியமானுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.  தமிழ்த்துகள்

          தொண்டைமான் தன் படைத் தலைவரிடம் படைவீரர்களும் போர்க் கருவிகளும் ஆயத்தமாக இருக்கின்றனவா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது ஔவையார் அவைக்குள் நுழைந்தார். சமாதானம் பேசி போரை நிறுத்த வேண்டி தூது வந்த ஔவையே வருக! என்றான் தொண்டைமான்.  வரவேற்பைப் பார்த்தால் என் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தோன்றுகிறதே என்றார் ஔவை. பகைவர் நாட்டிலிருந்து வந்தாலும் தமிழ்ப் புலவரை வரவேற்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தொண்டைமான் கூறினார். தமிழ்த்துகள்

தமிழின்மீது அன்புடையவன் தொண்டைமான் என்பதை அறியும் போது தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே என்றார் ஔவை. போர்க் கருவிகளைப் பார்வையிடுவதற்காக படைக்கலக் கொட்டிலுக்கு அவரைக் கூட்டிச் சென்றான் தொண்டைமான். வில், அம்பு, வேல், ஈட்டி, வாள், கேடயம், மழு என எத்தனை கருவிகள் எத்தனை வகைகள் எத்தனை எண்ணிக்கை! பார்க்கும்போதே வியப்பாக இருக்கிறது. புத்தம் புதிதாக நெய் பூசப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டுக் காட்சியளிக்கின்றது என்று புகழ்ந்தார் ஔவையார். தமிழ்த்துகள்

அதியமானின் படைக்கருவிகள் பற்றிச் சொல்லுங்களேன் என்று தொண்டைமான் கேட்டார். அதியமானின் படைக் கருவிகள் எல்லாம் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன்  நுனி ஒடிந்தும் கூர்மழுங்கியும் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன. இவ்வளவு அழகாக அடுக்கி வைக்கப்படவில்லை என்றார். ஔவையாரின் சொற்கள் தொண்டைமானைக் குழப்பி விட்டன. அதன்மூலம் அதியமான் பல்வேறு போர்களில் பகைவர்களை வெற்றி கொண்டவன். பலம் மிகுந்த அவனோடு இதுவரை போரில் ஈடுபடாத தான் மோதினால் அதிக இழப்பு ஏற்படும் என்பதைக் குறிப்பால் உணர்த்திய ஔவையாரைப் பாராட்டினான் தொண்டைமான். போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும் என்று கூறி விடைபெற்றுச் சென்றார் ஔவையார்.                               தமிழ்த்துகள்

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி.

எட்டாம் வகுப்பு தமிழ் பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் வினாடிவினா 8th tamil M.G.R ONLINE QUIZ ONE WORD EXAM

தேர்வு/EXAM

Saturday, February 05, 2022

மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம் பேச்சுப் போட்டி தமிழ் கட்டுரை ULLATCHI NIRVAKAM SPEECH

மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தமிழ் பேச்சுப்போட்டி கட்டுரை pdf

பதிவிறக்கு/DOWNLOAD

மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தமிழ்ப் பேச்சு கட்டுரை MAKKAL IYAKKA VALARCHIYIL ULLATCHI NIRVAKAM TAMIL SPEECH COMPETITION

மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம்

‘இந்தியாவின் எதிர்காலம் அதன் கிராமங்களின் கைகளில்  தான் உள்ளது’, என்றார் மகாத்மா காந்தியடிகள். 200 ஆண்டு காலம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் இந்திய மண்ணில் வளர்ச்சி என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ஒரு பக்கம் நன்கு வளர்ந்துவிட்ட நகரங்கள்; மறுபக்கம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள்உள்ளாட்சி நிர்வாகத்தை எப்படி அமைப்பது அனைத்து மக்களுக்கும் அரசின் திட்டங்கள் எப்படி கொண்டு சேர்ப்பது என்ற கேள்வி ஆட்சியாளர்களின் முன் எழுந்தது. உலகுக்கே பண்பாட்டையும் நாகரிகத்தையும் கற்றுக்கொடுத்த நம் முன்னோர் சோழர் காலத்திலேயே குடவோலை முறை மூலம் மக்களாட்சியை நிலைநாட்டி இருக்கிறார்கள். 1947இல் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாரதி கண்ட கனவை நனவாக்கி விட்டோம். 1950இல் நமக்கென்று இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததோடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக நாம் உயர்ந்து விட்டோம். ஆனால் அதன் நிர்வாகம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் உதவின. அரசியலமைப்புச் சட்டத்தின் 11 ஆவது அட்டவணையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 29ஆவது பட்டியலின்படி பொருளாதார மேம்பாடு சமூக நீதி போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மாநில சட்டமன்றங்களில் அதிகாரம் வழங்கப்பட்டது. உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ரிப்பன் பிரபு 1882 இல் தன் திட்டமான தலசுய ஆட்சித் திட்டம் மூலம் 1688 இல் அமைக்கப்பட்ட சென்னை மாநகராட்சியில் நிர்வாகத்தை நடத்திக் காட்டினார். இன்றைக்கு ஏறத்தாழ 1875 கோடி ரூபாய் வருமானம் கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியாக சென்னை உருவாகியுள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 1992 ஏப்ரல் 24ஆம் நாள் நடைமுறைக்குக் கொண்டு வந்த பஞ்சாயத்து ராஜ் திட்டம் தற்போதைய நம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது. இதன்படி மூன்றடுக்கு ஊராட்சி முறை அமைக்கப்பட்டது. அதாவது மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி. நகரப் பகுதிகளை மாநகரம், நகரம், பேரூராட்சி என்று மூன்றாக வகுத்து உள்ளாட்சி நிர்வாகம் அமைக்கப்பட்டது.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு என்பது வள்ளுவர் வாக்கு. அனைத்து வளங்களையும் தேடாமல் கொண்டிருக்கும் நாடே சிறந்த நாடு என்று கூறியுள்ளார். அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதிகள், கல்வி இவை அனைத்து கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் தற்போது இருபத்தி ஒரு மாநகராட்சிகள் 123 நகராட்சிகள் 529 பேரூராட்சிகள் 385 ஊராட்சி ஒன்றியங்கள் 12524 கிராம ஊராட்சிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் திரு நரேந்திர சிங் தோமர் அவர்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுகாதாரம் கண்டிப்பாக பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் திறந்தவெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காகக் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெண்கள் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. 35 மாநிலங்களில் சுமார் 699 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஆறு லட்சம் கிராமங்கள் திறந்தவெளி மலம் கழிக்கப் படாத சுகாதாரமான கிராமங்களாக உருவாகியுள்ளன. பெண்களின் பங்கு உள்ளாட்சியில் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை அரசு கருத்தில் கொண்டு பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 2011 உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் முப்பத்தி எட்டு சதவீதம் வெற்றி பெற்றனர். 2016 உள்ளாட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப புதுமைப்பெண்கள் போட்டிபோட்டு பல்வேறு துறைகளிலும் கோலோச்சி வரக்கூடிய காலம் இது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் சுற்றுச்சூழல், சுற்றுலா மேம்பாடு, வேளாண்மை, நீர்ப்பாசனம், கிராமப்புற பெண்கள் பாதுகாப்பு மற்றும் வசதி, சுய தூய்மை இவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட்டு கிராமப்புற வளர்ச்சி தூண்டி விடப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளில் விதிக்கப்படும் வீட்டு வரி, கேளிக்கை வரி, தொழில் வரி, குடிநீர் வரி, விளம்பர வரி போன்றவை மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 24ஆம் நாளை தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் ஆக நாம் கொண்டாடி வருகிறோம். அதுமட்டுமல்லாது சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி விருதுகள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. சிறப்பாகச் செயல்படும் மாநகராட்சிக்கு 25 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் சிறப்பாகச் செயல்படும் முதல் மூன்று நகராட்சிகளுக்கு முறையே 15, 10, 5 லட்சங்கள் பரிசுத் தொகையாகவும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பேரூராட்சிகள் முறையே 10, 53 லட்சங்கள் பரிசுத் தொகையாக சான்றிதழுடன் வழங்கப்படுகின்றன. 2007, 2008 இல் நமக்கு நாமே திட்டம் தொடங்கப்பட்டு கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. 75 விழுக்காடு அரசு நிதி மூலம் மாநகராட்சி ஆணையர் ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மூலமாக நிதி பங்களிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்பது மட்டுமல்ல எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கணினி மயமாகும் திட்டங்களும் மின்னல் வேகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலமாக பிரதமர் இக்ராம் சுவராஜ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஊராட்சி இயக்கம் நடைமுறையில் உள்ளது. 2006இல் தொடங்கப்பட்ட தேசிய மின் ஆளுமைத் திட்டம் பல்வேறு பொது சேவை மையமாக கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஓங்கி ஒலிக்கும் கருத்தாக அதன் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கிராமசபைக் கூட்டங்கள் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 முக்கியமாக நான்கு நாட்களிலும் தேவைப்படும் காலங்களில் அவசர கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் ஆட்சி என்று தத்துவம் வரையறை செய்தார் முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். மத்திய மாநில அரசுகள் மூலைமுடுக்கெல்லாம் தன் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளை நாடி நரம்புகளாக இருந்து செயல்படுகின்றன என்றால் அது மிகையாகாது. ஜல் சக்தி அமைச்சகம் மூலம் குடிநீர் பங்கீடு உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கும் சமூக வேறுபாடு கருதாமல் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் மக்களின் மனசாட்சியாக உள்ளாட்சி தொடரும். அது மக்களாட்சியின் உண்மைப் பொருளை உலகெங்கும் பறை சாற்றும்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் என்ற உலகப் பொதுமறை காட்டும் ஆட்சியாளர்களால் நாடு செழிக்கட்டும் நாமும் சிறப்போம்!

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.

Friday, February 04, 2022

ஒன்பதாம் வகுப்பு தமிழ் கல்வியில் சிறந்த பெண்கள் வினாடிவினா 9th tamil online quiz kalviyil sirantha pengal test exam

தேர்வு/Exam

மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தமிழ் பேச்சுப் போட்டி கட்டுரை ULLATCHI NIRVAKAM SPEECH

மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம் - பேச்சுப்போட்டி pdf MAKKAL IYAKKA VALARCHIYIL ULLATCHI NIRVAKAM PECHU POTTI pdf

 பதிவிறக்கு/DOWNLOAD

மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம் - பேச்சுப்போட்டி MAKKAL IYAKKA VALARCHIYIL ULLATCHI NIRVAKAM PECHU POTTI

 

உள்ளாட்சி மக்களின் சுய ஆட்சி என கனவு கண்டவர் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். அவரின் கனவை நிறைவேற்றும் விதமாக இன்று இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது உள்ளாட்சி.

பழந்தமிழர் காலம் தொட்டே உள்ளாட்சி அமைந்திருந்ததை நாம் அறிந்து கொள்ள முடியும். உத்திரமேரூர் கல்வெட்டு, மக்கள் குடவோலை எனும் குடும்பு முறை அமைப்பைச் செயல்படுத்தியது பற்றிக் குறிப்பிடுகிறது. அம்முறை இன்றைய வார்டு முறை இருப்பதைப்போல அமைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. வெளிப்படையாகவும் மக்கள் பங்கேற்கும் ஒரு சிறந்த முறையாகவும் பண்டைய காலத்தில் உள்ளாட்சி அமைந்திருந்தது பாராட்டுக்குரியது.

இந்தியாவில் உள்ளாட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் ரிப்பன் பிரபு என்று பெயர் பெற்ற சார்ஜ் பிரடரிக் சாமுவேல் ராபின்சன் என்பவர் ஆவார். இவர் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த நிர்வாகச் சீர்திருத்தம், இவரின் மக்கள் பணி போன்றவற்றால் ரிப்பன் எங்கள் அப்பன் என்று அழைக்கப்பட்டார்.

1688 இல் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி தான் இன்றைய இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பாகும். நம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு முறை நகர்ப்புறம், கிராமப்புறம் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்றும் கிராமப் புறத்தை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்றும் மூன்று அடுக்கு முறையில் பிரிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி எனும் சுயாட்சி சிறப்பாக இருக்க வேண்டும், அதன் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1492 இல் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மக்களாட்சியின் ஆணிவேராகத் திகழும் கிராம சபை உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது கிராம மக்களின் கருத்தை அறிந்து கிராமத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகிறது. இது ஆண்டுக்கு 4 முறை சனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாள்களிலும் அவசர காலங்களில் தேவைக்கேற்பவும் சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டப்படுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி வளர்ச்சியின் ஒரு மைல்கல்லாக நமக்கு நாமே திட்டம் அமைந்துள்ளது. கிராம மக்களின் பங்களிப்போடு அரசின் பங்களிப்புடன் கிராமத்தின் வளர்ச்சிப் பணிக்கு இத்திட்டம் பெரிதும் உதவி வருகிறது. மகளிர் சுய உதவிக் குழு எனும் மகத்தான திட்டம் கிராமப்புற, நகர்ப்புற மகளிரின் பொருளாதார வேலைவாய்ப்பைப் பெருக்கக் கிடைத்த நல்ல வரம் என்றே கூறலாம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் சுயதொழில் செய்து வேலைவாய்ப்பையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்றனர்.

வையத் தலைமை கொள் என்பதற்கு ஏற்ப பெண்கள் இன்று பல்வேறு மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சி நிர்வாகம் செய்கின்ற நிலைக்கு உயர்ந்து இருப்பதைக் காண முடிகிறது. தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் முப்பத்தி எட்டு சதவீதம் இடங்களில் வெற்றி பெற்றனர் என்பது சிறப்பான ஒன்று. 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் செய்துள்ளது.

உள்ளாட்சி என்ற அமைப்பு இருப்பதாலேயே அந்தந்த ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்கின்றனர். மேலும் மக்களின் தொடர்பு அதிகம் இருப்பதால் உடனடியான தீர்வு கிடைக்கிறது. ஊரக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் கொடுக்கக்கூடிய உன்னதமான திட்டமாக ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அமைந்துள்ளது. பெண்கள், முதியோர், ஏழைகள் என பலதரப்பட்ட மக்களுக்கும் 100 நாள்கள் வேலை உறுதியை வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதில் உள்ளாட்சியின் பங்கு உன்னதமானது.

மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், குடியிருப்பு, சாலை, தெருவிளக்கு போன்றவற்றை உடனுக்குடன் உள்ளாட்சி நிறைவேற்றி வைக்கிறது. மேலும் ஏழை எளிய மக்கள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனுடையோர் என பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உள்ளாட்சி தன்னுடைய பங்களிப்பைச் செய்து வருவதால் உள்ளாட்சி மக்களுக்குக் கிடைத்த ஒரு நல்லாட்சியே. மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகத்தின் பங்கு இன்றியமையாதது.

உள்ளாட்சி காப்போம், மக்களாட்சியை நிலைநிறுத்துவோம்.

கு.முருகேசன்,

இடைநிலையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழ்நாட்டில் காந்தி 6th tamil model notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் 7th tamil model notes of lesson

9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 5 குடும்ப விளக்கு, இலக்கணம் 9th tamil model notes of lesson

9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 5 வீட்டிற்கோர் புத்தகசாலை 9th tamil model notes of lesson

 
இணைய வளங்கள்

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன் 8th tamil model notes of lesson M.G.R

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 7, 2022 tenth tamil model notes of lesson

வகுப்பு - 10
பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல் தேர்வுக்குப் பயிற்சி அளித்தல்
திருப்புதல் பயிற்சி வினாக்கள்
* அன்னை மொழியே - மனப்பாடப்பாடலை எழுதுக.
*தரமற்ற உணவு குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலருக்குப் புகார் கடிதம் எழுதுக.
*சான்றோர் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
*வசன கவிதை - குறிப்பு வரைக.
*தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?
*பூவின் நிலைகளை விளக்குக.
*கோபல்லபுரத்து மக்கள் கதையில் வரும் அன்னமய்யா கதாப்பாத்திரத்தைக் குறித்து எழுதுக.
*வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
*எப்பொருள் எனத் தொடங்கும் குறளை எழுதுக.
*தரும் என முடியும் குறளை எழுதுக ।
*உவமையணியை விளக்குக.
*கலைச்சொல் தருக.
Storm
Whirlwind
Vowel
Discussion
Conversation
*உயிரளபெடை எத்தனை வகைப்படும் அவை யாவை?
*பாரதியார் - குறிப்பு வரைக.
* பண்புத்தொகையை விளக்குக.
*அடுக்குத்தொடர் என்றால் என்ன?

Tuesday, February 01, 2022

புணர்ச்சி இலக்கணம் வகுப்பு 9 இயல் 6 தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test punarchi ilakkanam one word exam unit 6

நாச்சியார் திருமொழி வகுப்பு 9 இயல் 6 தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test nachiyar thirumoli one word exam unit 6

இராவண காவியம் வகுப்பு 9 இயல் 5 தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test ravana kaviyam one word exam unit 5

 

12ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் மதிப்பீட்டுத் தேர்வு 2022 வினாத்தாள் pdf 12th tamil question paper chengalpattu +2 hsc

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ்த்துகள்

Blog Archive