கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, August 05, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு 2022 விருதுநகர் வினாத்தாள் விடைக்குறிப்பு 10th tamil first mid term exam question paper virudhunagar answer key

 

விருதுநகர் மாவட்டம்

முதல் இடைப்பருவத் தேர்வு ஆகஸ்ட் 2022

பத்தாம் வகுப்பு

தமிழ்


வினாத்தாள்/QUESTION PAPER



விடைக்குறிப்பு

உரிய விடையைத் தேர்ந்து எழுதுக.                                                        8x1=8

1.ஆ. மணி வகை

2.அ ஜூன் 15

3.இ தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடம் உண்டு

4.அ கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

5.ஈ சிற்றூர்

6.ஆ தமிழழகனார்

7.இ அன்மொழித்தொகை

8.அ வேற்றுமை உருபு

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதுக                                  2x2=4

9 வசன கவிதை

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

10.      நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரை, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் எனக்கூறி வழிப்படுத்துதலாகும்.

 

11 பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் 4

உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகு வஞ்சி, பள்ளிப் பறவைகள்

ஏதேனும் நான்கு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதுக                                  2x2=4

12 தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்

கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை

ஏதேனும் நான்கு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

 

13 விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்கள்

நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்

முகம் மலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்

வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல்

விருந்தினர் மகிழும்படி பேசுதல்

 

14 காற்று வீசுகின்ற திசையைக் கொண்டு தமிழர்கள் காற்றுக்கு சூட்டியுள்ள வேறு பெயர்கள்

கொண்டல், கோடை, வாடை, தென்றல்

 

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை எழுதுக                                   3x3=9

15 தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள்

o   பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி.

o   கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட மண்ணுலகப் பேரரசு.

o   தென்னவனாம் பாண்டிய மன்னனின் மகள்.

o   உலகப்பொதுமறையாம் திருக்குறளின் பெரும் பெருமை.

o   பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என விரிந்தமை.

o   நிலைத்த சிலப்பதிகாரமாய், அழகிய மணிமேகலையாய்ச் சிறப்புப் பெற்று விளங்குவது.

o   பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகிறார் பாவலரேறு.

 

16 எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்! சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்! மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்! மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்!

அவர்கள் இன்சொல் கூறி, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்.

உறவினர் போல உங்களுடன் பழகுவார்கள்", என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப் படுத்துவதாக பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

17 இளம் பயிர் வகை ஐந்து

o   நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.

o   தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.

o   மாங்கன்று தளிர்விட்டது.

o   வாழைக்குருத்து மழையின்றி வாடியது.

o   பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது.

 

18 தமிழர்கள் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகள்

புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குறைந்து விட்ட காலத்தில் ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர்.

படிப்படியாக உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.

வீட்டில் நடைபெற்ற விழாக்கள் காலப்போக்கில் திருமணக் கூடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டன.

பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழி அனுப்பும் வரை திருமண ஏற்பாட்டாளர்களே செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காண முடிகிறது.

 

ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை எழுதுக                                                 1x6=6

 

19. காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது தமிழ். தமிழின் சொல்வளம் போல் வேறு எம்மொழியிலும் இல்லை.

தாவரத்தின் அடி வகை       – தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி.

கிளைப்பிரிவுகள்                – கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு.

காய்ந்த அடி, கிளை           – சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை.

இலை வகை                     – இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு.

கொழுந்து வகை                – துளிர், முறி, குருத்து, கொழுந்தாடை.    

பூ                                     – அரும்பு, போது, மலர், வீ, செம்மல்.

பிஞ்சு வகை                      – பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல்.

குலை வகை                     – கொத்து, குலை, தாறு, கதிர், அலகு, சீப்பு.         

கெட்டுப்போன காய் வகை   – சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு.  

பழத்தோல் வகை               – தொலி, தோல், தோடு, ஓடு, குடுக்கை, மட்டை, உமி, கொம்மை.

மணி வகை                       – கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை.         

இளம் பயிர் வகை               – நாற்று, கன்று, குருத்து, பிள்ளை, குட்டி, மடலி, பைங்கூழ்.     

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரைகள் நூலின் ஒரு துளியே மேற்கண்ட அனைத்தும்.

ஒரு மொழி பொதுமக்களாலும், அதன் இலக்கியம் புலமக்களாலும் அமையப்பெறும்.

வளர்ந்துவரும் இன்றைய சூழ்நிலைக்கேற்ப கன்னித்தமிழ் கணினித்தமிழ் ஆகிவிட்டது.

பழைமையான நூல்கள் இணையத்தளத்தில் வலம்வருகின்றன.

சொல்லாடல், கவியரங்கம், பட்டிமன்றம் என வலைத்தளம் இன்று இளைஞர்கள் தளமாய் மாறிவிட்டது.

ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என்று கவிதைவடிவம் புது உருவம் எடுத்திருக்கிறது.

தொடுதிரை, சுட்டி, நேரலை, இயங்கலை, உலவி என்று புதிய பெயர்கள் கொண்டு நான்காம் தமிழ் மிளிர்கிறது.

புதிய சொல்லாக்கம் செயற்கை நுண்ணறிவு பெருகிவரும் இக்காலத்திற்கு அவசியமானதாகும்.

மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்று இனி எவரும் சொல்லக் கூசும் நிலை ஏற்படட்டும்.

அகராதிகள் புதிய சொற்களால் நிரம்பி வழியட்டும்.

 

20. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது. நப்பூதனாரின் வரிகள் கார்காலச் செய்திகளைக் கவி மழையாய்ப் பொழிந்துள்ளன.

நிமிர்ந்த மாஅல் போல

வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடைய திருமால் குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்கும் கொண்ட பேருருவமாய் உயர்ந்து நின்றது மழை மேகம்.

கடலின் குளிர் நீரைப் பருகி பெருந்தோற்றம் கொண்டு வளமாய் எழுந்து மலையைச் சூழ்ந்து வேகத்துடன் பெருமழை பொழிகிறது.

விரிச்சி

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள் ஆரவாரமற்ற ஊர்ப் பக்கம் சென்று தெய்வம் தொழுது ஊரார் சொல் கேட்பர்.

தலைவிக்கு நற்சொல் கேட்கும் பொருட்டுச் சென்றபோது பெண்கள் மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் தெய்வத்தின் முன் தூவி நின்றனர்.

நற்சொல் கேட்டல்

"வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓடிவர, உன் தாய்மார் வருவர்; உன் துயரம் தீரும் வருந்தாதே!" என்று பசியால் வாடிய இளங்கன்றுக்கு இடை மகள் நற்சொல் கூறினார்.

"நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே தலைவியே!", என ஆற்றுப்படுத்தினர் முது பெண்டிர்.

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதுக                                  2x2=4

21.தொடர் மொழி

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி மொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர் மொழியாகும்.

எடுத்துக்காட்டு - கண்ணன் வந்தான்,

மலர் வீட்டுக்குச் சென்றாள்.

 

22.தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்

அவை வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத் தொகை, அன்மொழித்தொகை.

 

23 பாரதியார் கவிஞர் - பெயர்ப் பயனிலை,

நூலகம் சென்றார் - வினைப் பயனிலை,

அவர் யார் - வினாப் பயனிலை.

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                  3x1=3

 

24 இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக

மலை மாலை

மலையில் இருந்து மாலை நேரத்தில் இறங்கினேன்

 

25 பொருள் கூறுக

அடவி – காடு, திரள், மிகுதி.

ஆர்கலி – கடல், வெள்ளம், மழை.

 

26 கலைச்சொல் தருக

அ.பெருங்காற்று

ஆ.மெய் எழுத்து

தமிழாக்கம் செய்க                                                                           1x3=3

நீ ஒருவனிடம் அவனுக்குப் புரிந்த மொழியில் பேசினால் அது அவன் மூளைக்குச் செல்லும், நீ அவனிடம் அவனின் தாய்மொழியில் பேசினால் அது அவனின் இதயத்தை அடையும் – நெல்சன் மண்டேலா

மொழி ஒரு கலாச்சாரத்தின் வழிகாட்டி. அது மக்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை உனக்கு அறிவிக்கும். – ரீட்டா மே பிரௌன்


ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை எழுதுக                                                 1x6=6

28 சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை, பொருளுரை, மேற்கோள், முடிவுரை

29. புயலிலே ஒரு தோணி

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.


அடிபிறழாமல் எழுதுக                                                                       1x3=3

முல்லைப்பாட்டு

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்.                                   - நப்பூதனார்.

 

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.

 

தமிழ்த்துகள்

Blog Archive