பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
22-08-2022 முதல் 26-08-2022
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
மணற்கேணி – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
நீதிவெண்பா, திருவிளையாடற்
புராணம்
6.பக்கஎண்
106-110
7.கற்றல் விளைவுகள்
கல்வி சார்ந்த கருத்துகளைச் செய்யுள் வாயிலாக அறியவும், சுவைக்கவும், இன்றைய
கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்.
8.திறன்கள்
கல்வியின்
முக்கியத்துவம் அறிந்து போற்றும் திறன்.
இறைவனும் அறிவைப்
போற்றுபவன், புலவரது அறிவுப் பெருமையை உணர்த்துபவன் என்பதை உணரும் திறன்.
9.நுண்திறன்கள்
கல்வியைப்
போற்றிக் கற்க விரும்பும் திறன்.
கற்றோரின்
பெருமையை உணரும் திறன்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
https://tamilthugal.blogspot.com/2019/05/10.html
https://tamilthugal.blogspot.com/2020/07/neethi-venba.html
https://tamilthugal.blogspot.com/2021/06/5-10th-tamil-online-test-neethi-venba.html
https://tamilthugal.blogspot.com/2021/06/5-10th-tamil-online-test.html
https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_28.html
11.ஆயத்தப்படுத்துதல்
கல்வியின்
முக்கியத்துவத்தைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த
புராணங்களின் பெயர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
சதாவதானம் என்பதை
விளக்கிக் கூறுதல்.
திருவிளையாடற்
புராணம், பரஞ்சோதி முனிவர் பற்றிய குறிப்புகளைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
செய்குதம்பிப்
பாவலரின் திறமையைக் கூறி, அவர் குறித்த தகவல்களைக் கூறுதல். கல்வியின் அவசியத்தை
எடுத்துரைத்து மாணவர்களுடன் கலந்துரையாடல். கல்வியின் அவசியம் அறிந்து போற்றிக்
கற்க உறுதியெடுக்கச் செய்தல்.
கற்றறிந்த புலவருக்காக இறைவனே
இடம்பெயர்ந்த புராணக் கதையைக் கூறுதல். பாடல் வரிகளை வாசித்துப் பொருளை
விளக்குதல். இடைக்காடனாரின் வேண்டுதலுக்கு இறைவன் செவிசாய்த்ததையும்
குலேசபாண்டியன் சிறப்பு செய்த முறையையும் விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கற்றலின் இன்றியமையாமையை விளக்குதல். கல்வியின் பெருமைகளை
எடுத்துரைத்தல்.
15.மதிப்பீடு
LOT – சதம் என்பதன் பொருள்
..............................
பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் .....................................
MOT
– செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை
முழக்கத்தொடர்களாக்குக.
மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்?
HOT
– கல்வியின் பெருமைகளைப் பட்டியலிடுக.
கல்வி பற்றிய பழமொழிகளை அறிந்து
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தை நாடகமாக எழுதுக.
கல்வியின் பெருமைகளை உணர்த்தும் கவிதையைப் படைக்க.