எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
29-08-2022 முதல் 02-09-2022
2.பாடம்
தமிழ்
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
உடலை ஓம்புமின் –
விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
தலைக்குள் ஓர்
உலகம்
6.பக்கஎண்
59-62
7.கற்றல் விளைவுகள்
T-807 கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள்,
நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு
வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட
செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.
8.திறன்கள்
மூளையின்
செயல்பாடுகளை அறியும் திறன்
9.நுண்திறன்கள்
மூளையின்
செயல்பாடுகள் பற்றிய புதுமையான செய்திகளை அறிந்து மகிழும் திறன்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/3-thalaikul-or-ulagam-8th-q.html
https://tamilthugal.blogspot.com/2022/08/8th-tamil-thalaikul-or-ulagam.html
https://tamilthugal.blogspot.com/2021/08/3-thalaikul-or-ulakam-8th-virivanam.html
https://tamilthugal.blogspot.com/2022/08/3-8th-tamil-mindmap-unit-3_23.html
11.ஆயத்தப்படுத்துதல்
உடல்
உள்ளுறுப்புகளைக் கூறச்செய்தல்.
மூளையின்
செயல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
மனித மூளையின்
செயல்பாடுகளை அறிமுகப்படுத்துதல்.
சுஜாதாவை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
மூளையின் அமைப்பு,
உணவு, உடல் இயக்கம், வலதும் இடதும், உணர்வுகளும், நினைவாற்றலும், தன்னுணர்வும்,
அன்றாட நிகழ்வுகளும், கற்றலும் குறித்த விரிவான தகவல்களை மாணவர்களுக்குப் புரிய
வைத்தல்.
மூளையின் முக்கியத்துவம்
குறித்த தகவல்களைக் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
மூளை குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – சுஜாதாவின் இயற்பெயர்
..............................
MOT – மூளையின் செயல்பாடுகள்
குறித்து எழுதுக.
HOT
– மூளை குறித்து நீ கேட்க
விரும்பும் 5 வினாக்களை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
மூளை குறித்த பிற தகவல்களை இணையம் மூலம் அறிதல்.