ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
29-08-2022 முதல்
02-09-2022
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
எந்திர உலகம் – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
ஒளி பிறந்தது
6.பக்கஎண்
64-68
7.கற்றல் விளைவுகள்
T-612 பல வடிவங்களில்
எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல்
ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.
8.திறன்கள்
நவீன அறிவியல் பற்றி அறியும் திறன்
9.நுண்திறன்கள்
வளர்ந்துவரும் அறிவியல், தொழில் நுட்பங்கள்
பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறும் திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/1-3-oli-piranthathu-6th-katturai.html
https://tamilthugal.blogspot.com/2022/08/1-3-6th-tamil-mindmap-term-1-unit-3_23.html
https://tamilthugal.blogspot.com/2021/08/1-3-oli-piranthathu-6th-katturai-vina.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த நவீன தகவல் தொழில்நுட்ப
வல்லுநர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
நவீன அறிவியலின் வளர்ச்சியைக் கூறிப்
பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
அப்துல் கலாம் அவர்களை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
அப்துல் கலாம் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்கள் குறித்து விளக்குதல். கலாம்
அவர்கள் மகிழ்ந்த நிகழ்ச்சியை மாணவர்களுக்குக் கூறுதல். சுதந்திர இந்தியாவின்
வெற்றிகளாக கலாம் கருதுவதை விளக்குதல். மாணவர்களே முதல் விஞ்ஞானிகள் என்பதை
உணர்த்துதல்.
வெற்றியை அடையும் வழிகளைப்பற்றி கலாம் அவர்கள் கூறியதை விளக்குதல். அப்துல்
கலாம் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறுதல். நேர்காணல் குறித்து அறிதல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அறிவியல் சிந்தனையை மாணவர்களிடம் உருவாக்குதல். நேர்காணல் குறித்து அறியச்
செய்தல்.
15.மதிப்பீடு
LOT – கலாம் அவர்களுக்குப் பிடித்த நூல்
..............................
MOT
– வெற்றியை அடையும் வழிகளாக அப்துல் கலாம் அவர்கள் கூறியவை எவை?
HOT
– அப்துல் கலாமிடம் உனக்குப் பிடித்த குணங்களை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
அப்துல் கலாமிடம் நீ கேட்க விரும்பும் வினாக்கள் 5 எழுதுக.