ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
22-08-2022 முதல் 26-08-2022
2.பாடம்
தமிழ்
3.அலகு
4
4.பாடத்தலைப்பு
எட்டுத்திக்கும்
சென்றிடுவீர் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
ஓ, என் சமகாலத்
தோழர்களே, உயிர்வகை
6.பக்கஎண்
103-106
7.கற்றல் விளைவுகள்
இலக்கியங்கள் காட்டும், தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள், சமூகத் தேவைகளுக்கு
ஏற்ப மேம்பட்டு வருவதை உணர்தல்.
தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின் வகைப்பாட்டினை அறிவியல் செய்திகளோடு
ஒப்பிடல்.
8.திறன்கள்
அறிவியல் அறிவை
வளர்க்கும் திறன், முன்னோரின் அறிவியல் அறிவை அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
தமிழர் அறிவியலறிவை,
சிறப்பை அறிந்து பெருமிதம் கொள்ளும் திறன்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/01/9-4-9th-tamil-online-test-o-en-samakala.html
https://tamilthugal.blogspot.com/2021/12/9th-tamil-o-en-samakala-tholarkaley.html
https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_24.html
https://tamilthugal.blogspot.com/2018/08/9.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-4-9th-tamil-online-test-uyirvakai.html
https://tamilthugal.blogspot.com/2018/07/9_56.html
https://tamilthugal.blogspot.com/2018/07/9_22.html
11.ஆயத்தப்படுத்துதல்
நவீன அறிவியலின்
கண்டுபிடிப்புகளைக் கூறச்செய்தல்.
இன்றைய
இளைஞர்களின் கடமைகள் குறித்துக் கூறச் செய்தல்.
கவிஞர் வைரமுத்து குறித்து
அறிந்த தகவல்களைக் கேட்டல்.
12.அறிமுகம்
தொல்காப்பியத்தின்
பெருமையைக் கூறுதல்.
கவிஞர்
வைரமுத்துவை அறிமுகப்படுத்துதல்.
இளைஞர்களே நாளைய
தூண்கள் என்பதை எடுத்துரைத்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
அறவியலும்
அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ்ச் சமூகம். எனவே அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும்
வளர்க்கப்பட வேண்டும் என்பதைத் தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர் என்பதை
விளக்குதல்.
வைரமுத்துவின் கவிதையை
வாசித்துப் பொருள் கூறுதல். இளைஞர்களின் கடமைகளாகக் கவிஞர் கூறுவனவற்றை
மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கரிகாலனின் பெருமையைக் கணிப்பொறியில் பொருத்தும்
ஆவலை அறியச்செய்தல். ஏவுகணையிலும் தமிழ் எழுத வேண்டிய அவசியத்தை உணர்த்துதல்.
தொல்காப்பியத்தின்
பெருமைகளைக் கூறுதல். ஆறறிவு பகுப்பு குறித்த தகவல்களை எடுத்துக்காட்டுகளுடன்
எடுத்துரைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழரின் அறிவியல் அறிவை விளக்குதல். உயிரினங்களைப்
புலன்களின் எண்ணிக்கை அடிப்படையில் பகுத்த சிந்தனையை விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – வைரமுத்து பிறந்த
மாவட்டம் ..............................
தொல்காப்பியம் ....................................
அதிகாரங்களை உடையது.
MOT
– நான்கறிவு உயிரினத்திற்கு உதாரணங்கள் தருக.
கரிகாலனின் பெருமை என்ன?
HOT
– தமிழர்களின் பெருமைகளைப் பட்டியலிடுக.
அறிவியல் செய்திகள் அடங்கிய
பழமொழிகளை அறிந்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
விமான நிலையத்தில் நான் – கற்பனையாகக் கதை ஒன்றினை எழுதுக.
தமிழர்களின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.