கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 16, 2022

8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 தமிழர் மருத்துவம் 8th model notes of lesson tamil unit 3

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

22-08-2022 முதல் 26-08-2022

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

உடலை ஓம்புமின் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழர் மருத்துவம்

6.பக்கஎண்

53-58

7.கற்றல் விளைவுகள்

T-819 அன்றாட வாழ்வில் நிகழும் குறிப்பிடத்தக்க அனுபவங்களை (நிகழ்வுகள், சூழல்கள்) புத்தாக்க முறையில் வெவ்வேறு வழிகளில் (சமூக ஊடகங்கள், நோட்டு, புத்தகம், பதிப்பாளருக்குக் கடிதம் எழுதுதல்) எழுதுதல்.

8.திறன்கள்

தமிழர் மருத்துவ முறைகளை அறிந்து பயன்படுத்தும் திறன்

9.நுண்திறன்கள்

தமிழர் மருத்துவத்தின் தொன்மை, சிறப்பை அறிந்து பெருமிதம் கொள்ளும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/08/3-8th-tamil-mindmap-unit-3_16.html

https://tamilthugal.blogspot.com/2021/05/8th-tamil-urainadai-ulagam-tamilar.html

https://tamilthugal.blogspot.com/2021/02/thuritha-unavum-arokiya-seerkedum-tamil.html

11.ஆயத்தப்படுத்துதல்

மருத்துவத்தின் வகைகளைக் கூறச்செய்தல்.

நோய்கள் அதிகரிக்க என்ன காரணம் எனக் கேட்டல்.

உடல் நலத்திற்கு நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழர் மருத்துவத்தை அறிமுகப்படுத்துதல்.

நல்ல உணவுமுறை குறித்து விளக்கி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பழந்தமிழர்கள் அறிந்த மருத்துவமுறைகளை மாணவர்களுக்குக் கூறி மாணவர்கள் அறிந்த தற்கால மருத்துவமுறைகளைக் கூறச் செய்தல். சித்தர்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். மருத்துவத்தில் பக்க விளைவுகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          நோய்கள் குறித்தும் இன்றைய மருத்துவம் குறித்தும் மாணவர்களுடன் உரையாடுதல். உடல்நலம் காக்க நாம் செய்ய வேண்டியவை குறித்து மாணவர்களிடம் வினவல். நோய் வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சுத்தம், சுகாதாரம், தமிழர் மருத்துவம் குறித்துக் கூறுதல். நல்ல  உணவுப் பழக்கத்தின் அவசியத்தை விளக்குதல்.

15.மதிப்பீடு

          LOT – உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ..............................

                   மருந்து என்பதே .................................... நீட்சியாக இருக்கிறது.

          MOT – மருத்துவம் எப்போது தொடங்கியது?

                   நோய்கள் பெருகக் காரணம் என்ன?

          HOT – நோயின்றி வாழ நீ மேற்கொள்ளும் செயல்களைப் பட்டியலிடுக.

                   மருத்துவரிடம் நீ கேட்க விரும்பும் 5 வினாக்களை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மூலிகைகளின் மருத்துவ குணங்களைப் பட்டியலிடுக.

தமிழர் மருத்துவத்தின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive