ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
22-08-2022 முதல் 26-08-2022
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
நாடு அதை நாடு –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
தேசியம் காத்த
செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
6.பக்கஎண்
58-62
7.கற்றல் விளைவுகள்
T-710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில
சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
8.திறன்கள்
நாட்டு
விடுதலைக்குப் பாடுபட்ட தலைவரைப் பற்றி அறியும் திறன்
நாட்டுக்குழைத்த
தலைவர்களின் வரலாறு மூலம் தமிழர் வீரத்தை அறியும் திறன்
9.நுண்திறன்கள்
நாட்டுப்பற்றில்
சிறந்து விளங்கிய ஆளுமைகள் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும்
திறன்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/08/blog-post_16.html
https://tamilthugal.blogspot.com/2020/04/pasumpon-muthurama.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-7th-tamil-muthuramalinga-thevar.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த விடுதலைப்
போராட்டம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழர் வீரத்தைக்
கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
முத்துராமலிங்கத்தேவர்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவரின் இளமைப்பருவம் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். அவரின்
பல்துறை ஆற்றல்கள் குறித்துக் கூறி, அவை பற்றி மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.
வாய்ப்பூட்டுச்சட்டம் குறித்து விளக்குதல். நேதாஜி குறித்து மாணவர்கள் அறிந்த
தகவல்களைக் கூறச் செய்தல்.
முத்துராமலிங்கத்தேவரின்
பேச்சாற்றல் குறித்து விளக்குதல். அவரின் தேர்தல் வெற்றிகளைப் பட்டியலிடுதல்.
குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு, ஆலயநுழைவுப் போராட்டம் பற்றி விரிவாக
விளக்குதல். சிறைவாசம், பெண்கள்மேல் மதிப்பு போன்ற நிகழ்வுகளைக் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
விடுதலைப் போராட்டங்களை அறியச் செய்தல். தமிழரின் வீரத்தை
உணரச் செய்தல். விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை உணர்தல்.
15.மதிப்பீடு
LOT – முத்துராமலிங்கத்தேவர்
முதன்முதலில் உரையாற்றிய இடம் ..............................
முத்துராமலிங்கத் தேவர்
நடத்திய இதழின் பெயர் ....................................
MOT
– முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
வாய்ப்பூட்டுச் சட்டம் குறித்து எழுதுக.
HOT – நல்ல தலைவருக்கான பண்புகளாக நீ எண்ணுபவற்றை எழுதுக.
உனக்குப் பிடித்த
விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை அறிந்து எழுதுக.
முத்துராமலிங்கத்தேவர் குறித்த தகவல்களையும் பெருமைகளையும்
இணையம் மூலம் அறிதல்.