கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, September 26, 2022

வகுப்பு 10 தமிழ் காலாண்டு வினாத்தாள் விருதுநகர் விடைக்குறிப்பு 10th tamil quarterly exam answer key virudhunagar

விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்
 காலாண்டுப் பொதுத் தேர்வு 
செப்டம்பர் 2022 
பத்தாம் வகுப்பு 
தமிழ் 
பகுதி 1 
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் 15 X 1 = 15

1 மணிவகை 
2 அன்மொழித்தொகை 
3 ஜப்பான் 
4 இன்மையிலும் விருந்து 
5 புலி ஆட்டம் 
6 குறிஞ்சி மருதம் நெய்தல் நிலங்கள் 
7 இன மொழி விடை 
8 திணை 
9 6 
10 எம் + தமிழ் + நா 
11 சிற்றூர் 
12 அருளைப் - மருளை 
13 அருமை + துணை 
14 நீதி வெண்பா 
15 செய்கு தம்பிப் பாவலர்

பகுதிII

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடை அளிக்க 4 X 2 = 8

21 வது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும் 
16 விடைகளுக்கு ஏற்ற வினா அமைக்க 
அ.எதில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது?
ஆ.கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் யார்?
 
 *பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்* 

17 ஒரு சொல்லோ சொற்றொடரோ இரு பொருள் பட வருவது சிலேடை எனப்படும்.
எடுத்துக்காட்டு 
தமிழறிஞர் கி.ஆ.பெ விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது இவர் *பல்துறை வித்தகர்* என்று குறிப்பிட்டார். இது தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். 

 *பொருத்தமான எடுத்துக்காட்டு எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்* 

18 உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை. இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

19 செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.
 மனித இனத்தை இயற்கைப் பேரிடரால் ஏற்படும் அழிவுகளில் இருந்து காப்பாற்ற செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதர்கள். 

 *பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்* 

20 இன்றைய வளரும் நாடுகளில் அறிவியலை உருவாக்க அரசியலை உருவாக்க பொருளியலை உருவாக்க சமூகவியலை உருவாக்க இலக்கியத்தை உருவாக்க மொழிபெயர்ப்பு உதவுகிறது. 

21 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
 இன்மை புகுத்தி விடும்.

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 5 X 2 = 10


 22 கலைச்சொற்கள் 

அ.உயிரெழுத்து 

ஆ.சின்னம் 

23 பகுபத உறுப்பிலக்கணம் அமர்ந்தான் 

அமர்+த்(ந்)+த்+ஆன்

அமர் - பகுதி 
த் - சந்தி
த் - ந் ஆனது விகாரம் 
த் - இறந்தகால இடைநிலை 
ஆன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி.

 24 தண்ணீரைக் குடி, 
தயிரை உடைய குடம் 

காலையில் தண்ணீர் குடித்தேன். 

தயிர்க் குடம் எடுத்து வந்தாள்.

 *பொருத்தமாக எழுதி இருந்தால் மதிப்பெண் வழங்கலாம்* 

25 பெரும்பொழுது ஆறு வகைப்படும். 
அவை கார்காலம்
 குளிர்காலம்
 முன்பனிக்காலம் 
பின் பனிக் காலம்
 இளவேனிற்காலம் 
முது வேனில் காலம் 

26 விதியை மாற்ற இயலாது என்று வீதியில் விழுந்த பெரியவர் கூறினார்.

 மலையைச் சுற்றி மாலை நேரத்தில் நடப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும்.

 *பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்* 

27 
அ.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

ஆ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார். 

28 
அ. முத்துப்பல்

உவமைத்தொகை 

சிறுமி முத்து போன்ற பல்வரிசை தெரிய சிரித்தாள். 

ஆ.கீரிபாம்பு

உம்மைத் தொகை 

கீரியும் பாம்பும் சண்டை போட்டதை வேடிக்கை பார்த்தனர் 

 *பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்* 

பகுதி III

 ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க 2 X 3 = 6

29 
மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழுந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்யக் கணினிக் கரங்கள் நீள்கின்றன.
 கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் முதலீடு செய்து தேவைப்படும்போது வெளிப்படுத்துவதில் மூளைக்கு இணையாகத் தொழில்நுட்பமும் முன்னேறி உள்ளது.
 அதேவேளையில் மனிதனை சோம்பேறியாகவும் மூளையின் சிந்தனைத் திறனுக்கு ஓய்வு கொடுப்பது போலவும் இதனால் ஏற்படும் கதிர்வீச்சுகளுக்கு நம் சந்ததியினர் பாதிப்பதாகவும் உணர்ந்தால் இன்னும் சற்று கவனத்தோடு நாம் அறிவியல் கண்டுபிடிப்புகளை கையாள வேண்டும் என்றே தோன்றுகிறது. 


30 சோலைக் காற்று மின்விசிறிக் காற்று உரையாடல் 

சோலைக்காற்று- எனைத் தேடி வருபவர்களுக்கு உயிர் வளி மிகுந்த காற்றைத் தருகிறேன்.

மின்விசிறிக் காற்று - இயலாதவர்களுக்கும் கூட இதமான காற்றைத் தருபவன் நான்.

 சோலைக்காற்று - என்னைத் தூது விட்டன தமிழ் இலக்கியங்கள்.

 மின்விசிறிக் காற்று - என்னை மேம்படுத்தி விற்பனைப் பொருளாக்கிவிட்டனர்.

 சோலைக்காற்று - நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடப்பதாகக் கவிஞர் எனைப் பாடியிருக்கிறார்.

 மின்விசிறிக் காற்று - என்னால் மின்சாரம் இல்லாமல் இயங்க முடியாது, உன் போல் விடுதலைப் பறவையாய் வீதி உலா வர முடியாது. 


31 
அ.கடவுச்சொல்லும் கைரேகையும் 

ஆ.அதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

இ. ஒளிப்படக் கருவி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

 எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க 2 X 3 = 6


32 தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள் 

பழமைக்குப் பழமையாகத் தோன்றிய நறுங்கனி 
கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசு ஆண்ட மண்ணுலகப் பேரரசு 
தென்னவனாம் பாண்டிய மன்னனின் மகள் 
உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெரும் பெருமை
 பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு என விரிந்தமை 
நிலைத்த சிலப்பதிகாரமாய் அழகிய மணிமேகலையாய் சிறப்பு பெற்று விளங்குவது
 பொங்கியெழும் நினைவுகளால் தலைவணங்கி வாழ்த்துகிறார் பாவலரேறு.

 33 கபிலரின் நண்பரான இடைக்காடனார் தாம் இயற்றிய கவிதையை குலேசபாண்டிய மன்னன் முன்பு பாட அதை பொருட்படுத்தாமல் மன்னன் அவரை அவமதித்தான் 

மனம் வருந்தி இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் 

மன்னனின் பிழை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி வட திரு ஆலவாயில் சென்று தங்கினார் 

இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

 இறைவன் கோவிலுக்குத் திரும்பினார் 

அடி பிறழாமல் எழுதுக 

34 பெருமாள் திருமொழி வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் 
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ 
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே
 - குலசேகர ஆழ்வார் 

கம்பராமாயணம் தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்
 கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்
 தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் 
வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ
- கம்பர்

ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க 2 X 3 = 6

35 கண்ணே கண்ணுறங்கு 
விளித்தொடர் 
காலையில் நீ எழும்பு 
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
 மாமழை பெய்கையிலே 
உரிச்சொல் தொடர் 
மாம்பூவே கண்ணுறங்கு 
விளித்தொடர் 
பாடினேன் தாலாட்டு 
வினைமுற்றுத் தொடர் 
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு
அடுக்குத்தொடர்  

36 இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோள் ஆற்று நீர்ப் பொருள்கோள் 

முயற்சி செல்வத்தை உண்டாக்கும் 
முயற்சி இன்மை வறுமைக்குள் தள்ளிவிடும் என்று நேரிடையாக ஆற்றின் நீரோட்டத்தைப் போல் பொருள் கொள்வதால் ஆற்று நீர்ப் பொருள்கோள் 

37 குறட்பாவில் பயின்று வரும் அணி வஞ்சப்புகழ்ச்சி அணி 

புகழ்வது போலப் பழிப்பதும் 
பழிப்பது போலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணி 
இதில் நினைத்ததைச் செய்வதில் கயவர்களைத் தேவர்களுக்கு நிகராகக் கூறிப் புகழ்வது போலப் புகழ்ந்து 
பின் கயவர்கள் மனம் போனபோக்கில் சென்று அழிவர் என பழிப்பதால் வஞ்சப்புகழ்ச்சி அணி

 பகுதி IV அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5 X 5 = 25

38 
அ.பாநயம் பாராட்டுதல் 
மோனை
 நிலாவையும் - நேர்பட 
குலாவும் - கோல 
உலாவும் - ஓட்டி 
பலாவின் - பாடுவதும் 

எதுகை 

நிலாவையும் - குலாவும் 
உலாவும் - பலாவின் 

இயைபு 
வெறிபடைத்தோம் - மகிழ்ந்திடுவோம் 

அணி உயர்வு நவிற்சி அணி 

 *பொருத்தமான நயங்கள் பாராட்டியிருப்பின்  மதிப்பெண் வழங்கலாம்* 

 ஆ.மதிப்புரை 
நூலின் தலைப்பு 
நூலின் மையப் பொருள் 
மொழி நடை
 வெளிப்படுத்தும் கருத்து
 நூலின் நயம் 
நூல் கட்டமைப்பு 
சிறப்புக்கூறு
 நூல் ஆசிரியர்

 *பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்* 

39 
அ.அனுப்புநர் 
பெறுநர் 
விளி 
பொருள் 
செய்தி 
இப்படிக்கு 
நாள், இடம் 
உறைமேல் முகவரி 


ஆ.ஊர், நாள் 
விளி 
செய்தி 
இப்படிக்கு 
உறைமேல் முகவரி 

40 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 *பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்*

 41 படிவம் பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

42 
அ.மொழிபெயர்க்க 

 பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்கக் கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது 
பால் போன்ற வெண் மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன
 வண்ணமயமான பறவைகள் தங்கள் காலைப் பொழுதை இசை தாளத்துடன் தொடங்குகின்றன 
அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன
 பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன 
காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசும் இனிமையான நறுமணம் பரப்பும் 

ஆ.
இன் சொல் வழி தீய சொல் வழி 
 *பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்*

பகுதி V
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்க 3 X 8 = 24

43
அ. *பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்*

ஆ. *பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்*

44 அ, ஆ
முன்னுரை
பொருளுரை
முடிவுரை

 *பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்*

45 அ, ஆ
முன்னுரை
பொருளுரை
முடிவுரை

 *பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்*



செ.பாலமுருகன்,
தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம்,
விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive