ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
10-10-2022 முதல் 14-10-2022
2.பருவம்
2
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
கண்ணெனத் தகும் - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
மூதுரை, துன்பம் வெல்லும் கல்வி
6.பக்கஎண்
2-6
7.கற்றல் விளைவுகள்
T-614 புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.
8.திறன்கள்
கல்வியின் சிறப்பையும் பயனையும் அறியும் திறன்
9.நுண்திறன்கள்
கற்றவரின் சிறப்பை அறிந்துகொள்ள முயலும் திறன்.
கல்வி கற்று பண்பாட்டோடு நிற்கும் திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2018/10/6.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-2-6th-tamil-moothurai-term-2-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/06/avvaiyar.html
https://tamilthugal.blogspot.com/2018/10/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2018/10/6_1.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-2-6th-tamil-thunbam-vellum-kalvi.html
11.ஆயத்தப்படுத்துதல்
கல்வியின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த நற்பழக்கங்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
கல்வி கற்றவரின் பெருமையைக் கூறுதல்.
நல்லொழுக்கப் பண்பாடுகளைக் கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
மன்னனையும் கற்றோனையும் ஒப்பிட்டு மூதுரை கூறும் கல்வியின் சிறப்பைக் கூறுதல்.
மூதுரையை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல்.
வெற்றி, விருது, பெருமை, புகழுடன் வாழக் கவிஞர் கூறும் அறிவுரைகளை மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
கல்வியின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். புகழோடு வாழும் வழிமுறைகளை அறியச் செய்தல், பின்பற்றுதல்.
15.மதிப்பீடு
LOT – நெறி என்பதன் பொருள் ..............................
நாம் .................................... சேரக்கூடாது
MOT – கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
HOT – கல்வியின் சிறப்புகள் குறித்து எழுதுக.
உங்கள் வருங்காலக் கல்வி குறித்த திட்டங்களைச் சிந்தித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
கல்வி பற்றிய பழமொழிகள் 5 எழுதுக.
கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.