ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
10-10-2022 முதல் 14-10-2022
2.பருவம்
2
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அறிவியல் ஆக்கம் - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
கலங்கரை விளக்கம், கவின்மிகு கப்பல்
6.பக்கஎண்
2-7
7.கற்றல் விளைவுகள்
T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் (வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.
8.திறன்கள்
சங்கப் பாடல்களைச் சீர்பிரித்துப் படிக்கும் திறன்.
சங்கப் பாடல் கருத்தை உணரும் திறன்.
9.நுண்திறன்கள்
கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பத்தை அறிதல்.
காற்றின் துணைகொண்டு கப்பல் செலுத்திய நம் முன்னோர் திறனை அறிதல்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/06/1-2-7th-tamil-kalankarai-vilakkam.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-2-7th-tamil-kavinmiku-kappal-q.html
11.ஆயத்தப்படுத்துதல்
சங்க இலக்கியப் பாடல் வகைகளைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த கப்பல் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழர்களின் கடற்பயணத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
கலங்கரை விளக்கம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
கலங்கரை விளக்கம் பாடலை விளக்குதல். உவமையை உணர்தல். தமிழர்களின் தொழில்நுட்பத்தை உணர்த்துதல். கப்பல் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்து, கவின்மிகு கப்பல் பாடலைக் கூறுதல். இன்றைய தமிழ்ச் சொல் வளங்களை மாணவர்களுக்குக் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், சங்கப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
சங்க இலக்கியங்களை அறியச் செய்தல். தமிழர்களின் தொழில்நுட்பத்தை அறிதல். தமிழரின் கடற்கலன் குறித்த அறிவை உணரச் செய்தல்.
15.மதிப்பீடு
LOT – வங்கம் என்னும் சொல்லின் பொருள் ..............................
கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன ....................................
MOT – மரக்கலங்களைத் துறைமுகம் நோக்கி அழைப்பது எது?
நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?
HOT – கலங்கரை விளக்கத்தின் பயன்களை எழுதுக.
கப்பல் பயணம் குறித்து உனது கருத்துகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
சங்ககாலப் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
கப்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.