எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
10-10-2022 முதல் 14-10-2022
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
குழலினிது யாழினிது - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
திருக்கேதாரம், பாடறிந்து ஒழுகுதல்
6.பக்கஎண்
94 - 97
7.கற்றல் விளைவுகள்
T-811 படித்த பிறகு பல்வேறு எழுத்தியல் நடைகளையும் முறைகளையும் (விவரண முறை வரைபடமுறையில் உணர்ச்சிப் பூர்வமான நடை, இயற்கை அழகின் வருணனை முறை போன்றவை) இனங்காணுதல்.
8.திறன்கள்
இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறியும் திறன்.
சங்ககாலத் தமிழரின் பண்பாடு பற்றிய கருத்துகளை உணரும் திறன்.
9.நுண்திறன்கள்
தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை இலக்கியங்கள் வழி அறியும் திறன்.
சங்ககாலத் தமிழரின் உயர்குணங்கள் பற்றிய கருத்துகளை உணரும் திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/05/5-8th-tamil-thiruketharam-kuruvina-vidai.html
https://tamilthugal.blogspot.com/2022/06/sundarar.html
https://tamilthugal.blogspot.com/2021/05/5-8th-tamil-padarinthu-olukuthal.html
https://tamilthugal.blogspot.com/2020/07/kalithogai.html
11.ஆயத்தப்படுத்துதல்
இசை குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
ஒழுக்கமாக வாழ நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தேவாரம் பாடிய சுந்தரரை அறிமுகப்படுத்துதல்.
எட்டுத்தொகையில் கலித்தொகையை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் திருக்கேதாரம் பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். திருக்கேதாரச் சிறப்புகள் குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த இசை குறித்துக் கூறச்செய்தல். நற்பண்புகள் பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த நல்ல பழக்கங்களைக் கூறச்செய்தல். பண்பு நலன்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
தேவாரம், கலித்தொகை குறித்துக் கூறுதல். சமூகத்தில் நல்ல மனிதனாக வாழும் நிலை குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – பண் என்பதன் பொருள் ..............................
மறைபொருளைக் காத்தல் .................................... எனப்படும்.
MOT – திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
HOT – திருவிழாக்களில் நீ பார்த்த இசைக் கருவிகளைப் பட்டியலிடுக.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நற்பழக்கங்களைப் பட்டியலிடுக.
தேவாரத்தின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.