கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, November 05, 2022

போட்டிகள் நிறைந்த உலகம் தமிழ்க் கட்டுரை பேச்சு competition world tamil essay speech potikal ulagam

 

போட்டிகள் நிறைந்த உலகம்

அன்னைத் தமிழே! அருளோவியமே! என்னை இங்கு பேச வைத்த ஏந்திழையே! உன்னை வணங்கித் தொடங்குகிறேன் அருள்வாய் தாயே! செந்தமிழ் செப்பிடும் தென்பாண்டி மண்டலத்தில் முந்தித் தவமிருந்து பிறந்த சான்றோரே! என் போன்றோரே! அனைவருக்கும் இனிய வணக்கம்.

முப்பது கோடி முகமுடையாள் -உயிர்                                           தமிழ்த்துகள்

மொய்ம்புற ஒன்றுடையாள்என்று பாடினான் முண்டாசுக்கவி பாரதி அன்று. பாரதத்தாயோ இன்று நூற்று நாற்பது கோடிக்கும் மேலாய்ப் பிள்ளைகளைச் சுமந்து கொண்டு மூச்சு முட்டிக் கிடக்கிறாள். அப்படி என்றால் உலக மக்கள் தொகை பற்றிக் கேட்கவும் வேண்டுமோ? 700 கோடி என்கின்றன புள்ளி விவரங்கள்.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இச்சகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. புற்றீசல் போல பொல பொலவென கலகலவென மக்கள் பெருக்கம் ஏற்பட்டுவிட்டது. போட்டி ... எங்கும் போட்டி... எதிலும் போட்டி... எதற்கும் போட்டி.                                தமிழ்த்துகள்

                யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அன்றே கணியன் பூங்குன்றன் உலக ஒற்றுமை பேசினார். இன்றும் உலக நாடுகள் ஒற்றுமை பேசுகின்றன, தங்கள் மடியில் ஒவ்வொருவரும் அணு ஆயுதத்தைக் கட்டிக்கொண்டு.

 வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்                                              தமிழ்த்துகள்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்றார் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூடராசாப்பக்கவிராயர். இயற்கை, மனிதனின் கையில் சிக்கிச் சிக்கி நிறம் மாறிக் கிடக்கிறது இன்று. காரணம் போட்டி.. போட்டி.. எங்கும் போட்டி ..எதிலும் போட்டி.. எதற்கும் போட்டி.

நிலாவைக் காட்டிச் சோறூட்டிய காலம் மாறி நிலவுக்கே சென்று சோறூட்டும் காலம் வந்துவிட்டது. விண்ணியல் வளர்ச்சியை விண்ணையும் தாண்டிய தங்கள் பலத்தை ஒவ்வொரு நாடும் நிரூபித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளது. ஏன்? பயம்.. பயம்.. எங்கும் பயம் எதிலும் பயம். எங்கே தன்னைவிட முன்னேறி விடுவார்களோ என்று பயம்.                       தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள், வினாத்தாள்கள், இலக்கண, இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள், கையேடுகள் போன்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம்.

                சர்வைவல் ஆப் த பிட்டெஸ்ட் என்று வலுத்தது வாழும் என்கிறது அறிவியல்.  அப்படியானால் அன்று தொழிற்புரட்சி இங்கிலாந்தில் ஏற்பட்ட போது காலனியாதிக்கத்தால் உலகெங்கும் வெள்ளையனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது, இன்று? கணினிப் புரட்சி. செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி மண்ணை ஆராயும் போட்டி. இயற்கை வளங்களைப் பங்கிடுவதில் போட்டி. கல்வியைத் தனதாக்கிக் கொள்வதில் போட்டி.

 வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்தராலும்                     தமிழ்த்துகள்

கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு படாது என்று எண்ணும் எழுத்தும் கற்றதன் விளைவு? இன்று அறிவுப் போட்டி. இது அழிவுப் போட்டியா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். உலக செஸ் சாம்பியன் கார்ஸ் சூப்பர் கணினியை வீழ்த்தி விட்டார் என்றால் அவரையே வெற்றி கொண்டு விட்டான் தமிழ்நாட்டில் பிரக்ஞானந்தா. அப்படியானால் மனிதன் படைத்த சூப்பர் கம்ப்யூட்டரா? இறைவன் படைத்த மனித மூளையா? எது பெரிது ? நீங்களே விடை சொல்லுங்கள்!                              தமிழ்த்துகள்

                யாளியும் டயனோசரும் எங்கு போயின? அதனை அறிய எலும்புக்கூடுகளாவது கிடைக்கின்றன இன்று. ஆனால் மனிதன் அணு ஆயுதங்களால் சாம்பலாவான். எப்படி அடையாளம் காணப்போகிறார்கள் நாளை நம் இனத்தை? காரணம் போட்டி.. போட்டி எங்கும் போட்டி.. எதிலும் போட்டி.. எதற்கும் போட்டி.

ஊழையும் உப்பக்கம் காண்பர் என்று உறுதிபடச் சொல்லிவிட்டார் வள்ளுவர். தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தருமாம். உள்ளங்கைக்குள் உலகை வைத்துக்கொண்டு சுற்றித் திரிகிறோம் நாம் ஒவ்வொருவரும். ஆம்! ஒவ்வொருவர் கைகளிலும் திறன் பேசி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. உட்கார்ந்த இடத்தில் மின்னணுப் பரிமாற்றம்; காணொலி மூலம் உலகளாவிய கல்வி. இத்தனை போட்டிகளுக்கு நடுவில் எப்படி வாழப் போகிறோம்?

பத்தாவது தடவையாக விழுந்தவனை

முத்தமிட்டுச் சொன்னது பூமி                                              தமிழ்த்துகள்

ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ ? என்கிறார் ஈரோடு தமிழன்பன் அவர்கள். நம் திறமையை சந்தேகிக்க வேண்டாம். நம்பிக்கையுடன் முன்னேறுவோம். நாம் விட்டில் பூச்சிகள் அல்ல! விளக்கில் தானே விழுந்து மடிவதற்கு. வானம்பாடிகள்! சுதந்திரமாய்ப் பறந்தபடி மழை நீரை உண்டு வாழ்வோம்!

                கருவாக்கி உருவாக்கி வளர்த்த தாய் தந்தையரை மதித்துப் போற்றுவோம்! உலகுக்கு நம்மை அடையாளம் காட்டும் ஆசிரியப் பெருமக்களை வணங்குவோம்!

 ஊதி அணைத்து விட நாம் ஒன்றும் அகல் விளக்குகள் அல்ல!

 சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள்!                                        தமிழ்த்துகள்

புயலுக்குத் தலைவணங்க நாம் ஒன்றும் புல்லல்ல!

எதற்கும் அஞ்சாத இமய மலைகள்!

கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள், வினாத்தாள்கள், இலக்கண, இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள், கையேடுகள் போன்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம்.

நம்பிக்கை விதைகளைத் தூவுங்கள்! போட்டிகள் நிறைந்த உலகத்தின் தலையெழுத்தை எழுதுவோம் வாருங்கள்!                                      தமிழ்த்துகள்

தேடிச் சோறு நிதம் தின்று பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி

வாடித் துன்பம் மிக உழன்று பலர்

வாடச் செயல்கள் பல செய்து நரை

கூடிக் கிழப் பருவமெய்திக் கொடுங்                                                                தமிழ்த்துகள்

கூற்றுக்கு இரையான பின் மாயும்

வேடிக்கை மனிதரைப் போலே நானும்

வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பாரதியின் சிந்தனை வரிகளை நமக்குச் சொந்தமாக்குவோம்! வாய்ப்புக்கு நன்றி. வருகிறேன் விடைபெறுகிறேன்!.           கவிஞர் கல்லூரணி முத்து முருகன் தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive