ஏழாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
20-02-2023 முதல் 24-02-2023
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஒப்புரவு ஒழுகு –
கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
அணி இலக்கணம்,
திருக்குறள்
6.பக்கஎண்
38 - 44
7.கற்றல் விளைவுகள்
T-712 பல்வேறு வகை படித்தலுக்கான செயல்பாடுகளில் அமைந்துள்ள
வெவ்வேறு சொற்கள், சொற்றொடர்கள், சொலவடைகள்
ஆகியனவற்றையும் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
8.திறன்கள்
பாடல்களில்
இடம்பெறும் அணிகளை அடையாளம் காணும் திறன் பெறுதல்.
திருக்குறள்
அறக்கருத்துகளை அறிதல்.
9.நுண்திறன்கள்
அணி நயம்
குறித்து அறிதல்.
நாடு, அரண்,
பெருமை பற்றிய திருக்குறள்களை அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2_82.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2_11.html
https://tamilthugal.blogspot.com/2022/01/3-2-7th-tamil-uruvaga-ani-ilakkanam-q.html
https://tamilthugal.blogspot.com/2020/08/7-3-2-7th-tamil-term-3-unit-2-ani.html
https://tamilthugal.blogspot.com/2020/04/yegathesa-uruvaga-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/uruvaga-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2021/02/3-2-thirukkural-kuru-vina.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த
பாடல்களைக் கூறச்செய்தல்.
அறிந்த திருக்குறள்களைப்
பொருளுடன் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
உருவகம் பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
திருக்குறளின்
பெருமைகளைக் கூறுதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
உவமை, உவமேயம், உவம உருபு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். உருவக அணி,
ஏகதேச உருவக அணி குறித்து விளக்குதல்.
உருவகம் குறித்து மாணவர்கள்
அறிந்த செய்திகளைக் கூறுதல். உதாரணங்களுடன் அணியை விளக்குதல். மாணவர்களை அணிக்கு
உதாரணங்களை உருவாக்கச் செய்தல். உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று
இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி என்பதை விளக்குதல்.
உவமைத் தொடர்களை உருவகங்களாக மாற்றச் செய்தல்.
வினைசெயல் வகை, அவைஅஞ்சாமை,
நாடு, அரண், பெருமை போன்ற அதிகாரங்களிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள குறள்களை
விளக்குதல். குறளின் பொருளையும் அணி நயத்தையும் விளக்குதல். குறள் கூறும்
அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அழகான நயங்கள் குறித்து விளக்குதல். குறளின் சிறப்புகளை
விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT –...............................
ஒரு நாட்டின் அரணன்று.
MOT
– உருவக அணியை விளக்குக.
HOT – நீங்கள் விரும்பும் குறள் குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீ அறிந்த உவமைகளை எழுதுக.
திருக்குறள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.