தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, September 29, 2023
Wednesday, September 27, 2023
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் pdf
10th social science quarterly exam question paper virudhunagar district English medium 2023
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் pdf
10th social science quarterly exam question paper virudhunagar district English medium 2023
Tuesday, September 26, 2023
ஏழாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு முதல் பருவ தொகுத்தறித்தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் 2023 pdf
7th first term summative assessment answer key
ஆன்மீக வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி தமிழ்க் கட்டுரை பேச்சு
Aanmiga valarchiye indiavin valarchi tamil speech katturai
ஆன்மீக வளர்ச்சியே
இந்தியாவின் வளர்ச்சி
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!
எல்லாம் வல்ல இறை அருளால் இந்தப் பொன்னான வாய்ப்பைத்
தந்த அன்னைத் தமிழுக்கு என் முதல் வணக்கம்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த
குடியாம் தமிழ்க் குடியில் பிறந்திட்ட பெருமையோடு ஆன்மீகத் தலைமை கொள்ளும் மக்களாட்சி
நாட்டில் வாழ்வதே சிறப்பு!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடமைத் தத்துவத்தை ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்குச் சொன்னவன் தமிழன். கணியன் பூங்குன்றனாரின் இத்தகைய வரி
போன்று உலகின் எந்தச் சிந்தனையாளரும் இதுவரை சொல்லியதில்லை.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
என் கடன் பணி செய்து கிடப்பதுவே என்றார் அப்பர் என்ற திருநாவுக்கரசர்.
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே
என்றார் தாயுமானவர்.
இவர்கள்தான் இந்தியாவின் புகழை உலகெங்கும் உயர்த்திப் பிடித்தவர்கள்.
மனிதனின் அறிவுத் தேடல் செல்வத்தைத் தந்தது; தொழில் வளத்தைத் தந்தது; அதிகாரப் போட்டியைத் தந்தது. அது போரில் முடிந்தது.
இந்தியாவின் ஆன்மீகத் தேடல் உள் ஒளி பெருக்கி ஜோதி வடிவில் இருக்கும் இறைவனை சாதாரண
மனிதனும் கண்டுகொள்ளும் சூட்சுமத்தை இவ்வுலகுக்கு அறிவித்தது. அதனால்தான் உலகின் மிகப்பெரும்
மதங்களான இந்து இஸ்லாம் கிருத்துவம் புத்தம் சமணம் ஆகிய அனைத்தும் ஆசிய கண்டத்திலேயே
தோன்றி வளர்ந்தன.
இந்தியாவிலிருந்து ஒரு துறவி வந்திருக்கிறார் என்பதைக் கூட அலட்சியமாகப்
பார்த்த அமெரிக்க மக்களுக்கு லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன் என்ற வழக்கமான அழைப்புகளுக்கு
நடுவே என் அன்புச் சகோதர சகோதரிகளே! என்று சுவாமி விவேகானந்தர் பேசும்போதே இந்தியாவின்
ஆன்மிகம் எப்படிப்பட்டது என்பதை அமெரிக்கா உணர்ந்துவிட்டது.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சீவனும் சிவனும் ஒன்றே என்று சொல்லக்கூடிய சைவமதமும் இங்கு உண்டு.
இறைவனோடு ஒன்றாகி கலந்து இப்புவியில் வாழ வேண்டும் என்பதைச் சொல்லும் வைணவமும் உண்டு.
மண்ணில் பிறக்கும் சக்தியோடு கலப்பதே இந்த மனித பிறப்பின் ரகசியம் என்று சொல்லும் சாத்தமும்
உண்டு. இயற்கைக்கு மிஞ்சிய பொருள் இவ்வுலகில் ஏதுமில்லை என்று சொல்லும் சவுரமும் உண்டு.
அழகியலில் மனதை பறிகொடுத்து முருகனை வழிபடும் கௌமாரமும் உண்டு. ஆதி முதல்வன் விக்னேஸ்வரனே
என்று சொல்லும் காணா பத்யமும் உண்டு. இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஸ்மார்த்தமும் உண்டு.
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று சொன்ன புத்தம்; உரு அற்ற நிலையில் இறைவனைக் காணும் சமணமும் இந்தியாவின் மிகப்பெரும் தத்துவங்களாக
உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றன. கிழடு தட்டியபின் புல்லை விரும்பும் சிங்கம் போன்றதல்ல
இந்தியத் தத்துவங்கள்.
வீரியம் உதிஷ்டானம்
மணிப்பூரகம்
அனாதகம்
விசுத்தி
ஆக்ஞா என்ற நிலைகளைக் கடந்து எஸகஸ்ராகாரம் என்று
சொல்லப்படக்கூடிய ஆயிரம் இதழ் விரித்த தாமரைகளாக மனிதனை இறைவனோடு ஒன்றச் செய்யும் யோக
சித்திகள் நிரம்பப்பெற்றது நம் பாரத பூமி.
நட்டகல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து முனுமுனென்று சொல்லும் மந்திரம்
ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவையை அறியுமோ?
என்று கேள்வி கேட்ட சித்தர்களும் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரையார்
கழற்கு என்
கை தான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி
உள்ளம்
பொய் தான் தவிர்ந்து உன்னை போற்றி சய சய போற்றி
என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே
என்று உள்ளம் உருகி உடல் நடுங்கி இறை சிந்தனையோடு
வாழ்ந்த மாணிக்கவாசகர் போன்ற ஞானிகளும் இந்தியாவின் சொத்தாக இருக்கிறார்கள்.
இறைவன் இருக்கிறார் வா நான் காட்டுகிறேன் என்று
நரேந்திரனிடம் சொன்னார் ராமகிருஷ்ண பரமஹம்சர். சக்தி வழிபாட்டில் தன்னை மறந்த நிலையை
இளைஞனான விவேகானந்தனுக்குப் போதித்த அந்த ஞானகுரு யாருக்கும் கிடைக்காத அதிசயம் தானே?
வேதங்களையும் உபநிடதங்களையும் பயின்ற எத்தனையோ
ரிஷிகள் இறைவனுக்கு அருகில் சென்று இருக்கிறார்கள்.
இறைத் தேடலில் தன்னை மறந்து பல்வேறு தத்துவங்களை நம் மண்ணுக்குத்
தந்திருக்கிறார்கள். காரல்மார்க்ஸ் தந்த தத்துவம் வெறும் நூறு ஆண்டுகளில் தோல்வியுற்று
விட்டது. அணுகுண்டைக் கண்டுபிடித்த காரணத்தினால் 1933 இல் அணு ஆராய்ச்சி செய்த ஜெர்மன்
நாட்டைச் சேர்ந்த ராபர்ட் ஓபன் ஹீமர் என்ற அறிவியல் அறிஞரின் கனவுத்தகர்ந்து விட்டது.
காரணம் அவர் அணுவைப் பிளக்கும் போது எழுந்த பேரொளியை ஜகத் ஜோதியாக பார்த்தார் இறைவன்.
ஆயிரம் சூரிய பிரகாசம் உடையவன் என்ற கீதை வரிகளோடு ஒப்பிட்டுப் பேசினார்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
இதைத்தான் கம்பரும்
அணுவைச் சத கூறிட்ட கோணிலும் உளன் என்று தன் விருத்தப்பாக்களில்
பொருத்தமாகச் சொல்லியுள்ளார்.
உலக நாடுகள் எல்லாம் இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும்
வண்ணம் நம் கல்வி முறை இருந்திருக்கிறது. பின் ஒரு காலத்தில் ஏற்பட்ட மந்த நிலையால்
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு தடுமாறி இருக்கிறோம்,
அணிமா என்பது உடல் உருவத்தை மிகச் சிறியதாக்குவது.
மகிமா என்பது உடல் உருவத்தை மிகப்பெரியதாக்குவது.
உடலைக் காற்று போல் மாற்றுவது லிபியா.
சுரிமா என்பது மலை போன்று உடலை அதிக எடை கொண்டதாக
கனமாக மாற்றுவது.
தன் வயப்படுத்துதல் பிராப்தி
பிற உடலோடு கூடுவிட்டு கூடு பாயும் வேலையைச் செய்வது
பிரகாமியம்.
தன் ஆணையை ஏற்று அத்தனை உயிர்களையும் செயல்பட
வைப்பது ஈசத்துவம்.
எவராலும் விரும்பப்படும் தன் வயத்தனாதல் வசித்துவம்
என்ற அட்டமா சித்திகளை நம் முன்னோர் பொக்கிஷமாய் தந்து இருக்கிறார்கள். காஞ்சிபுரத்திலிருந்து
கிளம்பிய போதிதர்மர் தான் சீனா சென்று ஜென் தத்துவமாக மாறி இருக்கிறார்.
பித்தாகரஸ் என்ற கணித மேதையை வடிவியல் கண்டுபிடித்தவராக மட்டுமே
உலகம் அறிந்திருக்கிறது. ஆனால் மறுபிறப்பு, மௌனம் என்ற மிகப் பெரிய கொள்கைகளைப் பரப்பியவராக
அவர் இருந்திருக்கிறார்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்த போது மிகப்பெரும்
துறவி ஒருவரை அலெக்சாண்டர் வந்திருக்கிறேன் என்னை வந்து பாருங்கள் என்று தூதுவரிடம்
சொல்லிவிட்டு இருக்கிறார். அலெக்சாண்டர் மிகப்பெரிய போர் வீரர் யுத்த நுணுக்கங்களை
அறிந்தவர், நானோ துறவி, சித்தாந்த சன்மார்க்க நெறிமுறைகளை கடைப்பிடித்து இறை வழிபாட்டில்
திளைப்பவன். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை
என்று தீர்க்கமாக கூறியிருக்கிறார். காரணம் ஒரு மாவீரனுக்கு எதிராக இப்படிப்பட்ட சுதந்திரமான
கருத்துகளைப் பேச வைத்திருக்கிறது இந்திய மண்.
சப்தரிஷிகள் ஆக சந்திரனையும் தத்தாத்திரையரையும் ஆத்திரேயரையும்
பெற்றெடுத்த அத்திரி முனிவர், மூன்று ஆயுள் காலத்தையும் வேதம் படிக்க எடுத்துக்கொண்ட
பரத்வாசர்,
நாராயணனைத் தகப்பனாகக் கொண்ட சமதக்கனி, அறத்தைப் போற்றி வளர்த்த கௌதமன், மனுவைப் பெற்றெடுத்த காசியபர், அருந்ததி இணையரான வசிட்டர், சிங்கம் புலி என்ற இறைவனின் படைப்புக்கு இணையாக
நாய், பூனை என்ற மிருகங்களைப் படைத்த விசுவாமித்திரர் ஆகிய ஏழு பேரை இவ்வுலகம் கண்டு
இருக்கிறது.
தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் இவ்வுலகிற்கு உதவ
நான் மீண்டும் மீண்டும் வருகிறேன் என்ற இறைவனின் சூளுரையை பகவத் கீதை மூலமாக நாம் அறிகிறோம்.
உலக நாடுகள் எல்லாம் தொழிலையும் அரசியலையும் வாணிகத்தையும் ராணுவத்தையும் தங்கள் பலம்
என்று நம்பிக் கொண்டிருக்கும்போது இவையெல்லாம் மாயை ஆன்மீகம் ஒன்றுதான் எங்கள் பலம்
என்று முன்னிறுத்துகிறது நம் பாரத மண்.
அதனால் தான் மகாகவி பாரதியாரும்
பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் என்று நம்மைப்
பெருமைப்பட வைக்கிறார்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
வடக்கே தலை வைத்துப் படுத்தால் மூளை பாதிக்கப்படும்; கிரகண காலங்களிலும் அமாவாசை பௌர்ணமியிலும் அரை வயிறு உண்ண வேண்டும்; சாம்பிராணி புகைத்தால் பூச்சி வராது. ஏகாதசி விரதத்தில் அகத்திக்கீரை சேர்த்துக்
கொண்டால் வயிற்றுப்புண் வராது, விழாக்களிலெல்லாம் மஞ்சள் தெளித்தால் கிருமிகள்
அண்டாது;
மாவிலை தோரணமும் வாழை மரமும் காற்றை வடிகட்டி தூய்மையாக்கும்
என்று மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் அறிவியலை ஆன்மீகத்தோடு கலந்து கொடுத்தவர்கள்
தான் நம் முன்னோர்கள்.
இன்றைக்கு சனாதன தர்மத்தைப் பற்றி மிகப் பெரும்
சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. சனாதனம் என்ற சொல்லுக்கு ஸ்பிரிச்சுவல் ஒன்னஸ் அதாவது
எல்லாவற்றையும் பிரித்துப் பார்க்காமல் ஒன்றே என்று நினைப்பது என்பது பொருள்.
அதனால்தான் மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன்; முல்லைக்குத் தேர் தந்தான் பாரி. புறாவுக்காகத்
தன் தசையையே அறுத்துக் கொடுத்தான் சிபி சக்கரவர்த்தி; பசுவின் கன்றுக்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான் மனுநீதிச் சோழன்.
இவர்களெல்லாம் ஓர் அறிவு உயிரி முதல் ஆறு அறிவு மனிதர்கள் வரை
அனைவரையும் இறைவன் உருவாகக் கருதி அன்பு செலுத்தியவர்கள்.
அதனால்தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி என்று
நாம் உரக்கச் சொல்லி வருகிறோம்.
பலுசிஸ்தானம் பர்மா சிங்கப்பூர் இலங்கை என விரிந்து கிடந்த நம்
பாரத மண் அடிமை வாழ்வால் காலணி ஆதிக்கம் என்ற பெயரில் துண்டு துண்டாக சிதறிவிட்டது.
இருப்பினும் நம் ஆன்மீகச் சிந்தனை அங்கெல்லாம் வேருன்றி வளர்ந்து வருகிறது.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
ஆயுதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பஞ்சம், வன்முறை, போதை என்ற
ஐந்து கொடுஞ்செயல்கள் உலகெங்கும் இன்று வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. கலிங்கப்
போரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வீரர்களைக் கண்டு கருணைப் பார்வை கொண்டவன் அசோகன்.
பல் போன கிழட்டுப் புலி சைவமாக மாறுவதில் ஆச்சரியம் இல்லை!
அன்று புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி
என்று ஒரு மிகச்சிறந்த போர் வெற்றியாளன் புத்த சமயத்தைத் தழுவினான் என்றால் இந்திய
மண் அப்படிப்பட்ட ஒரு பெருமைக்குச் சொந்தமாக இருக்கிறது.
ஜப்பானின் எண்ணம் தன் நாட்டின் மானங்காத்தல்; அமெரிக்காவின் எண்ணம் தன் நாட்டை வளப்படுத்துதல்; பிரான்சின் எண்ணம் தன் மக்கள் எல்லாம் அறிவார்ந்தவர்கள் என்று பெருமை பேசுதல்; ஜெர்மனின் எண்ணம் புதியன கண்டுபிடித்தல், ஆனால் இந்தியாவோ நாங்கள் ஆன்மீகத்தின்
தலைமையகம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படக்கூடிய ஒரு நாடு. அதனால்தான் பல்வேறு
முயற்சிகளில் தோல்வி கண்ட நாடுகளின் நடுவே ஒரே முயற்சியில் சந்திராயன் மூன்றை நிலவின்
தென்துருவத்தில் தரையிறக்க வைக்க முடிந்தது.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
மற்றவர்களின் செயல்கள் எல்லாம் அறிவுத் தேடல்களோடு நின்று விடுகிறது.
ஒரு பொருளை உருவாக்குவதோடு நின்று விடுகிறது. ஆனால் இந்திய மண் நமக்குக் கற்றுக் கொடுத்தது
என்ன தெரியுமா? சுவாமி விவேகானந்தர் சொல்வதுபோல அரைஸ் அவேக் அண்டு
ரெஸ்ட் நாட் அண்டில் த கோல் இஸ் ரீச்டு அதாவது
விழிமின் எழுமின் இலக்கை அடையும் வரை ஓயாது உழையுமின்
என்பதுதான்.
தொடர்ந்து செயல்படும் ஆற்றலையும் எந்த ஒரு செயலிலும்
முழு ஈடுபாடும் கரை காணும் வரை ஓயாது உழைத்தலும் நமது அடிப்படை. 1901 முதல் உலக அறிவாளிகளுக்கு
வழங்கப்படும் நோபல் பரிசு 60 ஆண்டுகளாக ஐரோப்பியர் வசம் இருந்தது. பின்னர் தான் சர்.சி.வி.ராமன்
எண்பத்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கணக்கைத் தொடங்கி வைத்தார்.
எல்லோருக்கும் சாதாரணமாகத் தெரிவது அறிஞர்களுக்குத்
தத்துவமாகப் புரிகிறது.
இதற்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்ல
முடியும். ஆப்பிளைப் பார்க்கும் போது நமக்குத் தோன்றாத சிந்தனை மரத்திலிருந்து ஆப்பிள்
விழும்போது நியூட்டனுக்குப் பிறந்திருக்கிறது. எனவே ஈர்ப்பு விசை பற்றிய கோட்பாடு பிறந்தது.
சூரியனைக் காணும் நமக்கெல்லாம் சுட்டெரிக்கும் அதன் வெப்பம் தான் நினைவில் வந்தது.
கோப்பர் நிக்கஸ் -க்கு சூரியனைப் பூமி சுற்றி வருகிறது என்ற புவியியல் தத்துவம் பிறந்திருக்கிறது.
பெரு வெடிப்புக் கொள்கை என்ற சிருஷ்டியின் சூட்சுமம் ஐன்ஸ்டீனுக்கு உதித்திருக்கிறது.
ஜடத்தை பிரம்மமாக்க முயன்று கொண்டிருக்கிறது இந்தப் புண்ணிய
பூமி. ஏனென்றால் இந்தியா தவம் அளித்த பூமி. வேதரிசிகள் தம் பாதச் சுவடுகள் பதித்த பெருமைக்குரிய
பூமி. இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆன்மீக வளர்ச்சி தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
அணுவைப் பற்றியும் அணுக் கொள்கை பற்றியும் இருபதாம் நூற்றாண்டு
வரை தொடர்ந்து ஆராய்ச்சிகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் பதி பசு பாசம் என்ற தத்துவத்தைச்
சொல்லி ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் துகள்தான் என்று பல ஆயிரம் ஆண்டு முன்பே நம் பாரத
மண்ணில் ஆன்மீகம் சொல்லிவிட்டது.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
மிகப்பெரிய தத்துவக் கருத்துகளை மூன்று விதமாக நாம் பார்க்கிறோம்.
ஒன்று அத்வைதம், மற்றொன்று துவைதம். வேறொன்று விசிட்டத் வைதம். அத்வைதம் என்ன சொல்லுகிறது
என்றால் வைதம் என்றால் ஒன்று, அத்வைதம் என்றால் இரண்டற்ற நிலை, அதாவது ஜீவனுக்குள்
சிவன் உண்டு என்று ஆதிசங்கரர் போதித்த ஆன்மீகக் கருத்து இது. ஆனால் மத்துவர் பெற்ற
ஞானமோ இறைவேறு மனிதன் வேறு இரண்டும் ஒன்றாகக் கலக்க முடியாது. ஆனால் ஒன்றோடு ஒன்று
ஈர்ப்பு உடையது என்று சொல்லுவது தான் துவைதம் என்ற வழி.
ராமானுஜர் போதித்த விசிஸ்டாத் வைத கருத்தோ பிரம்ம சூத்திரம்
கீதை உபநிடதம் ஆகிய கருத்துகளோடு ஒன்றி இருக்கிறது. சித்து அசித்து இவை ஒன்றே என்கிறது
அத்வைதம். விஜிஷ்டா என்றால் சிறப்பு. சிறப்பு அத்வைதமாகவே அதை நாம் பார்க்க வேண்டும்.
இந்த மூன்று ஆன்மீகச் சிந்தனைகளையும் நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக புரியும்
வண்ணம் இவ்வாறு கூறியிருக்கிறார். அத்வைதம் என்பது உணவு சத்தாக மாறிய பின்பு உடலில்
இருப்பது;
துவைதம் என்பது நமக்கு முன் உணவு இருப்பது. விசிட்டாத் வைதம்
என்பது வயிற்றுக்குள் இருக்கும் உணவு போன்றது என்று இந்த மூன்று சிந்தனைகளையும் ஒன்றுபட
கூறி இருக்கிறார்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
63 நாயன்மார்களும் பன்னிரண்டு ஆழ்வார்களும் போற்றி வளர்த்த நம்முடைய
சைவ, வைணவ கருத்துகள் தென்னாட்டின் பொக்கிஷங்களாக இன்றைக்கும் இலக்கியங்களில் வாழ்கிறது.
பாரத மண்ணின் ஒவ்வொரு மைந்தனும் கற்றுக் கொள்ள வேண்டிய இறைச் சிந்தனை இவற்றுள் பொதிந்து
கிடக்கின்றன. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்குமுருகார் அல்லவா?
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவாய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
வேண்டி எனைப் பணி கொண்டாய்
வேண்டி யாது நீ அருள் செய்தாய்
வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்
அதுவும் உன்றன் விருப்பன்றே என்று இறைவனை வேண்டுவோர்க்குத் தன்
அருமையான பாடல் மூலம் ஆன்மீகச் சிந்தனையை முன் வைக்கிறார். நான் என்ன வேண்டப் போகிறேன்
என்பது உனக்குத் தெரியும். நான் வேண்டுவது முழுவதையும் நீ தந்துவிடுவாய்! அப்படி வேண்டித்தான்
எனக்கு நீ கொடுக்க வேண்டுமா என்ன, நான் வேண்டுவது கூட நீ எனக்குக் கொடுப்பதாக நினைத்த
ஒன்றுதான்?
என்று மாணிக்கவாசகர் அருமையாகக் கூறியுள்ளார்.
அதுமட்டுமா புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி என்று தன் பாடலில்
இறுதியில் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்ற தத்துவத்தைக் கூறியிருக்கிறார்.
மறுபிறப்பு என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவை பாரத நாட்டின் ஆன்மீகச் சிந்தனைகள்.
முக்தி என்ற ஒன்றைத் தேடியே நம் ஆன்மா அலைகிறது என்பதை ஒவ்வொரு
வழிபாட்டு முறையும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஜீவன் முக்தி பெறுவதற்கு பல்வேறு
வழிகளைக் கூறினர். அன்பு சுருதி சுமிருதி நம்பிக்கை மோட்ச விருப்பம் உலக ஆசை அறுத்தல்
தர்ம சிந்தனை வேத பாராயணம் சாது சங்கமம் சேர்க்கை இவற்றையெல்லாம் செய்து தன்னுடைய கர்ம
பந்தத்தை ஒருவன் உடைப்பான் என்றால் அவன் முக்தி பெற முடியும் என்று உறுதியாகக் கூறுகிறது
நம் வழிபாட்டு முறை.
உருவாய் அருவாய் உனதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்ற திருப்புகழ் வரிகள் இறைவனின்
ஈடற்ற தன்மையை நமக்குத் தெளிவாகச் சொல்லுகிறது.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
நம் பாரத மண்ணில் பிறந்தாலே அது பல்துறை அறிவு பெற்ற சிந்தனையைத்
தூண்டுகிறது. நடராஜரின் கால் பதித்த புள்ளி உலகின் மையமாக இருக்கிறது என்று நாசா வந்து
கூறிய பிறகு தான் நமக்கே தெரிகிறது. திருநள்ளாரிலிருந்து வானில் வீசும் ஊதாக்கதிர்
வானில் இருந்து திருநள்ளாரில் விழுகிறதா?
திருநள்ளாரிலிருந்து வானை நோக்கிச் செல்கிறதா? என்ற கேள்வியை விஞ்ஞானிகள் முன் வைத்திருக்கிறது. பூமி வலப்புறம் சுற்றுகிறது என்பதைக்
குறிக்க வலது காலை எடுத்து வைக்கும் வழக்கம் நம் முன்னோர் எப்படி கொண்டு வந்தார்கள்?
உத்தமம் கிழக்கு ஓங்குயிர் தெற்கு மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு என்று தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் கூட திசைகளைக் கணிக்க இவர்களால்
எப்படி முடிந்தது? பூமி ஒரு காந்தம் என்பதை பாரத மண்ணைத் தவிர வேறு
எவர் முதலில் கணித்துக் கூறியவர்? நம்முடைய ஏடுகள் எல்லாம் செல்லரித்துப் போய்விட்டன.
நம்முடைய மனப்பாட சக்திகளால் விளைந்த கருத்துகள்
எல்லாம் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களாக உபநிஷதங்களாக இருக்கின்றன.
அவற்றின் சாரங்களில் இருந்து உருவாக்கப்பட்டவைதான் ராமாயணமும் மகாபாரதமும். இன்றைக்கு
கணினி இவ்வுலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அந்த மின்காந்த சக்திகளை ஏற்கனவே
நம் முன்னோர் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழக்கூடிய
உயிர்களின் சிந்தனைகளை வசப்படுத்தும் தத்துவம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்
தான் ஞானிகளைச் சுற்றி ஒளிவட்டம் இருந்திருக்கிறது.
ஈசனை கூட ஆதியோகி என்று நாம் குறிப்பிட்டு வந்திருக்கிறோம்.
ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் நம் பாரதத்தின் வளர்ச்சி ஆன்மீகத்தின் வளர்ச்சியாகவே
அறியப்படுகிறது.
தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
வாடித் துன்பம் மிக உழன்று
பலர் வாடச் செயல்கள் பல செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்திக்
கொடும் கூற்றுக்கு இரையான பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற முண்டாசுக்
கவி பாரதியின் முத்தான வரிகளைக் கூறி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன், நன்றி
வணக்கம்.
- கவிஞர்
கல்லூரணி முத்து முருகன் 9443323199 தமிழ்த்துகள்
மு.முத்துமுருகன்,
தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
தமிழ்த்துகள்
-
SSLC PUBLIC EXAM MODEL QUESTION PAPER 1 10TH TAMIL ANNUAL VIRUDHUNAGAR பதிவிறக்கு/DOWNLOAD
-
9th Tamil Half Yearly Exam 2025 Model Question Paper 1 Pdf Virudhunagar District விருதுநகர் மாவட்ட மாதிரி வினாத்தாள் ஒன்பதாம் வகுப்பு 9th t...
-
8th tamil model notes of lesson lesson plan January 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2....
-
9th tamil model notes of lesson lesson plan January 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan January 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 ...
-
பதிவிறக்கு/DOWNLOAD 8th Tamil Half Yearly Exam 2025 Model Question Paper 1 Pdf Virudhunagar District விருதுநகர் மாவட்ட மாதிரி வினாத்தாள்...
-
பதிவிறக்கு/DOWNLOAD 10th tamil half yearly exam model question paper pdf
-
6th tamil model notes of lesson lesson plan January 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2.பர...
-
பதிவிறக்கு/DOWNLOAD 9th Tamil Half Yearly Exam 2025 Model Question Paper 1 Pdf Virudhunagar District விருதுநகர் மாவட்ட மாதிரி வினாத்தாள் ...
-
7th tamil model notes of lesson lesson plan January 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2.பர...
Blog Archive
-
▼
2023
(1415)
-
▼
September
(127)
- தேன்சிட்டு செப்டம்பர் மாத இதழ் வினாடி வினா 185 வின...
- தேன்சிட்டு செப்டம்பர் 16-30 மாத இதழ் வினாடி வினா 1...
- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் பருவ தொகுத்தறித்...
- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் பருவ தொகுத்தறித்...
- ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் பருவ தொகுத்தறித்...
- ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் பருவ தொகுத்தறித்...
- எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங...
- எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு தம...
- ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆ...
- ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு த...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டு தமிழ் வழி வ...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டு ஆங்கில வழி ...
- ஏழாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு முதல் பருவ த...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு விடைக்குற...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு விடைக்குறி...
- ஆன்மீக வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி தமிழ்ப் பேச...
- ஆன்மீக வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி தமிழ்க் கட்...
- ஆன்மீக வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி தமிழ்க் கட்...
- ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவ தொகுத்தறித் தேர்...
- ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவ தொகுத்தறித் தேர்...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் ...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி காலாண்டுத் தே...
- ஆறாம் வகுப்பு அறிவியல் முதல் பருவ தொகுத்தறித் தேர்...
- ஆறாம் வகுப்பு அறிவியல் முதல் பருவ தொகுத்தறித் தேர்...
- எட்டாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வ...
- எட்டாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில ...
- பத்தாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில ...
- பத்தாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வ...
- ஆறாம் வகுப்பு கணக்கு முதல் பருவ தொகுத்தறித் தேர்வு...
- ஆறாம் வகுப்பு கணக்கு முதல் பருவ தொகுத்தறித் தேர்வு...
- ஏழாம் வகுப்பு கணக்கு முதல் பருவ தொகுத்தறித் தேர்வு...
- ஏழாம் வகுப்பு கணக்கு முதல் பருவ தொகுத்தறித் தேர்வு...
- எட்டாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழ...
- எட்டாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வ...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழ...
- பத்தாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழ...
- பத்தாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி...
- பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு காலாண்டுத் தே...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவி சீடர்கள் தமிழ்ப் பேச்சு க...
- ஸ்ரீ ராமகிருஷ்ணரின் துறவி சீடர்கள் தமிழ்ப் பேச்சு ...
- ஸ்ரீ ராமகிருஷ்ணரின் துறவி சீடர்கள் தமிழ்ப் பேச்சு ...
- ஏழாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு முதல் பருவ தொகு...
- ஆறாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டு முதல் பருவ தொகுத்த...
- ஏழாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டு முதல் பருவ தொகுத்த...
- எட்டாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டு வினாத்தாள் விருத...
- ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டு வினாத்தாள் விரு...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டு வினாத்தாள் விருத...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிற்றகல...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கல்விய...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திருக்க...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கலங்கரை வ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மூதுரை, த...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு விடைக்குறிப...
- திருமங்கை ஆழ்வாரின் பக்திநெறி தமிழ்ப் பேச்சு கட்டு...
- திருமங்கை ஆழ்வாரின் பக்தி நெறி தமிழ்ப் பேச்சு கட்ட...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு காலாண்டுத்தே...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள்...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் பருவ தொகுத்தறித் தேர்வு ...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவ தொகுத்தறித் தேர்வு ...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு விடைக்குறிப...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 விண்ணைத்தாண்டிய தன்னம...
- பத்தாம் வகுப்பு தமிழ் விண்ணைத்தாண்டிய தன்னம்பிக்கை...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 முல்லைப்பாட்டு நெடுவி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 முல்லைப்பாட்டு படைப்ப...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 சிறப்புக் கையேடு pdf
- வகுப்பு 9 தமிழ் எழுத வாசிக்கக் கற்கும் மிளிரும் மா...
- வகுப்பு 6,7 மிளிரும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு ...
- வகுப்பு 8,9 மிளிரும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர...
- விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் தகவல்கள்
- சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி எழுச்சியின் பங்க...
- தாயுமானவர் பாடல்கள் தமிழ்ப் பேச்சு கட்டுரை Tamil S...
- தாயுமானவர் பாடல்கள் தமிழ்க் கட்டுரை தமிழ்ப் பேச்சு...
- TNPSC & தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு வினா வ...
- TNPSC & தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு பயிற்ச...
- 12 ஆம் வகுப்பு தமிழ் பயிற்சிக் கையேடு +2 pdf 12th ...
- தமிழ் எழுத, வாசிக்கக் கற்போருக்கான மாதிரி வினாத்தா...
- சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் நெகிழிக்குப்பைகள்...
- நெகிழியும் மறுசுழற்சிப் பயன்பாடும் தமிழ்ப் பேச்சு ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 மொழிப்பயிற்சி வினாத்த...
- பத்தாம் வகுப்பு கணக்கு 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் ...
- பத்தாம் வகுப்பு கணக்கு 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் ...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் 75 ஒரு மதிப்பெண் வினாக்கள...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவத்தேர்வு மாதிரி வினா...
- ஆறாம் வகுப்பு தமிழ் 2023 மாதிரி முதல் பருவ தொகுத்த...
- பத்தாம் வகுப்பு தமிழ் 60 மதிப்பெண் பலவுள் தெரிக தே...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் பருவத்தேர்வு மாதிரி வினா...
- ஏழாம் வகுப்பு தமிழ் 2023 மாதிரி முதல் பருவ தொகுத்த...
- தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான மாதி...
-
▼
September
(127)
