கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, September 22, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு முதல் பருவ தொகுத்தறித் தேர்வு 2023

7th tamil answer key quarterly exam summative assessment question 2023
விருதுநகர் மாவட்டம் 

தொகுத்தறித் தேர்வு
 செப்டம்பர் 2023 

ஏழாம் வகுப்பு தமிழ் 

விடைக் குறிப்பு 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.4x1=4
1.அ. வழி 
2.ஆ. முகில் 
3.ஆ. நேற்றிரவு
4.ஈ. இலக்கணப் போலி 

கோடிட்ட இடத்தை நிரப்புக 2x1=2
5.சாயல்குடி
6. முண்டந்துறை

 பொருத்துக 4x1=4

7.காந்தியக் கவிஞர் 
8.உடுமலை நாராயணகவி 
9.சுரதா
10.இரா.பி.சேது

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்க 5x2=10

11 வாயினால் பேசப்பட்டு பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழி

 12 காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன
 காடு பல வகையான பொருள்களைத் தரும்
 காய்கனிகளையும் தரும் 
எல்லாரும் கூடி மகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும் 

13 யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவது இல்லை 
அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன 

14 வாழும் நெறி 
ஒருவர் தன் நெஞ்சில் பொறாமை இல்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும் 

15 குற்றியலிகரம் 
தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும் 
குறுமை + இயல் + இகரம் - குற்றியலிகரம் 

16 வழக்கு 
எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு
 நம் முன்னோர் எந்தெந்த சொற்களை என்னென்ன பொருள்களில் பயன்படுத்தினார்களோ அச்சொற்களை அவ்வாறு பயன்படுத்துவது வழக்கு

 17 தம் வயிற்றுக்குத் தாய் புலி தங்கிச் சென்ற குகையை உவமையாகக் கூறுகிறார் 

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடை அளிக்கவும் 3x4=12

18 தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன 
பகை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம் 
அத்தோடு இசைப் பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத் தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம் புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழில் இலக்கிய வளங்கள் உள்ளன

  19 கிளை மொழிகள்
 ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்வதும் உண்டு
 வாழும் இடத்தில் நில அமைப்பு இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படும்
 அவர்கள் இடையேயான தொடர்பு குறையும் பொழுது மாற்றங்கள் மிகுதியாகவே புதிய மொழியாகப் பிரியும்
 அவ்வாறு உருவாகும் புதிய மொழியே கிளைமொழி

 20 காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவன 
காடுகளில் வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்
 பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்
 பாம்புகள் கலக்கமடையும்
 நரி கூட்டம் ஊளையிடும் 
மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும் 
சிங்கம் புலி கரடி சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும் 

21 மகரக் குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள்
மருண்ம் 
போன்ம் 
வலம் வந்தான் 
பழம் விழுந்தது

22 பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் தோறும் அணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும் 
வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும் 
வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும் 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும் 
10x1=10
23 அ கஉ
ஆ ரு

24 எஃகு 

25 மா பலா வாழை 

26 குழலி நடனம் ஆடினாள் 

27 இடக்கரடக்கல் 

28 புத்தகம் 
நூலகம் 
உணவகம் 

29 கண்ணழகு 

30 அ.காடு 
ஆ.உவமை 

31 கொக்கு 

32 மாணவன் மக்கள் 

மனப்பாடப் பாடல் 4+2=6
33.அருள்நெறி அறிவைத் தரலாகும் 
         அதுவே தமிழன் குரலாகும் 
பொருள்பெற யாரையும் புகழாது 
        போற்றா தாரையும் இகழாது 
கொல்லா விரதம் குறியாகக் 
          கொள்கை பொய்யா நெறியாக 
எல்லா மனிதரும் இன்புறவே 
            என்றும் இசைந்திடும் அன்பறமே 

34.வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
 தீமை இலாத சொலல் 

விடையளிக்க 2x6=12

35.சொலவடை

அல்லது

ஜாதவ் பயேங்

36.
நண்பனுக்குக் கடிதம்

அல்லது

நான் விரும்பும் தலைவர்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.


செ.பாலமுருகன்
அரசு மேல்நிலைப்பள்ளி
ஆவுடையாபுரம்
விருதுநகர் மாவட்டம் 


தமிழ்த்துகள்

Blog Archive