9th Tamil Quarterly Exam Answer Key
விருதுநகர்
மாவட்டப் பொதுத் தேர்வுகள்
காலாண்டு
பொதுத்தேர்வு – 2023
சரியான
விடை 15x1=15
1.
இ.சிற்றிலக்கியம்
2.
ஈ.பிப்ரவரி
21
3.
இ.செய்வினை
4.
அ.கீழே
5.
ஆ.திருத்தொண்டர்
திருவந்தாதி
6.
இ.அரிக்கமேடு
7.
அ.திருக்குறள்
8.
ஆ.கவிஞர்
வைரமுத்து
9.
அ.3,27
10.
ஆ.ஊரகத்
திறனாய்வுத் தேர்வு
11.
அ.மூன்று
12.
ஆ.பெண்மையை
13.
அ.உரிச்சொல்
தொடர்
14.
இ.இனிய
15.
அ.நுட்பமான ஒலி
எவையேனும்
4 வினாக்களுக்கு விடையளி 4x2=8
16.
தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட
எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி.
17.
நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது,
உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர்
ஆவர்
18.
ஏறுதழுவுதல் நிகழ்வினைக் கலித்தொகை 'காளைகளின் பாய்ச்சல்' என குறிப்பிடுகிறது.
சிலப்பதிகாரமும் புறப்பொருள்
வெண்பாமாலையும் 'ஏறுகோள்' என
கூறுகின்றது.
சிற்றிலக்கியமான பள்ளு இலக்கியத்தில் 'எருது கட்டி' எனக் கூறுகின்றது.
19.
சொல் வேறு, செயல்
வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.
20.
கூட்டினுள் இருக்கும் புழுவானது தனது
பொறுமை என்னும் முயற்சியாலேயே பட்டுப்பூச்சியாய் அழகிய வடிவுடன் வெளிவருகிறது.
அதுபோல பொறுமை, அடக்கம்
என்கிற கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தால் நிறைவான வாழ்வை எளிதில் பெறலாம்.
கட்டாய வினா
21.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
எவையேனும்
5 வினாக்களுக்கு விடையளி 5x2=10
22.
அ.சனி
நீராடு என்பது யாருடைய வாக்கு?
ஆ.உணவு
எனப்படுவது எவை?
23.
வல்லினம் இட வேண்டிய இடத்தில் இடாமல்
எழுதுவதும் இட அவசியம் இல்லாத இடத்தில் இடுவதும் பொருள் வேறுபாட்டைத் தரும்.
கைதட்டு - இதில் வல்லினம் மிகாது
(இரண்டாம், மூன்றாம், நான்காம்,
ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது)
கைத்தட்டு - சிறிய தட்டு எனப்பொருள் வேறுபடுவதை அறியலாம்.
24.
அகல்
25.
அ.வழிந்து+ஓடும்
ஆ.நீர்+இல்லாமல்
26.
அ.வேறுபடுத்துவது
ஆ.பெற்றிருக்கின்றன.
27.
அந்நியர்
நம்மை ஆண்டு வந்தனர்.
எவையேனும்
2 வினாக்களுக்கு விடையளி 2x3=6
28.
தமிழ்-மூன்று
மலையாளம்-மூணு
தெலுங்கு-மூடு
கன்னடம்-மூரு
துளு-மூஜி
திராவிட
மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளதற்கு இது சிறந்த சான்றாகும்.
29.
1.ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை
மாடுகள் 'ஏறுகள்' என்றழைக்கப்பட்டன.
2.மாடுகளைப் போற்றி மகிழ்விக்க
ஏற்படுத்திய விழாவே மாட்டுப்பொங்கல்.
3.அவற்றை ஒப்பனை செய்து பூமாலை
அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட அவற்றுக்கு நன்றி
தெரிவிக்கும் விதத்தில் பொங்கலை ஊட்டி விடுவர்.
4.இதன் தொடர்ச்சியாகத் தங்கள்
வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும்
மரபாக உருக்கொண்டதே' ஏறு தழுவுதல்' ஆகும்.
30.
அ.ஏறுதழுவுதல்
ஆ.தெய்வங்களை
வழிபடுவர்
இ.எதிர்த்துப்
போரிட்டன.
எவையேனும்
2 வினாக்களுக்கு விடையளி 2x3=6
31.
1.கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
"ஓ, என் சமகாலத் தோழர்களே!" என்னும் கவிதையில்
இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.
2.அறிவியல்
என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் என்கிறார்.
3.பண்டைத்தமிழரின்
பெருமைகளை எல்லாம் கண்ணுக்குள்ளே பொருத்தக் கூறுகிறார்.
4.எடுப்பார்
கைப்பிள்ளையாக இராமல் ஏவுகணை செலுத்துவதிலும் திறமை பெற்று இனிக் காணும் கோள்களில்
கூட தமிழ் வாழ வழிவகை செய்யுங்கள் என்கிறார்.
5.கட்டுப்பாட்டை
மறக்காமல் பொறுமையைக் கடைபிடிக்கக் கூறுகிறார்.
6.கூட்டுப்புழு
தான் நாளை பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் மறக்க வேண்டாம் என்கிறார்.
32.
1.வெட்டப்படும் நாள் வருமென பட்டமரம்
வருத்தப்பட்டது.
2.இலை வெந்து கருகியதால், கட்டையெனும் பெயர் பெற்றதால் வருத்தப்பட்டது.
3.பட்டை உடை கிழிந்து அழகு இழந்ததால்
வருத்தப்பட்டது.
33.
கட்டாய
வினா
தித்திக்கும்
தெள் அமுதாய்த் தெள் அமுதின் மேலான
முத்திக் கனியே
என் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப்
படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம்
உண்டு விளம்பக்கேள் – மண்ணில்
எவையேனும்
2 வினாக்களுக்கு விடையளி 2x3=6
34.
சொற்பொருள் பின்வருநிலையணி
ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும்
மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
இக்குறளில்
நாடி என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஆராய்ந்து என்ற ஒரே பொருளைத் தருகிறது.
35.
தன்வினை :
·
எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்
வினை எனப்படும்.
·
எடுத்துக்காட்டு - பந்து உருண்டது.
·
அவன் திருந்தினான்.
·
பிறவினை :
·
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால்
அது பிற வினை எனப்படும்.
·
எடுத்துக்காட்டு - உருட்ட வைத்தான்.
·
அவனைத் திருந்தச் செய்தான்.
36.
பொருத்தமாக
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி 5x5=25
37.
நிகழ்ச்சி நிரல்
·
தமிழ்த்தாய் வாழ்த்து - அனைவரும்
·
வரவேற்புரை - இலக்கிய மன்றத் தலைவர்
·
தலைமையுரை - தலைமையாசிரியர்
·
சிறப்புரை - சிறப்பு விருந்தினர்
·
கலைநிகழ்ச்சிகள் - மாணவர்கள்
·
பரிசு வழங்குதல் - இலக்கிய மன்றச் செயலர்
·
நன்றியுரை - இலக்கிய மன்ற உறுப்பினர்
·
நாட்டுப்பண் - அனைவரும்
அல்லது
அழைப்பிதழ்
பொருத்தமாக
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
38.
பொருத்தமாக
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
பொருத்தமாக
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
39.
பொருத்தமாக
கவிதை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
40.
திரண்ட கருத்து
கல், மலை,
பெருங்காடு, செடி, சமவெளி,
மேடு இவற்றையெல்லாம் கடந்து ஏரி குளங்களை நிரப்பி வந்தேன். ஊற்றில்
உட்புகுந்து ஓடைகள் பொங்கிட ஓடி வந்தேன் என்று ஆற்றுநீர் கூறுவதாகக் கவிமணி
எழுதியுள்ளார். எங்கும் இறங்கி தவழ்ந்து வந்தேன் என்று சமவெளிகளில் வேகம் குறைந்து
- தவழ்ந்து – குறிப்பிடுகிறார். முற்றிலும் உட்புகுந்த என்பதில் வறண்டு கிடந்த
ஊற்றில் நிலத்தடி நீராய் இறங்கியதைக் கூறுகிறார்.
பொருள் நயம்
மழைநீரால் ஆற்றில் குதித்து, கடந்து, தவழ்ந்து, ஏரி
நிரப்பி, உட்புகுந்து, ஓடி
வந்தேன் என ஒரு பொருள் தரும் பல சொற்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
சந்தநயம்
எந்த நயம் இல்லாவிட்டாலும் சந்தநயம்
இருப்பது சிறப்பு. இப்பாடல் இசையமைத்துப் பாடுவதற்கு ஏற்ப சந்தநயத்துடன்
விளங்குகிறது.
தொடை நயம்
மோனை -
குயவனின் கைவண்ணம் பானையிலே
புலவனின் கைவண்ணம் மோனையிலே
முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
மோனை.
கல் - காடு எல்லை - இறங்கி
ஏறாத - ஏரி ஊறாத - ஓடை
எதுகை -
எது கை கொடுக்காவிட்டாலும் எதுகை கை
கொடுக்கும்.
இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
எதுகை.
கல்லும் - எல்லை ஏறாத - ஊறாத
இயைபு -
பாடல் அடிகளின் இறுதி எழுத்து ஒன்றி
வரத் தொடுப்பது இயைபு நயம்.
குதித்து, கடந்து,
தவழ்ந்து, வந்தேன், வந்தேன்
அணிநயம் - இப்பாடல் கற்பனை நயம் கலந்த
உயர்வு நவிற்சி அணி ஆகும்.
பாவகை –
இப்பாடல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் வகையைச் சார்ந்ததாகும்.
41.
அ. பொருத்தமாக
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
1. ஒவ்வொரு மலரும் இயற்கையில் பூத்த
ஆன்மா. – ஜெனரல் டி நெர்வால்.
2. கதிரவனின் மறைவு ஒளியே எனக்கு
முதலில் பிடிக்கும் வானவில் வண்ணம் இரண்டாவது தான்.- மாட்டி ஸ்டீபனிக்.
3. அதிகாலை நடை, நாள்
முழுவதற்குமான கொடை.- ஹென்றி டேவிட் தோரே.
4. வெறும் வாழ்க்கை மட்டும் போதாது
அதில் மகிழ்ச்சியும் விடுதலையும் அதனுடன் ஒரு பூவாய் நம் ஆசையும்.ஹான்ஸ்
கிறிஸ்டியன் ஆண்டர்சன்.
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி 3x8=24
42.
அ அல்லது ஆ
43.
அ அல்லது ஆ
44.
அ அல்லது ஆ
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம்
விருதுநகர் மாவட்டம்.