10th Tamil model notes of lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
07-10-2024 முதல் 11-10-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
விதைநெல் – உரைநடை
உலகம்.
5.உட்பாடத்தலைப்பு
சிற்றகல் ஒளி
6.பக்கஎண்
160 - 164
7.கற்றல் விளைவுகள்
T-1034 தன் வரலாறு என்னும் இலக்கிய வகையின் கருத்து
வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அதுபோல எழுத முற்படுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
வரலாற்றின்
போக்கினை மாற்றி வடிவமைத்தவர்களின் வாழ்க்கைக் கதையைத் தன் வரலாறாகப் படித்தல்.
9.நுண்திறன்கள்
நம்மையும்
வரலாற்றுப் பாத்திரமாக உணரும் திறன்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/09/7.html
https://tamilthugal.blogspot.com/2020/02/7-tenth-tamil-unit-7-one-word-online.html
https://tamilthugal.blogspot.com/2022/10/powerpoint-pdf-10th-tamil-sitragal-oli.html
https://tamilthugal.blogspot.com/2023/07/7-10th-tamil-kamaraj-varalaru.html
11.ஆயத்தப்படுத்துதல்
நாட்டுக்குழைத்த
தலைவர்களைக் கூறச் செய்தல்.
தமிழக
எல்லைகளைக் கேட்டல்.
12.அறிமுகம்
ம.பொ.சி. பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
தன் வரலாறை நயத்துடன் அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
வறுமையால் இழந்த கல்வி, பெற்ற செவிச் செல்வம், புத்தகப்பித்தன், பேராயக்
கட்சி, ஆறு மாதக் கடுங்காவல், தமிழகம் பற்றிய கனவு குறித்து அறியச் செய்தல்.
சென்னையை
மீட்ட நிகழ்வை மாணவர்கள் மனதில் விதைத்தல். போராட்டம் செய்த தியாகிகள் குறித்து அறிதல்.
சிலப்பதிகாரம்,
வட எல்லை, தென் எல்லைப் போராட்டங்கள், மார்ஷல் நேசமணி குறித்து மாணவர்களுக்கு
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல். தலைவர்களின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ம.பொ.சி. குறித்து
இணையம்,
ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – ம.பொ.சி.யின் பெற்றோர் ..............
ம.பொ.சி. எந்த ஆண்டு
பிறந்தவர்?
ந.சி.வி – ம.பொ.சி. இலக்கிய அறிவு பெற்ற
நிகழ்வை விளக்குக.
தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
உ.சி.வி – மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் என்ற தலைப்பில் மேடை
உரை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
தன்வரலாறு குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
ம.பொ.சி. பற்றி மேலும் சில தகவல்களை அறிதல்.