கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 21, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கலங்கரை விளக்கம், கவின்மிகு கப்பல்

 7th Tamil Model Notes of Lesson 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-10-2023 முதல் 06-10-2023

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அறிவியல் ஆக்கம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

கலங்கரை விளக்கம், கவின்மிகு கப்பல்

6.பக்கஎண்

2-7

7.கற்றல் விளைவுகள்

T-710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆராய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக்  கண்டறிதல்.

T-715 பல்வேறு கலைகளிலும் தொழில்களிலும் (கைத்தொழில், கட்டடக்கலை, உழவு, நாட்டியம் முதலானவை) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சங்கப் பாடல்களைச் சீர்பிரித்துப் படிக்கும் திறனும் கருத்தை உணரும் திறனும் பெறுதல்.

9.நுண்திறன்கள்

கலங்கரை விளக்கம் பயன் குறித்து குழுவாக விவாதித்தல்.

கடலின் வேறு பெயர்கள் பற்றிப் பேசுதல்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/06/1-2-7th-tamil-kalankarai-vilakkam.html

https://tamilthugal.blogspot.com/2021/06/1-2-7th-tamil-kavinmiku-kappal-q.html

11.ஆயத்தப்படுத்துதல்

சங்க இலக்கியப் பாடல் வகைகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த கப்பல் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழர்களின் கடற்பயணத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

கலங்கரை விளக்கம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கலங்கரை விளக்கம் பாடலை விளக்குதல். உவமையை உணர்தல். தமிழர்களின் தொழில்நுட்பத்தை உணர்த்துதல். கப்பல் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் குழுவாகக் கூறச் செய்து, கவின்மிகு கப்பல் பாடலைக் கூறுதல். இன்றைய தமிழ்ச் சொல் வளங்களை மாணவர்களுக்குக் கூறுதல்.

          கடல் குறித்தும் கப்பல் குறித்தும் மாணவர்கள் பேசுதல்.

 



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், சங்கப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சங்க இலக்கியங்களை அறியச் செய்தல். தமிழர்களின் தொழில்நுட்பத்தை அறிதல். தமிழரின் கடற்கலன் குறித்த அறிவை உணரச் செய்தல்.

15.மதிப்பீடு

          LOT – வங்கம் என்னும் சொல்லின் பொருள் ..............................

                   கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன ....................................

          MOT – மரக்கலங்களைத் துறைமுகம் நோக்கி அழைப்பது எது?

                   நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?

HOT – கலங்கரை விளக்கத்தின் பயன்களை எழுதுக.

                   கப்பல் பயணம் குறித்து உனது கருத்துகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

சங்ககாலப் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.

கப்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive