SRI RAMAKRISHNARIN THURAVI SEEDARKAL TAMIL ESSAY SPEECH
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் துறவி
சீடர்கள்
கதாதர சட்டோபாத்தியாயர் என்ற இயற்பெயர் கொண்ட வங்காளத்தின் காளி
கோயில் பூசாரி தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். காளியின் தீவிர பக்தரான இவர் சாரதா தேவியை மணந்தார். அவரையே காளி உருவமாக எண்ணி வணங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் துறவி சீடர்கள்
பின் குறிப்பிட்டுள்ளவர்கள் ஆவார்கள். தமிழ்த்துகள்
சுவாமி
விவேகானந்தர் (நரேந்திரநாத் தாத்தா)
உலக சமயங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை
சேர்த்தவர். சிக்காகோவில் அவர் ஆற்றிய உரை உலகெங்கும் இந்து சமயத்தை அறியச் செய்தது.
முதலில் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினரான நரேந்திரநாத் தாத்தா 1881 இல் ராமகிருஷ்ணரின்
சந்திப்புக்கு பின் துறவியானார். 1886 இல் ராமகிருஷ்ணர் இறந்த பின்னர் 1892 இல் கன்னியாகுமரி வந்து தங்கி இன்று நாம் விவேகானந்தர் மண்டபம் இருக்கும் பாறை பகுதியில் தியானம் செய்தார்.
1893 சிக்காகோ மாநாட்டில் கலந்து
கொண்டார். சென்னை நண்பர்களின் உதவியுடன் நியூயார்க் லண்டன் நகரங்களில் வேதாந்த மையம் நிறுவினார். 1897 இல் பாம்பன்
வந்த அவரை பாஸ்கர சேதுபதி வரவேற்றார். 1902 ஜூலை நான்காம் நாள் தன் 39 ஆம் வயதில் வேலூர்
மடத்தில் சமாதி அடைந்தார். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சுவாமி
பிரேமானந்தா (பாபு ராம் கோஷ்)
தாரா பிரசன்ன கோஸ், மாதங்கிணி தேவி இணையரின் மகன் இவர் ஆவார். ஜோர சங்கோ ஹரி சபையில் பாகவதச் சொற்பொழிவு கேட்க செல்வார் அங்கே குரு தேவரை சந்தித்தார். இவரின்
உறவினரான பலராம் போஸ் உதவியுடன் 1882 இல் துறவு வாழ்க்கை மேற்கொண்டார். சுவாமி பிரம்மானந்தாவை(ராகால்)
சந்தித்தார். 1902 முதல் 1916 வரை பேலூர் மடத்தின் தலைவராக
இருந்தார்.
சுவாமி
யோகானந்தர் (யோகேந்திரநாத் ராய் சவுத்ரி) தமிழ்த்துகள்
சுவாமி விவேகானந்தருடன் அடிக்கடி விவாதத்தில் ஈடுபடக் கூடியவர்.
சாரதாமாவுடன் கல்கத்தாவில் தங்கி ஆன்மீகப் பணியாற்றியவர். தமிழ்த்துகள்
சுவாமி
அகண்டானந்தர் (கங்காதர் கங்கோபாத்தியாயர்)
1877 இல் பாக்பஜாரில் தீனநாத் பாசு வீட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைக் கங்காதர் சந்தித்தார். இமாலயம் திபத் போன்ற
நாடுகளில் ராமகிருஷ்ணருடன் பயணம் செய்தார். திபெத்திய மொழியை 15 நாள்களில் கற்றுக்
கொண்டார். முர்ஷிதாபாத்தில் பஞ்ச நிவாரண பணிகளுக்காக 1897 இல் சென்னை நண்பர்கள் மூலம் உதவி பெற்று பணி செய்தார்.
இவரது பணியை 1898 ஜூன் 15 விவேகானந்தர் தன் கடிதம் மூலம் பாராட்டி மகிழ்ந்தார். களிமண்ணால் சிவனைச்
செய்து வழிபட்டார். இளம் வயதிலேயே கங்கையில் நான்கு முறை குளித்து
பிராணாயாமம் செய்தார். சத்யம் ஞானம் ஆனந்த பிரம்மா என்று முழங்கிக்
கொண்டே இருப்பார் இவர். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சுவாமி
பிரம்மானந்தா (ராகால் சந்திர கோஸ்) தமிழ்த்துகள்
பூரி மற்றும் புவனேஸ்வரில்
அதிக நாட்கள் வாழ்ந்தவர். ராமகிருஷ்ண மடத்தை துவங்கிய போது அதன்
ஒரே ஜனாதிபதியாக கல்கத்தாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சுவாமி விவேகானந்தரால்
ராஜா பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. ராஜா
மஹராஜ் என்று சீடர்களால் அழைக்கப்பட்டார்.
சுவாமி
யோகானந்தா( ஜோகேந்திரநாத் சவுத்ரி)
1897 மே ஒன்றாம் நாள் பலராம்
போஸின் வீட்டில் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார்.
ராமகிருஷ்ணா மிஷன் துவங்கிய போது அதன்
உப தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஈஸ்வர கோடிகள் என்று சொல்லப்படக்கூடிய
ராமகிருஷ்ணரின் ஆறு சீடர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
சுவாமி
நிரஞ்சானந்தா (நித்தியா நிரஞ்சன் கோஸ்) தமிழ்த்துகள்
தம்முடைய பதினெட்டாம் வயதில் ராமகிருஷ்ணரைச் சந்தித்தார். ராமகிருஷ்ணரின்
சிறந்த சீடர் இவர் ஆவார்.
சுவாமி
சாரதா நந்தா (சரத் சந்திர சக்கரவர்த்தி)
கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த போது
நோய்வாய்ப்பட்டதால் பரமஹம்சாரை சந்தித்தார். துறவு வாழ்க்கை மேற்கொண்டார். விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்தை தொடங்கிய போது அதன் முதல் செயலாளராகப் பொறுப்பேற்றார். உத்போதன்
என்ற இதழை நடத்தி வந்தார். 1896 இல் லண்டனில் வேதாந்த சொசைட்டி பொறுப்பேற்றார். தமிழ்த்துகள்
சுவாமி
சிவானந்தா (தாரக்நாத் கோஷல்)
1880 இல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். இலங்கையில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துகளை பரப்பினார்.
1902 இல் வாரணாசியில் தங்கினார். மகா புருஷ் மகராஜ் என்று சீடர்களால் அழைக்கப்பட்டார். 1922 முதல் 1934 வரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக
இருந்திருக்கிறார்.
சுவாமி
ராமகிருஷ்ணா நந்தா (சசி பூசன் சக்கரவர்த்தி) தமிழ்த்துகள்
1883 இல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். 1897 இல் அவரது
மறைவுக்கு பின் ராமகிருஷ்ண மடத்தை சென்னையில் ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்தார்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சுவாமி
துரியாநந்தா (ஹரிநாத் சட்டோபாத்தியாயா) தமிழ்த்துகள்
வடக்கு கொல்கத்தாவில் பிறந்தவர் இவர். சங்கரரின்
அத்வைத கருத்துகள் மேல் உள்ள ஈர்ப்பினால் துறவியானார். தன்னுடைய 17 ஆம் வயதில் ஸ்ரீ
ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். நியூயார்க்கில் வேதாந்தா சொசைட்டி பணிகளை கவனித்துக் கொண்டார். 1902 இல் இந்தியா வந்தார்.
1922 இல் வாரணாசியில் சமாதியானார். தமிழ்த்துகள்
சுவாமி
அபேதானந்தா (காளி பிரசாத் சந்திரா)
முதலில் கிருத்துவ மதத்தின் கருத்துகள் மீது பற்று
கொண்டு இருந்தார். பதஞ்சலி முனிவரின் யோகாசனங்கள்
இவரைத் துறவி ஆக்கின. 1896 இல் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். 1921 வரை நியூயார்க்
வேதாந்த சங்க பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டார்.
1924இல் டார்ஜிலிங்கில் ஸ்ரீராமகிருஷ்ண வேதாந்த மையம் நிறுவினார். அதிகமான நூல்களை எழுதிய இவர் விஸ்வபணி என்ற மாத இதழுக்கு எழுதிக் கொண்டிருந்தார். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சுவாமி
அத்புதானந்தா (ரத்து ராம் லது)
பீகாரைச் சார்ந்த இவர் அதிகம் படிக்காவிட்டாலும் ஸ்ரீ ராமகிருஷ்ண
பரமஹம்சர் மீது தீராத பற்று கொண்ட சீடர் ஆவார். தமிழ்த்துகள்
சுவாமி
நிர்மலாநந்தா (துளசி சரண் தாத்தா)
பாக் பஜாரில் பிறந்த இவர் கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களில்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிறுவி உறுதி செய்தார். பெங்களூரு மடத்தின் தலைவராக அதிக நாட்கள்
இருந்தார். கேரளாவின் ஓட்டப்பாலம் என்ற இடத்தில் மடம் அமைத்து சேவை செய்தார். தமிழ்த்துகள்
சுவாமி
திரி குணாதித்தனந்தா( சாரதா பிரசன்ன மித்ரா)
மேற்கு வங்கத்தின் நௌரா என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 1896 இல் உத்போதன்
என்ற இதழை நடத்தி வந்தார். 1902 இல் சான்
பிரான்சிஸ்கோ சென்றார். மேலை நாடுகளில் முதல் இந்து கோயில்
இவரால் 1906 இல் சாம்பிராணி கோவில் ஏற்படுத்தப்பட்டது.
சுவாமி
சுபோதானந்தா (சுபோத் சந்திர கோஷ்) தமிழ்த்துகள்
கோ மக ராஜ் என்று சீடர்களால் அழைக்கப்பட்டவர். 1884 பரமஹம்சரைச்
சந்தித்தார்
சுவாமி
விஞ்ஞானந்தா (ஹரி பிரசன்னா சாட்டர்ஜி)
பொறியாளரான இவர் 1896 இல் ஆழம் பஜாரில் மடாலய துறவியாக மாறினார்.
1937, 38 ஆண்டுகளில் ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அலகாபாத்தில் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். தமிழ்த்துகள்
சுவாமி
அத்வைதானந்தா (கோபால் சந்திர கோஸ்)
தம்முடைய 55 வது வயதில் தன் மனைவியை இழந்தவர் சந்திர போஸ்.
1884 இல் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். அவருக்குக் காவித் துணியைக் கொடுத்து
முதன் முதலில் சேவை செய்வதைத் தொடங்கி வைத்தார். கோபால்டா
என்று எல்லோரும் அவரை அழைப்பார்கள். தாய் என்பதற்கு மூத்த சகோதரர் என்பது பொருளாகும். 1885 இல் ஸ்ரீ ராமகிருஷ்ண
பரமஹம்சர் தொண்டை புற்றுநோய் காரணமாக ஷாம்பூர் மற்றும் காசி சென்று தங்கி இருந்தபோது
அவருக்கு பணிவிடைகள் செய்தார். பரனாகூர் மடாலய துறவியாக தன்
வாழ்வை தொடர்ந்தார். 1890 இல் மீரட்டில் விவேகானந்தரை சந்தித்தார். 1909 டிசம்பர் 28 இல் ஜீவசமாதி அடைந்தார். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
இராமகிருஷ்ணரின் துறவி சீடர்கள் பற்றி நாம் தெளிவாக
இங்கு அறிந்து கொண்டோம். சுவாமி சித் பவானந்தர் கோவை பகுதிகளில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிறந்த சீடராக விளங்கியவர். எனினும் இவர்
சுவாமி விவேகானந்தரின் செல்வாக்கினால் அவரின் அடி ஒற்றி பணி புரிந்தவர். உதகையில் ராமகிருஷ்ண மடத்தை தொடங்கி அதன் தலைவராக நீண்ட
நெடுங்காலம் இருந்தவர். இன்றைக்கு உலகமெங்கும் ராமகிருஷ்ண மடம் தொண்டுகளால் மக்களின்
மனதில் நிறைந்து நிற்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை. தமிழ்த்துகள்
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்
யானொன்றும் அறியேன் பராபரமே என்ற தாயுமானவரின் வரிகளைப் போற்றி வாழ்வோம்! ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்போம்!
- கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199 தமிழ்த்துகள்
மு.முத்துமுருகன்,
தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள்,
மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்