SSLC 10TH QUARTERLY EXAM ANSWER KEY VIRUDHUNAGAR DISTRICT TENTH TAMIL
விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2023
பத்தாம் வகுப்பு தமிழ்
விடைக்குறிப்பு
பகுதி 1
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க 15x1=15
1.ஆ.மணி வகை
2. இ.உழவு, ஏர், மண், மாடு
3.அ. அகவற்பா
4. ஈ.பாடல், கேட்டவர்
5.ஆ. 3,1,4,2
6.அ.கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
7.ஈ. சிற்றூர்
8.அ. அருமை + துணை
9.ஈ. மன்னன், இறைவன்
10.ஆ. தளரப் பிணைத்தால்
11.இ. பண்புத்தொகை
12.ஈ. கண முத்தையா
13.இ. பக்கவாதம்
14.ஈ. அடுக்குத் தொடர்
15.இ. இயற்கை
பகுதி 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடை அளிக்கவும் 4x2=8
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்
16. அ.உயிரினும் ஓம்பப் படுவது எது?
ஆ.எவற்றில் ஏதேனும் குறை இருப்பினும் அது இழிவாகாது?
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
17. வசன கவிதை - உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படும்.
இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
18. ஒரு நாட்டின் பண்பாடும் அறிவும் அந்நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன.
19.நாற்று, கன்று, பிள்ளை
20. இன்றைய வளரும் நாடுகளில்
அறிவியலை உருவாக்க
அரசியலை உருவாக்க
பொருளியலை உருவாக்க
சமூகவியலை உருவாக்க
இலக்கியத்தை உருவாக்க மொழிபெயர்ப்பு உதவுகிறது.
21. கட்டாய வினா
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 5x2=10
22. கலைச் சொற்கள்
அ.விண்வெளிக் கதிர்கள்
ஆ.தொன்மம்
23. வேங்கை என்னும் சொல் தனித்து நின்று வேங்கை மரம், புலி ஆகிய பொருள்களை உணர்த்துவதால் தனிமொழி.
வேம் + கை என இரு சொற்களாக நின்று வேகின்ற கை என்ற பொருளை உணர்த்துவதால் தொடர்மொழி.
24. தண்ணீரைக் குடி
அன்பு தண்ணீரைக் குடித்தான்
தயிரை உடைய குடம்
இனியா தயிரை உடைய குடத்தைத் தலையில் சுமந்து வந்தாள்
25 பால் வழுவமைதி
வாடா ராசா வாடா கண்ணா என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது பால் வழுவமைதி.
இங்கு உவப்பின் காரணமாக பெண்பால் ஆண்பால் ஆக கொள்ளப்பட்டது.
26 விடையின் வேறு பெயர்கள்
இறை
செப்பு
பதில்
27. முதல் பொருள்
நிலம் - காடு
சிறுபொழுது - மாலை
பெரும் பொழுது - கார்காலம்
கருப்பொருள்
உணவு - வரகு
28 பகுபத உறுப்பிலக்கணம்
செய்வான்
செய் - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
பகுதி 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும் 2x3=6
29. உணவாக நான்
முக்கால் பங்கு நான்
விளைவுக்கு நான்
ஐம்பூதங்களில் நான்
மழையாக நான்
பேராற்றல் நான்
இவ்வாறு நீர் தன்னைப் பற்றி பேசும்.
30. மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழுந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்ய கணினிக் கரங்கள் மீளுகின்றன.
கட்டுரை எழுதும் மென்பொருள்கள், கவிதை பாடும் எந்திரங்கள், ஆள்கள் இல்லாமலே நடத்தப்படும் வணிகக் கடைகள் என புதிது புதிதான வழிகளில் மனிதப் பணித்திறனைக் கூட்டுகின்றன இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.
அதே வேளையில் மனிதனைச் சோம்பேறியாகவும் மூளையின் சிந்தனைத் திறனுக்கு ஓய்வு கொடுப்பது போலவும் இதனால் ஏற்படும் கதிர்வீச்சுகளுக்கு நம் சந்ததியினர் பாதிப்பதாகவும் உணர்ந்தால் இன்னும் சற்றுக் கவனத்தோடு நாம் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கையாள வேண்டும்.
31.
அ.பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்கள்
மீண்டும் மீண்டும்
ஆ.தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
இ. வினைத்தொகை - பெய் மழை
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடை அளிக்கவும் 2x3=6
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்
32. தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது
கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது
தமிழ், முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
கடல், வெண் சங்கு சலஞ்சலம் பாஞ்சசன்யம் ஆகிய மூவகைச் சங்குகளைத் தருகின்றது.
தமிழ், ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களைப் பெற்றது.
கடல், மிகுதியான வணிகக்கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.
33. எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளை சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்.
சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்.
மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்.
மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்
அதன் பிறகு உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்
அவர்கள் இன்சொல் கூறி அங்கே நெய்யில் வந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்
உறவினர் போல உங்களோடு பழகுவார்கள் என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துகிறார்
34. கட்டாய வினா
நீதிவெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று
அல்லது
வெய்யோனொளி தன் மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடை அளிக்கவும் 2x3=6
35. மல்லிகைப்பூ
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
மல்லிகை ஆகிய பூ
பூப்பறித்த
இரண்டாம் வேற்றுமைத் தொகை
பூவைப் பறித்த
பூங்கொடி
உவமைத்தொகை
பூ போன்ற கொடி
பூப்பறித்த பூங்கொடி
அன்மொழித்தொகை
பூங்கொடி போன்ற பெண்
ஆடு மாடுகள்
உம்மைத்தொகை
ஆடுகளும் மாடுகளும்
தண்ணீர்த் தொட்டி
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தண்ணீரை உடைய தொட்டி
குடிநீர்
வினைத்தொகை
குடித்த நீர் குடிக்கின்ற நீர் குடிக்கும் நீர்
மணி பார்த்தாள்
இரண்டாம் வேற்றுமைத் தொகை
மணியைப் பார்த்தாள்
36. பொருள் கோள் வகை - ஆற்று நீர்ப் பொருள்கோள்
மேற்கண்ட குறட்பாவில் முயற்சி செல்வத்தை உண்டாக்கும்
முயற்சி இன்மை வறுமைக்குள் தள்ளிவிடும் என்று நேரிடையாக ஆற்றின் நீரோட்டத்தைப் போல் பொருள் கொள்ள முடிகிறது
எனவே இவ்வாறு வருவது ஆற்று நீர்ப் பொருள்கோள் ஆகும்
37 குறளில் பயின்று வரும் அணி - உவமையணி
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி
உவமேயம்
ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது
உவமை
வேல் போன்ற ஆயுதத்தைக் காட்டி வழிப்பறி செய்வது
உவம உருபு
போலும்
ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது என்பது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்
பகுதி 4
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும் 5x5=25
38 சுந்தரனாரின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்துப் பாடலையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
இறைவன் புலவர் இடைக்காடனாருக்குச் செவி சாய்த்த நிகழ்வு
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39 தரமற்ற உணவை வழங்கிய உணவு விடுதிக்குப் புகார் தெரிவித்து உரிய அலுவலருக்குக் கடிதம்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற தோழனுக்குப் பாராட்டு மடல்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
40 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
41 நூலக உறுப்பினர் படிவம்
பொருத்தமாக நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
42 அ.உன்னைப் பற்றி எழுது
பள்ளியில் நான்
வீட்டில் நான்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
அல்லது
ஆ.மொழிபெயர்ப்பு
மலர்
தேவி நீ அறையை விட்டு வெளியேறும் போது விளக்கை அணைத்து விடு
தேவி
ஆம் நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்
மலர்
நம் நாடு இரவில் நம் வீதிகளில் விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் அதிக மின்சாரத்தைச் செலவழிக்கிறது
தேவி
யாருக்குத் தெரியும் வருங்காலத்தில் நம் நாடு இரவு வெளிச்சத்திற்காக ஒரு செயற்கை நிலாவையே வானிற்கு அனுப்பலாம்
மலர்
நான் படித்திருக்கிறேன் சில நாடுகள் இவ்வகையான செயற்கைக்கோள்களை விண்ணிற்குச் செலுத்தும் நிலை வருங்காலத்தில் வரும்
தேவி
அருமையான செய்தி நாம் செயற்கை நிலவைச் செலுத்தினால் இயற்கைப் பேரிடர் மீட்பு பணிகளின் போது மின்சாரம் இல்லாத இடங்களில் அவைகளால் ஒளி தர இயலும்
பகுதி 5
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
43. செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் பொருத்தமாக எழுதியிருப்பேன் மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பல்
பொருத்தமாக விவரித்து இருந்தால் மதிப்பெண் வழங்கலாம்
44.கோபல்லபுரத்து மக்கள்
அல்லது
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் விண்வெளிப் பயணம்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
45 தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக்கலை
அல்லது
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
தலைப்பு
உட் தலைப்புகள் மேற்கோள்
மொழி நடையுடன் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம்,
விருதுநகர் மாவட்டம்.