கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 21, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கல்வியில் சிறந்த பெண்கள்

 9th Tamil model notes of lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

07-10-2024 முதல் 11-10-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

கசடற மொழிதல் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

கல்வியில் சிறந்த பெண்கள்

6.பக்கஎண்

124 - 129

7.கற்றல் விளைவுகள்

T-9021 இலக்கியங்கள் வழியாக சமூக மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து இன்றைய வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளும் திறன் பெறுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கல்வி, பெண்கள் முன்னேற்றத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளமையை உணர்ந்து பெண்கல்விக்குத் தம் பங்களிப்பை நல்குதல்.

9.நுண்திறன்கள்

சிந்தனையைத் தூண்டக்கூடிய புத்தகத்தை படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/09/5_22.html

https://tamilthugal.blogspot.com/2018/10/9_5.html

https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-unit-5.html

https://tamilthugal.blogspot.com/2022/02/9th-tamil-online-quiz-kalviyil-sirantha.html

https://tamilthugal.blogspot.com/2020/04/sanga-kaala-pen-pulavargal.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test-kalviyil.html

11.ஆயத்தப்படுத்துதல்

          பெண் கல்வியின் அவசியம் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

கல்வியில் சிறந்த பெண்கள் பற்றி அறிமுகப்படுத்துதல்.

சங்ககாலப் பெண்களை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வில்லுப்பாட்டு குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          பெண்கல்வி குறித்து விளக்குதல்.

பெண் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தலைவர்கள் குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக பெண்கல்வியின் அவசியத்தை உரைத்தல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பெண்களின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்களை மாணவர்களை அறியச் செய்தல்.

          இன்றைய பெண்களின் கல்வி குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி  மாதவி மகள் ............................

          ந.சி.வி – சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

உ.சி.வி  இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          இன்றைய சாதனைப் பெண்மணிகள் குறித்து எழுதுக.

கல்வி குறித்த பொன்மொழிகளைப் பட்டியலிடுக.

தமிழ்த்துகள்

Blog Archive