நாட்டில் எத்தனையோ
தொழில் வளர்க்கும் பரம்பரைகள் உண்டு
அதில் கைநாட்டுப் பரம்பரையை ஒழித்தது
எங்கள் கணக்காயர் (ஆசிரியர்) பரம்பரையே...
அலெக்சாண்டரின் காலடியில்
சரணடைந்தன பற்பல தேசங்கள்
அதற்கு வித்தானது
அறிவில் பழுத்த ஆசான்
அரிஸ்டாட்டிலின் பாடங்கள்...
படி படி
அந்தப் படிப்புதான்
உன் வாழ்க்கைக்குப் படியளக்கும் என்று
பிடியரிசி தருவித்து உண்பித்துக்
கல்வி தந்த விருதுநகர்
பிடியரிசிப் பள்ளிக் கூடமே
பெருந்தலைவர்க்குப் பாடமானது....
உலகில் இருவர்க்கு மட்டும்தான்
முன்னாள் விகுதி கிடையாது
ஒருவர் தியாகி
மற்றொருவர் ஆசிரியர்.....
ஆசிரியர் நடத்தும் பாடங்கள்
நம் அறியாமை இருள் கடிய
அன்னார் ஏற்றிவைத்த
திருவண்ணாமலை தீபங்கள்...
குருமார்கள் திருவடி மலர்கள்
போற்றி ! போற்றி!🙏🙏
- கவிஞர் சுரேஷ் இராமலிங்கம், காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்.
Teachers Day Wishes Kavithai