கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 08, 2024

மார்ஷல் ஏ.நேசமணி தமிழ்ப் பேச்சு கட்டுரை

 Marshal A.Nesamony Tamil speech essay pechu katturai competition 

மார்ஷல் ஏ.நேசமணி

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

நேசமணி விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 1895 ஆம் ஆண்டு சூன் 12 இல் அப்பாவு, ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். நேசமணி இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர். தமிழ்த்துகள்

திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் 1921 ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து பணியாற்றினார். தமிழ்த்துகள்

சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடினார் ஔவையார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர்சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும் (Stool) இடப்பட்டிருந்ததை, முதல் நாளன்றே காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியால் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதிக் கொடுமையை ஒழித்தார். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

அதே போன்று நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் மேல்சாதி வக்கீல்களுக்கும் கீழ்சாதி வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு, அனைத்து வக்கீல்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். தமிழ்த்துகள்

பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி சட்டசபைக்கும் சென்றார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தான் இறக்கும் வரை பணியாற்றினார். தமிழ்த்துகள்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்குப் பெரும்பாலானோர் தமிழ்மொழி பேசுபவர்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். இதற்கான போராட்டம் வெடித்தபோது, அதை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. தமிழ்த்துகள்

நேசமணி தலைமையில் இந்தப் போராட்டம் எழுச்சி பெற்றது. நீண்ட போராட்டத்துக்குப் பின், 1956 நவம்பர் 1 இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றது. இந்தியாவின் தென்எல்லைதான் இந்தக் குமரி மாவட்டம். தமிழ்த்துகள்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது குமரிமாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. ஆனால் இந்த மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. இதனால் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாகக் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தமிழகத்தின் தென் எல்லையாகக் குமரிமாவட்டம் மாறியது. நேசமணி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பின்பு தமிழக காங்கிரசின் தலைவராகவும் ஆனார். பின்னர் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். தமிழ்த்துகள்

மக்கள் பணியே மகேசன் பணி என்று செயல்பட்ட இவரை மக்கள் குமரித் தந்தை என்று சிறப்பிக்கின்றனர். 1968 சூன் 1 அன்று தம் 72 ஆம் அகவையில் அயராது உழைத்த மார்ஷல் நேசமணி நம் மண்ணைவிட்டு மறைந்து மனதில் நிறைந்தார்.  தமிழ்த்துகள்

 

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive