கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, July 20, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை 29

  பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

29-07-2024 முதல் 02-08-2024

2.அலகு

12

3.பாடத்தலைப்பு

முதல் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகள்

4.திருப்புதல் வினாக்கள்

குறிப்பு வரைக – வசன கவிதை.                             தமிழ்த்துகள்

வேங்கை என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

நச்சப் படாதவன்’ செல்வம் - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

எவற்றின் வித்து முத்து எனப்படுகிறது?                  தமிழ்த்துகள்

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி, விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

கலைச்சொல் தருக  

அ.Homograph,                    ஆ.Regional literature

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ – வினவுவது ஏன்?

’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.               தமிழ்த்துகள்

உம்மைத்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

 கோலொடு நின்றான் இரவு      - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.  

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.                

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன? தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive