கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 12, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-06-2025. வியாழன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

12-06-2025. வியாழன்.

திருக்குறள் :

பால்: அறத்துப் பால் ; 

இயல் : பாயிரம் ;

அதிகாரம்: கடவுள் வாழ்த்து ; 

குறள் எண் : 006.

குறள் :

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.

விளக்கம் :

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

பழமொழி :

உள்ளங்கை நெல்லிக்கனி போல.

As clear as a bell.

இரண்டொழுக்க பண்புகள்:

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

பொன்மொழி :

* பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே.

உண்மையைச் சொல்லி மாட்டிக் கொள்.

ஏனென்றால் பொய் வாழ விடாது. உண்மை சாக விடாது.

விவேகானந்தர்.

பொது அறிவு :

01. இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார்?

திரு.ஞானேஷ்குமார் Thiru. Gyaneshkumar

02. முதன் முதலில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற நகரம் எது?

கோலாலம்பூர் (சிங்கப்பூர்) Kualalumpur (Singapore)

English words & Tips:

challenge

சவால்

↓ arrange

ஏற்பாடு

Grammar Tips:

Common rule to use 'K' or' ck' in the end of a word

⇒'k' is used after a consonant

Ex: pink, think, blink, work and etc

→'ck' is used after a short vowel sound

Frock,click, brick, duck neck, back and etc

அறிவியல் களஞ்சியம் :

நாம் கண்களை அனிச்சையாக சிமிட்டுவது, கண்களை ஈரமாக வைத்துக் கொள்வதற்கும், தூசுகளை நீக்குவதற்கும் உதவுகிறது என்பதை அறிவோம். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், விழித்திரையில் விழும் ஒளிகளைக் கண் சிமிட்டுதல் முறைப்படுத்துகிறது என்றும், இதன் வாயிலாக அதிகமான நேரம் ஒரு பொருளைக் கவனித்துப் பார்க்க முடிகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜூன் 12 - குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி Labour) கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் உருவாக்கப்பட்டது. வின் தூண்டப்பட்டு 138 மற்றும் இந்த நாள்

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

நீதிக்கதை

-பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு...அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது. கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால் தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை... ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும். கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது... அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு.. ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை.. அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள். ஆனால் நான் அப்படியில்லை.. உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்...என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது. நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு கஞ்சியைக் குடித்தது. அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

இன்றைய செய்திகள்

12.06.2025

* RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* 2025 இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1.46 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* மனிதர்களின் இதய ரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்புகளை சரி செய்ய சிறிய அளவு ரோபோக்களை அமெரிக்காவை சேர்ந்த ட்ரெக்செல் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

* ஜூன் 13 முதல் 16 வரை தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

விளையாட்டுச் செய்திகள்

*ஹாக்கி -FIH புரோ லீக்கில் இந்தியா Vs அர்ஜென்டினா.

AFC ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கிடம் 0-1 என்ற அதிர்ச்சி தோல்வியை இந்தியா சந்தித்தது.

Today's Headlines 12.06.2025

The Madras High Court has directed the Union Government to allocate the funds required for 25% reservation in private schools under the RTE Act to the Tamil Nadu.

India's population is estimated to reach 1.46 billion by the end of 2025

Medical scientists at Drexel University in the US have invented small robots to repair blockages in human heart blood vessels.

Meteorological Department announced Heavy rain in many districts of Tamil Nadu from June 13 to 16

SPORTS NEWS

Hockey - India vs Argentina in FIH Pro League

India suffered a shock 0-1 defeat to Hong Kong in the AFC Asian Cup qualifiers.

தமிழ்த்துகள்

Blog Archive