கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, June 13, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-06-2025. வெள்ளிக் கிழமை

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

13-06-2025. வெள்ளிக் கிழமை 

திருக்குறள் :

பால்: அறத்துப் பால் ; 

இயல் : பாயிரம் ;

அதிகாரம்: கடவுள் வாழ்த்து ; 

குறள் எண் : 010.

குறள் :

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

விளக்கம் :

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

பழமொழி :

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

Beat after beat will make even a stone move.

இரண்டொழுக்க பண்புகள்:

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

பொன்மொழி :

நோய் இல்லை என்று மனதில் உறுதி செய் ஏனென்றால் மனம்

போல உடல் அமையும். - மகாகவி பாரதியார்

பொது அறிவு :

01.உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?

ஆண்டிஸ் மலைத்தொடர் Andes mountain range

02. தமிழ்நாட்டில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?

தேனி மாவட்டம் - Theni district

English words & Tips :

 plan

திட்டமிடு

want

வேண்டும்

Grammar Tips :

→ Subject-Verb Agreement:

→ Ensure your verbs match your subject in number (singular or plural). For example, "The cat runs," not "The cat run".

⇒ Avoid Double Negatives: Phrases like "I don't have no money" are incorrect. Use a single negative.

அறிவியல் களஞ்சியம் :

மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.

நீதிக்கதை

தவளை கற்று தரும் பாடம்

ஒரு ஊரில் நிறைய தவளைகள் இருந்தன. சிறிய, பெரிய தவளைகளெல்லாம் ஒரு பந்தயம் வைக்கலாம் என்று முடிவு செய்தன. அது என்ன போட்டியென்றால் ஓட்டப்பந்தய போட்டி ஆகும். ஓட்டப் பந்தயத்திற்கு எல்லா தவளைகளும் தயாராகி வந்தன. தவளைகளின் ரன்னிங் ரேஸ் போட்டியை பார்ப்பதற்காகவே மக்கள் ஆர்வமாக கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் அருகிலுள்ள டவரை தொட வேண்டும். இது தான் அந்த போட்டியோடு விதி ஆகும்.

போட்டி தொடங்கியது, போட்டியை காண வந்த அனைவரும் சொன்னார்கள். இது ஒரு சுலபமான போட்டியே கிடையாது. இந்தப் போட்டி ஒரு கடுமையான போட்டி ஆகும். முதலில் இந்த தவளைகளில் எந்த ஒரு தவளையும் கோபுர உச்சியை அடையவே முடியாது. இந்த தவளைகளில் ஒன்று கூட கோபுர உச்சியை தொடவில்லை என்று பேசிக் கொண்டே இருந்தார்கள்.

மக்கள் ஒவ்வொருவரும் பேசும் பேச்சைக் கேட்ட தவளைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தயக்கம் ஏற்பட்டது. நம்மால் இந்த போட்டியில் ஜெயிக்கவே முடியாது போன்று இருக்கிறதே என்று எண்ணி அந்த போட்டியில் இருந்து பின் வாங்க முடிவு செய்தன. சில தவளைகள் இந்த போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தன. அது மட்டுமில்லாமல் அந்த கோபுர உச்சியை தொடப் போவதில்லை என்று பேசிக் கொண்டே இருந்தார்கள்.

பல தவளைகளும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டன. ஆனால் ஒரே ஒரு தவளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டிருந்தது. கோபுர உச்சியைத் தொடுவது என்று நினைத்தது. அந்த ஒரு தவளை மட்டும் கோபுர உச்சியை நோக்கி மெல்ல மெல்ல சென்றுக் கொண்டே இருந்தது. ஒரு சில வினாடிகளில் அந்த குட்டி தவளை ஆனது டவரை அடைந்து வெற்றியும் பெற்றது. அனைவரும் வியந்து போய் பாராட்டினார்கள்!. குட்டி தவளையால் மட்டும் எப்படி டவரை அடைந்து வெற்றி பெற முடிந்தது. உன்னால் மட்டும் எப்படி அந்த டவரை தொட முடிந்தது. அந்த தவளையை அழைத்து கேட்டார்கள்.

வெற்றி அடைந்த அந்த தவளையானது பெறுவதற்காக மேடையின் மீது ஏறியது. அப்போது தான் அங்கே இருந்த மக்களுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அந்த டவரை தொட்டு வெற்றியடைந்த தவளைக்கு காது கேட்காது. மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியாது என்று தெரிந்தது. அனைவரும் குட்டி தவளையின் திறமையை கண்டு புகழ்ந்தார்கள். பாராட்டி பரிசுயும் கொடுத்தார்கள். அந்த தவளையும் மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றது.

இன்றைய செய்திகள் 13.06.2025

* தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்: ரயில்வே அறிவிப்பு.

* போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

* தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

* அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு. இதில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் பலி.

விளையாட்டுச் செய்திகள்.

*FIH புரோ லீக் ஹாக்கியில் ஐரோப்பிய லெக்கில் இந்தியா அர்ஜென்டினாவிடம் 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

*தேசிய முதுநிலை விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார் 70 வயதான அசாம் தடகள வீரர்.

Today's Headlines - 13.06.2025

From 1st July onwards Aadhaar is mandatory for Tatkal ticket booking Indian Railways' announcement

Tamil Nadu Law and Order Additional Director Davidson Devasirvadham has said that strict action will be taken against police personnel who assist in illegal activities including drug trafficking and cannabis smuggling.

The Tamil Nadu government has started the process of enumerating the workers from northern states who are living in Tamil Nadu.

Tata Group announces Rs 1 crore compensation to families of those died in Ahmedabad Air India plane crash.

SPORTS NEWS

India lost 3-4 to Argentina in the European leg of the FIH Pro League hockey.

70-year-old Assamese athlete won four gold medals at the National Senior Games

தமிழ்த்துகள்

Blog Archive