8th tamil model notes of lesson
lesson plan 2025 june 16
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
தமிழ் இன்பம் –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
தமிழ் வரிவடிவ
வளர்ச்சி
6.பக்கஎண்
8 - 12
7.கற்றல் விளைவுகள்
T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில்
எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில்
ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)
8.திறன்கள்
தமிழ்
எழுத்துகளின் வளர்ச்சி நிலைகளை அறியும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
தமிழ்
எழுத்துகளின் வரிவடிவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/07/8-8th-tamil-worksheet-with-pdf-tamil.html
https://tamilthugal.blogspot.com/2021/04/1-tamil-varivadiva-valarchi-8th-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/06/1-8th-tamil-mindmap-unit-1-tamil.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-varivadiva-valarchi.html
11.ஆயத்தப்படுத்துதல்
எழுத்துகளின்
தோற்றம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
பெரியாரைப் பற்றி மாணவர்களுக்கு
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஓவிய எழுத்து, ஒலி
எழுத்து நிலை, அச்சுக்கலை, வட்டெழுத்து, தமிழெழுத்து, கண்ணெழுத்து, துணைக்கால்,
இணைக்கொம்பு, புதிய வரிவடிவம் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.
தந்தை பெரியாரின் எழுத்துச்
சீர்திருத்தம் குறித்தும், கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழி தமிழ் என்பது
குறித்தும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ்மொழியின்
பழைய வரிவடிவச் சொற்களை எழுதிவரச் செய்தல்.
கல்வெட்டுச் செய்திகளை அறிந்து வரல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – தமிழ் எழுத்துச்
சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் .........................
ந.சி.வி – ஓவிய எழுத்து
என்றால் என்ன?
உ.சி.வி – தமிழ் மொழியின்
வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய பணி என்ன?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பெரியார் பற்றிய குறிப்புகளை அறிதல்.
தமிழின் கல்வெட்டு எழுத்துகளைத்
தொகுத்தல்.


